"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, November 18, 2025

சித்தன் அருள் - 1991 - அமாவாசை முன்னோர் வழிபாடு ரகசியம்

                                                          இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

                                                                 இறைவா..அனைத்தும் நீயே..

                                                                     சர்வம் சிவார்ப்பணம்...





#  அமாவாசை முன்னோர் வழிபாடு ரகசியம் 
==========================================================

குருநாதர் :-  அம்மையே, அப்பனே, அனைவருக்கும் எதை என்று புரிய, நிச்சயம் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆன்மாக்களை, நிச்சயம் முழுமையாக எதை என்று அறிய, பின் ஆற்று தன்னில் விட வேண்டும். ஆனால் பின் ஒரு பிறவி, நிச்சயம் முடியாது. 

அறிந்தும் எதை என் நிச்சயம் இவை தன் விளக்க, அறிந்தும் கூட, அமாவாசையிலும் கூட, நிச்சயம் உடம்பிலிருந்து எதை என்று அறிய, எவை என்று புரிய, சிறிது சிறிது பின் இலகுவாகவே இருக்கும். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-  (  ஆன்ம துகள்கள், முன்னோர்கள், மற்றும் அமாவாசையின் சக்தி தொடர்பான ஆன்மீக விளக்கம் - ஒவ்வொருவரின் உடம்பிலும் சின்ன சின்ன ஆன்ம துகள்கள் ஒட்டி இருக்கின்றன. அவை முன்னோர்களின் சாபங்கள் அல்லது பதிவுகள். இந்த துகள்கள் மூளையில் பதிந்து, நம்மை பாதிக்கின்றன. அதனால் துன்பங்கள் தீராமல் இருக்கலாம். முன்னோர்கள் ஆன்மா துகளினை இதை ஆத்துல (நீரில்) விட வேண்டும். அதற்காகவே தர்ப்பணம் செய்ய வேண்டும்.பெரும்பாலோர் தர்ப்பணத்தை சரியாக செய்யவில்லை என்பதால், துகள்கள். துன்பங்களும் நீங்கவில்லை. அமாவாசை நாளில், சந்திரனின் சக்தி மாற்றம் ஏற்படுகிறது. அந்த நாளில், நம் உடம்பில் உள்ள முன்னோர்  துகள்களின் பசைத்தன்மை குறையும், அதனால் அவற்றை எளிதாக நீக்க முடியும். மற்ற நாட்களில் அவை பசை போல ஒட்டி இருக்கும், நீக்க இயலாது. முன்னோர்களின் ஆன்ம துகள்கள் நம்மில் பதிந்து, துன்பங்களை ஏற்படுத்தும். அவற்றை நீக்க, தர்ப்பணம் மற்றும் அமாவாசை நாளின் சக்தியை சரியாக பயன்படுத்த வேண்டும். )

குருநாதர் :- அவ் நேரத்தில் நிச்சயம் நதிகளுக்கும் சென்று எதை என்று புரிய, இன்னும் அதாவது கடல் நீர் அருகில் பின் சென்று, நிச்சயம் அறிந்தும் எவை என்று அறிய, பின் பல தூப எண்ணெயைகள் கூட அறிந்தும் கூட, 

பல பல வித்தியாசமான பழங்களை (பூசணிக்காய் , பாகற்காய், வாழைக்காய்)  நிச்சயம் எவ்வாறாக கீறி, அதாவது எதை என்று புரிய, அப்படியே “””குழுவி””””  போல் எதை என்று அறிந்து கூட, அதில் பின் எண்ணெயை இட்டு, நிச்சயம் தீபத்தை ஏற்றி, சிறு சில சில வழியில் சில மூலிகைகளை இட்டு, அதை அப்படியே நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூட அனுப்ப வேண்டும்,  சொல்வேன்.

(குழுவி  = அம்மியில் பயன்படுத்தப்படும் உருளை வடிவ கல் கருவி)

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :- ( அமாவாசை நாளில், பசைத்தன்மை குறைவதால், உடம்பில் ஒட்டியிருக்கும் ஆன்ம துகள்களை நீக்க இது சிறந்த நாள். அந்த நாளில், ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று, எண்ணெய், விளக்கு, மூலிகைகள் கொண்டு ஒரு ஆன்மீக சடங்கு செய்ய வேண்டும். இந்த சடங்கில், பூசணிக்காய், பாகற்காய், வாழைக்காய்  முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் ஆன்ம துகள்களை ஈர்க்கும் சக்தி அதிகம். மந்திரங்கள் மூலம், அந்த துகள்களை உடம்பிலிருந்து பிரிக்க முடியும். இந்த செயல்முறை சரியாக செய்யப்படும்போது, துன்பங்கள் நீங்கி, ஆன்ம சுத்திகரிப்பு ஏற்படும். வாழ்வு நலமாகும்)

குருநாதர் :- நிச்சயம் இதற்கு தகுந்தார் போல், பின் அனைத்தும் ஈர்க்கும் திறன், பூசணி தன்னில் கூட உள்ளது. அவைதன் அனைத்தும் எதை என்று அறிய  எடுத்து, அதில் எண்ணெய் இட்டு, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய, பின் அப்படியே, பின் எவை என்று கூற, அறிந்து கூட, பின். 

அறிந்தும் புரிந்தும், அப்படி நிச்சயம் தன்னில் கூட பிடுங்கிச் செல்லும் என்பேன். ஒவ்வொன்றாக பின் ஈர்ப்பு விசயனாக. 

(பூசணிக்காய் அதன் ஈர்ப்பு விசையின் தன்மையினால்,  உங்கள் உடம்பில் உள்ள உங்கள் முன்னோர்களின் ஆன்ம துகள்களை அதி வேகமாக பிடுங்கி , தன்னுள் வைத்துக்கொள்ளும். அடியவர்கள் அவசியம் செய்க. )

அறிந்தும் இவை (அவசியம் செய்ய) வேண்டும். ஏனென்றால் ஒரே நேரத்தில் அனைத்தும் விலக, எதை என்று புரிய.

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :- (  
(1) பூசணிக்காய் வழிபாடு மற்றும் அதன் ஆழமான அர்த்தம் - பூசணிக்காயின் உள்ளே உள்ள சதை அகற்றப்பட்டு, எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி, அதை ஆற்றில் விட வேண்டும். இது முன்னோர்களின் ஆன்ம துகள்களை நம் உடலில் இருந்து பிரித்து வெளியேற்றும். இதனால் மிகுந்த நன்மை உண்டாகும்.  

(2) நம் உடலில் உள்ள முன்னோர்கள் ஆன்மா துகள்களின் விடுதலை - ஒவ்வொரு அமாவாசையிலும்,  இந்த பூசணிக்காய் வழிபாடு மூலம், உங்கள் உடம்பில் ஒட்டிக் கொண்டிருக்கும்,  உங்கள் முன்னோர் ஆன்மா துகள் போன்றவை வேகமாக பிடுங்கி விட்டு போகும். இது வெறும் சும்மா ஒரு சடங்கல்ல; மிகவும் ஆழமான, அதி ரகசியமான,  ஆன்மீக ரீதியாக ஒரு பரிசுத்திகரிப்பு செயல். 

(3) ஒரே பிறவியில் பாவங்களை கழிக்க முடியுமா? சாதாரண வழிபாடுகள் மூலம் ஒரே பிறவியில் பாவங்களை முழுமையாக கழிக்க முடியாது. ஆயிரக்கணக்கான பிறவிகளில் தான் அது சாத்தியம். ஆனால் சித்தர்கள் வழிகாட்டும் சில விசேஷமான முறைகள், குறிப்பாக அமாவாசை நாளில் செய்யப்படும் பூசணிக்காய் தீப வழிபாடு, இந்த பாவங்களை விரைவில் கழிக்க வழிவகுக்கும்.)
குருநாதர் :-  அறிந்தும் அனைவரும் சொல்லுங்கள், இவைதன் ஒருத்தருக்கு தெரிவித்தால், எதை என்று அறிய, நீங்களும் பின் அதாவது இறைவன் கூட சுயநலம் ஆகிவிட்டான் என்று சொல்வீர்கள். இதனால் அனைவருக்கும் தெரிவித்து விட்டால்….

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :- ( ஒரு அடியாருக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் வாக்கு சொன்னால், மற்றவர்கள் வருத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால், அந்த உண்மையை யாருக்கும் தனியாகச் சொல்லாமல், எல்லா பேருக்கும் பொதுவாகக் கூட்டமாக அறிவிக்கிறார் குருநாதர். இது ஒருவருக்கே உரித்தான வழிகாட்டல் அல்ல; அனைவரும் அவசியம் செய்ய வேண்டிய வழிமுறை என அவர் வலியுறுத்துகிறார். “நீங்க செய்யணும்” என்று அனைவரையும் ஒரே மாதிரியாக வலியுறுத்துகிறார். இது வழிகாட்டலில் சமத்துவத்தையும், குழுவாக செயல்பட வேண்டியதையும் வலியுறுத்தும் ஒரு பார்வையாக கொள்ளலாம்.)





அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று 
வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்

No comments:

Post a Comment