இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நம் குருநாதர் அகத்திய பெருமான்....பாதம் பணிந்து பஞ்சமி திதி பதிவாக இன்று சமர்ப்பிக்கின்றோம். காசியில் உரைத்த வாக்கில்...என் பக்தர்கள் அனைவரும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என நமக்கு கூறியுள்ளார்...இதில் நாளை பஞ்சமி திதி வருகின்றது . இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய வழிபாட்டை இனி காண உள்ளோம் .
அப்பனே
பின்பு அதாவது அறிந்தும் கூட பஞ்சமி (திதி )தன்னில் கூட அப்பனே நல்ல
முறைகளாகவே அப்பனே பின் ஈசனை வணங்கினால்... அனைத்து தோஷங்களையும் கூட அப்பன
நீக்கும் அப்பா
அப்பனே இதனை நீங்கள் அனைவரும் செய்யலாம் அனைவருக்கும் சொல்லலாம் என்பேன் அப்பனே
என் பக்தர்கள் அனைவரும் இதை கடைப்பிடிக்க வேண்டும் என்பேன் அப்பனே.
அப்பனே
இதனை தொடர்ந்து செய்து கொண்டே வரவேண்டும் என்பேன். அப்பனே இவையெல்லாம்
செய்கின்ற பொழுது சில தடை தாமதங்கள் நீங்கும் அப்பா பின்பு தான்
அனைவருக்குமே வெற்றி கிடைக்கும் அப்பா.
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
மீண்டும் சந்திப்போம்.














No comments:
Post a Comment