இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் .... இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அன்புடன்
அகத்திய மாமுனிவர் அருளால் 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த
சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 9 ( நிறைவு பகுதி )
நாள் : 08/03/2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : ராஜா ராணி திருமண மண்டபம், திருவண்ணாமலை
நேரலை :- https://www.youtube.com/live/AzhIXYoqaoM
=================================
# அன்புடன் போகர் சித்தர் வாக்கு
=================================
போகர் சித்தர் வாக்கு நேரலை :-
https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=9h48m44s
============================
#
14 சக்திவாய்ந்த திருத்தலங்களில் இருந்து, அடியவர்கள் எடுத்தது வந்த
விபூதி மற்றும் பிரசாதங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அன்புடன்
போகர் சித்தர் வாக்குகள் அருளினார்கள்
============================
============================
# நாள்: இந்த வழிபாட்டை ஒரு ஞாயிற்றுக்கிழமை (சூரியன் நாளில்) தொடங்குவது சிறப்பு.
============================
போகர் சித்தர்:- இவைத்தன் அறிவித்து நாளிலே இதனை ஒரு சூரியன் நாளில் தொடங்க நன்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ஞாயிற்றுக்கிழமை தொடங்கணும்.
===========================
# அன்பு அடியவர்கள் வெற்றி வாகை சூட, உங்கள் வீட்டுக்கு வரும் வரும் வெற்றிவேல், வீரவேல் ……
===========================
# முருகப்பெருமானை வேல் வடிவில், அன்புடன் உங்கள் இல்லம் அழைக்கும் எளிய வழி
===========================
#
வேல் வாங்குதல்: சிறிய அளவிலான வேல் ஒன்றை வாங்கி, அதனை ஒரு முருகர்
கோயிலுக்கு (குறிப்பாக ஈசன் சன்னதி உள்ள ஆலயம்) எடுத்துச் செல்ல வேண்டும்.
===========================
#
சங்கல்பம்: அந்த ஆலயத்தில் வைத்து, முருகப் பெருமானே தனது இல்லத்திற்கு
வருவதாக மனதார எண்ணி, அந்த வேலை வீட்டிற்கு எடுத்து வர வேண்டும்.
===========================
போகர்
சித்தர்:- இவைத்தன் எப்படியோ அறிந்தும் முருகன் பயன்படுத்திய வேலை -
தான், தான் சூழ்நிலைக்கு ஏற்ப வாங்கி, இவை எத்தனை, ஏது என்று அறிய, இதனை
வாங்கி ஒரு திருத்தலத்தில் வைத்து, அதை அழகாக முருகனே உங்கள் இல்லத்திற்கு
பின் வந்ததாக எண்ணி இல்லத்தில் வையுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- இது என்ன சொல்றார் தெரியுங்களா?
அடியவர் :- ஒரு வேல் வாங்கணும்.
சுவடி
ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (ஒரு சின்ன வேல் வாங்கிக்கோங்க.
உங்களால முடிஞ்ச அளவுக்கு அந்த வேலை வாங்கி, நேரா ஒரு முருகர் கோயிலுக்கு
எடுத்துட்டுப் போங்க. அங்க முருகப்பெருமான் பாதத்தில் அந்த வேலை வச்சு
மனசார வேண்டிக்கோங்க. அப்புறம் அந்த வேலை அங்கிருந்து வீட்டுக்கு
எடுத்துட்டு வரும்போது, முருகனே உங்க வீட்டுக்கு வேல் வடிவத்துல வர்றதா
நினைச்சு… அன்போடு கூட்டிட்டு வாங்க.)
=======================================
# நீங்கள் வேல் வைத்து வழிபட உள்ள ஆலயத்தில் , ஆதி ஈசனுக்கும் ஆலயம் / சன்னதி இருக்க வேண்டும்.
========================================
போகர் சித்தர்:- இவை அங்கே ஈசனும் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்பா கூட இருக்கிற முருகன். அப்ப அந்த இடத்துல ஈசனும் இருக்கணும்ன்றார்.
=================================
# ஞாயிற்றுக்கிழமை வழிபட்டு எடுத்து வரவேண்டும்
=================================
போகர் சித்தர்:- இவைத்தன் அனைத்தும், இதை எதை அறிவித்த நாளில், பின் இதைத்தன் இல்லத்திற்கு எடுத்து வர.
சுவடி
ஓதும் மைந்தன் :- அப்ப அந்த முருகன் ஈசன் இருக்கிற ஆலயத்துக்கு போயிட்டு,
அங்க முருகன் இருப்பார். அங்க வச்சிட்டு அந்த வேல் என்ன பண்ணனும்?
உங்களுக்கு தகுந்த மாதிரி வீட்ல எடுத்துட்டு வரணும்ன்றார்.
===========================
# கூட்டுப்பிரார்தனையில் இருந்து எடுத்து வந்த வீபூதியை ( 14 ஆலயங்களின் வீபூதி) , மண் அட்டையில் நிரப்பவேண்டும்
===========================
# பீடம்: மண்ணால் செய்யப்பட்ட ஒரு அகல் அல்லது பாத்திரத்தை (மண்ணட்டை) பயன்படுத்த வேண்டும்.
===========================
போகர் சித்தர்:- இவைத்தன் இதற்கு இவ் வீபூதியை சரியாக பயன்படுத்த மண் அட்டையை,
சுவடி ஓதும் மைந்தன் :- மண்ணட்டைன்னா என்னதுயா? இந்த வீபூதி எதுல போடணும்னா…. மண்ணுங்கயா,,,,
அடியவர் :- மண்ணுல செஞ்ச மண்ணட்டை, மண் பாத்திரம்,
சுவடி ஓதும் மைந்தன் :- மண் கலசம்ல போடணும். ஓகேங்களா?
============================
#
திருநீறு (விபூதி) இட்ட அந்த மண் பாத்திரத்தில், பச்சை கற்பூரம் மற்றும்
ஏலக்காய் ஆகியவற்றை நன்கு அரைத்து, அந்த விபூதியின் மீது சிறிதளவு தூவ
வேண்டும்.
=============================
போகர்
சித்தர்:- இதை எவை அறிந்து எங்கு ஏது என்று அறிய, அதற்கு தகுந்தார் போலே
நிச்சயம் பின் இதைத்தன் இங்கே இட்டு நல் பச்சை கற்பூரத்தையும் ஏலக்காயும்,
நன்கு பின் அரைத்து சிறிதளவு மேலே தூவி விட.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ஐயா, இது எப்படிங்க எக்ஸ்பிளைன் பண்றது எல்லாம்?
சுவடி ஓதும் மைந்தன் :- சின்ன அகல்ல எடுத்துக்கணும்.
அடியவர் :- ம்
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த திருநீர் அதுல போடணும்.
அடியவர் :- ம்
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த திருநீர்ல, ஏலக்காய், பச்சை கற்பூரம் அரைச்சு… லைட்டா தூவி விடணும்.
==============================
# இந்த விபூதி கலவையின் நடுவில் நீங்கள் கொண்டு வந்த சிறிய வேல் அதனை நடவேண்டும்.
=================================
போகர் சித்தர்:- இதன் நடுவே நிச்சயம் இதைத்தன் அறிவித்து. அங்கேயே பின் நடுக, பின் வேலை.
சுவடி
ஓதும் மைந்தன் :- சின்ன வேலு வாங்கிக்கோங்க. நீங்க என்ன பண்ணனும்? அதுக்கு
நட்டணும் வேலை. இப்ப விபூதி இதெல்லாம் கொடுக்கிறாங்க இல்ல? வந்து… அது
சின்ன வேல் ,
அடியவர் :- சின்ன வேல் அதுல நடுவுல வச்சுக்கணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க நட்டணும்.
===============================
# வேலுக்கு நேராக முன்னால் ஒரு சிறிய அகல் விளக்கை ஏற்ற வேண்டும்
==================================
போகர் சித்தர்:- இதன் அருகே நேராக தீபம்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதுக்கு நேரா…
அடியவர்
:- ஒரு சின்ன அகல் விளக்கு, அகல் விளக்குல விபூதி, பச்சை கற்பூரம்,
ஏலக்காய். வேலை அதுல நிறுத்திருங்க. அதுக்கு முன்னாடி ஒரு சின்ன அகல்
விளக்கு வைக்கணும்.
==================================
# மற்றொரு மண் குவளை அல்லது அகலில் நீரை நிரப்பி, அதில் ஒரு ருத்ராட்சத்தைப் போட வேண்டும்
=====================================
போகர்
சித்தர்:- இவைத்தன் அங்கே வைத்து இதை என்று அறிய ஆனாலும் இன்னொரு மண்,
அதாவது குவளையை எடுத்து இதில் தன் சரியாக நீரை எடுத்திட்டு, ஒரு ருத்ராட்சை
இட வேண்டும்.
அடியவர் :- இன்னொரு மண் குவளை எடுத்துட்டு, அதுல நீரை விட்டு, அதுல வந்து ருத்ராட்சத்தை இடணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த ருத்ராட்சை.. நீங்க எதுல விடணும்?
அடியவர் :- தண்ணில.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து இன்னொரு ஐயா,
அடியவர் :- இன்னொரு மண் குவளை,
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னொரு அகல்ல… நீர்ல போட்டு அந்த ருத்ராட்சை என்ன பண்ணனும்? தனியா போடணும். ஓகேங்களா?
============================
# இந்த ருத்ராட்சம் இட்ட நீர்க் குவளைக்கு நேராகவும் ஒரு தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும்.
============================
போகர் சித்தர்:- இதைத்தன் அதற்கும் ஒரு தீபம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதுக்கு தனியா இதுக்கு நேரா ஒரு தீபம் ஏத்துனீங்களா? அடுத்து
அடியவர் :- அதற்கு ஒரு தீபம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதுக்கு ஒரு நேரா தீபம் ஏத்தணும்.
===================================
#
அகத்திய பெருமான் உரைத்த அந்த மூலிகை பொடி. அதாவது பச்சை கற்பூரம் ,
நவதானியங்கள் , கிராம்பு , ஏலக்காய் கலந்த மூலிகை பொடி. 08.03.2026
கூட்டுப்பிரார்தனையில் கொடுத்த மூலிகை பொடி. இந்த மூலிகை பொடி உங்கள்
உள்ளங்கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
===================================
போகர் சித்தர்:- இவைத்தன் தூப அறிந்தும், இதைத்தன் இவ் மணல்களை அறிந்தும் பின் உள்ளங்கையில் வைத்திட வேண்டும்.
சுவடி
ஓதும் மைந்தன் :- இந்த மணல்னா என்ன சொல்றார் தெரியுங்களா? இந்த மூலிகை
இருக்குல்ல, உங்களுக்கு மூலிகை கொடுப்பாங்க. அந்த மூலிகை, தீபத்தில், என்ன
பண்ணனும்? உள்ளங்கையில் வச்சுக்கணும்.
===================================
#
உள்ளங்கையில் மூலிகை பொடி அதை வைத்துக் கொண்டே, மாணிக்கவாசகர் பாடல் பெற்ற
ஸ்தலங்களை நினைத்து பாடல்களைப் பாட வேண்டும். அந்த கோவிலிலேயே இருப்பது
போல் மனதில் முழுமையாக எண்ணிக் கொள்ள வேண்டும்.
===================================
#
மாணிக்கவாசகர் திருவாசக பாடல் பெற்ற ஸ்தலங்கள் - திருப்பெருந்துறை
(ஆவுடையார்கோவில்) , தில்லை (சிதம்பரம்) , உத்தரகோசமங்கை , திருவண்ணாமலை ,
மதுரை (திருஆலவாய்) , திருவாதவூர்.
======================================
#
திருச்செந்தூர் முருகப்பெருமானை நினைத்து உருகி, கந்த சஷ்டி கவசம்,
திருப்புகழ் போன்ற பாடல்களைப் பாடலாம். திருச்செந்தூர் கோவிலிலேயே
இருப்பது போல் மனதில் முழுமையாக எண்ணிக் கொள்ள வேண்டும்.
======================================
# உங்கள் வேண்டுதல்களை பிரார்த்தனையாக வையுங்கள்
======================================
போகர்
சித்தர்:- இவை வைத்துக்கொள்ள, வைத்துக்கொள்ள இன்னும், அதாவது
மாணிக்கவாசகன் இன்னும் பின் எதை புரிந்து இதை அறிவித்து பல பாடல் பெற்ற
ஸ்தலங்களை பின் அங்கே இருக்குமாறு பாடல்களை பாடி. அதேபோல் பின்
திருச்செந்தூர், திருச்செந்தூரானையும் நினைத்து, உருகி என்ன தேவை என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்படி வச்சுக்கணுங்க ஐயா. வச்சுக்கிட்டு மாணிக்கவாசகர் பாடல் பெற்ற ஸ்தலங்கள் இருக்குல்ல…
அடியவர் :- அவர் போய் பாடின இடங்கள், அந்த பாடல்களை எடுத்து படிக்கணும்.
அடியவர் 5 :- அங்க இருக்கிற மாதிரி நினைச்சு ,
அடியவர் :- அங்க இருக்கிற மாதிரி நினைச்சு படிக்கணும்.
அடியவர் :- திருச்செந்தூரையும் நீங்க நினைச்சு படிக்கணும்.
அடியவர் :- இங்க வந்து உள்ளங்கையில வச்சுக்கணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அது உள்ளங்கையில வச்சுக்கணும்.
அடியவர் :- கையில வச்சுக்கிட்டே இதெல்லாம் பண்ணனும்.
சுவடி
ஓதும் மைந்தன் :- அதே மாதிரி திருச்செந்தூர் வந்து கந்த கவசம்
படிக்கலாம். திருச்செந்தூர்ல இருக்கிற மாதிரி நீங்க கனவு காணணும்.
அடியவர் :- கனவு
சுவடி ஓதும் மைந்தன் :- (அந்த கோயில்ல இருக்கிற மாதிரி கனவு காணணும். உங்க வீட்டுல இங்க படிக்கணும்.)
========================================
#
உங்கள் வாழ்க்கை முழுவதும் , வழிபாடு மற்றும் பயிற்சிக் காலங்களில்
முழுமையாக சைவ உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும். அசைவம் உண்பது மாபெரும்
தவறு.
========================================
போகர் சித்தர்:- இவைத்தன் பின் சுத்த நாளில் எப்பொழுதும் பின் சைவமாக இருக்க நன்று.
சுவடி ஓதும் மைந்தன் :- எப்பவுமே இதை செய்யறப்ப….
அடியவர் :- அடிப்படை சைவம்.
சுவடி ஓதும் மைந்தன் :- முழு நேரம் சைவம்.
====================================
#
ஜீவ காருண்யம்: அனுதினமும் வழிபாட்டைத் தொடங்குவதற்கு முன், எறும்புகள்
போன்ற சிறிய உயிரினங்களுக்கு இனிப்பு (சர்க்கரை) தானமாக வழங்க வேண்டும்.
====================================
போகர்
சித்தர்:- இதைத்தன் இப்படி வைத்திட, இதன் முன்னே தொடங்குவதற்கு முன்னே,
பின் அதாவது நிச்சயம் சிறு சிறு உயிர்களுக்கு பின் இனிப்பு தானம் செய்ய
வேண்டும்.
அடியவர் :- இதை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி எறும்புகள்.. சில ஜீவராசிகள்.. இதுக்கெல்லாம் வந்து நீங்க உணவிடவிடும்.
அடியவர் 5 :- இனிப்பு,
அடியவர் :- இனிப்பு கொடுக்கணும். சர்க்கரை.
================================
# இவ் பூசையை ஈசன் அருள் இருந்தால் மட்டுமே செய்ய முடியும்.
================================
போகர்
சித்தர்:- ஒன்றை சொல்கின்றேன். இதுவும் ஈசன் அருளினால் இருந்தால் மட்டுமே
செய்ய முடியும். இல்லையென்றால் ஏதோ ஒன்று சித்தன் சொல்லினான் என்று
விட்டுவிடுவார்கள். கவலை கொன்றுவிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதுவும் வந்து யாரால் செய்ய முடியும்?
அடியவர் :- இறைவன் அருள்
சுவடி ஓதும் மைந்தன் :- ஈசன் இருந்தாதான்…
அடியவர் :- செய்ய முடியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- செய்ய முடியும். இல்லையென்றால் என்ன ஆகும்? ஏதோ ஒன்னு சொன்னாங்க…
அடியவர் :- அப்படின்னு தூக்கி கடைசிட்டு போயிருவீங்க.
==========================
# புண்ணியம் மிகுந்தவனுக்கு தானாகவே பூசை செய்யும் எண்ணம் ஏற்படும்.
==========================
#பாவம் மிகுந்தவனுக்கு பின் நிச்சயம் பூசை செய்ய எண்ணம் வராது.
==========================
போகர்
சித்தர்:- நிச்சயம் புண்ணியம் மிகுந்தவனுக்கு தானாகவே செய்யும் எண்ணம்
ஏற்படும். பாவம் மிகுந்தவனுக்கு பின் நிச்சயம் தூண்டாது, தூண்டாது.
அடியவர் :- புண்ணியம் இருக்கிறவங்களுக்கு தானா இதை செய்யணும் என்ற எண்ணம் வந்துரும்.
====================================
# இவ் பூசை முறையை அனைவருக்கும் சொல்லிக் கொடுங்கள்.
====================================
போகர் சித்தர்:- இதைத்தன் இப்புண்ணியம் மற்றவருக்கும் கொடுங்கள். அவ்வளவுதான்.
சுவடி
ஓதும் மைந்தன் :- உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் நீங்க செய்வீங்க இல்ல? இந்த
புண்ணியம் வந்து… இதை அடுத்தவங்களுக்கு இது மாதிரி நல்லா இருங்கன்னு
சொல்லிட்டு…. நீங்க வந்து… கொஞ்சம் உன் புண்ணியத்தை கொடுத்து….
அவங்களுக்கும் சொல்லிக் கொடுங்கன்றார்.
===================================
# ஐந்தெழுத்து மந்திரத்தை மாற்றி மாற்றி ஓத வேண்டும்.
===================================
# உள்ளங்கையில் மூலிகைகளை வைத்து , நமசிவாய, மசிவாயந, சிவாயநம, வாயநமசி , யநமசிவா ….மீண்டும் இதேபோல மாற்றி மாற்றி ஓதுதல் வேண்டும்.
==================================
# உள்ளங்கையில் மூலிகையை வைத்துக்கொண்டு கீழ்க்கண்ட மந்திரங்களைச் செபிக்க வேண்டும்:
=====================================
https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=9h55m13s
போகர்
சித்தர்:- இதைத்தன் என்ன நினைத்துக் கொண்டீர்களோ சரியாகவே அவைத்தன் அழகாக
நிச்சயம் உள்ளங்கையில் வைத்து நிச்சயம் பின் நமசிவாய. பின் இவை மாற்றி
மாற்றி ஓதுதல் வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- மாற்றி.. மாற்றி ஓதணும். ஓதணும்னா படிக்கிறது.
சுவடி ஓதும் மைந்தன் :- நமசிவாய, வயநமசி… ஐயா, புரியுதுங்களா? இது வந்து.
அடியவர் 5 :- சிவயநம, வயநமசி, மசிவயந…..
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா? இது மாதிரி வந்து… மாத்தி மாத்தி நீங்க சொல்லணும். இதை வச்சுக்கிட்டு வயநமசி…
அடியவர் :- நமசிவாய, வயநமசி. அந்த அந்த ஐந்தெழுத்து மந்திரத்தை வந்து மாத்தி மாத்தி போட்டு படிக்கணும்.
மற்றொரு அடியவர் :- ( சற்று தொலைவில் இருந்து எடுத்துரைத்தார்… ஆடியோ தடங்கள்கள்…. )
சுவடி ஓதும் மைந்தன் :- ம்…..ஆமா. ரைட்டு, ரைட்டு.
===========================================
அடியவர்களுக்கு ஒரு சிறு குறிப்பு :-
சித்தர்
மற்றும் சைவ சித்தாந்த மரபில், ஐந்தெழுத்து மந்திரத்தின் எழுத்துக்களை
மாற்றி அமைத்து உச்சரிப்பதற்கு "பஞ்சாட்சர பேதம்" என்று பெயர். ஒவ்வொரு
எழுத்தையும் முன் பின்னாக மாற்றி உச்சரிக்கும்போது, அதன் அதிர்வுகளும்
பலன்களும் மாறும். அந்த 5 முக்கியமான ரகசிய முறைகள் இதோ:-
1. நமசிவாய (Na-Ma-Si-Va-Ya) - உலக நன்மைக்காக
இது
ஸ்தூல பஞ்சாட்சரம். உலகியல் இன்பங்கள், குடும்ப நலம், பாதுகாப்பு மற்றும்
அன்றாட வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் நீங்க உச்சரிக்கும் பொதுவான முறை.
2. மசிவாயந (Ma-Si-Va-Ya-Na) - செல்வ வளத்திற்காக
மாயையைக்
குறிக்கும் 'ம' என்ற எழுத்தை முன்னிறுத்தி உச்சரிப்பது. இது செல்வம்,
புகழ், பொன், பொருள் போன்ற உலகப் போகங்களை (ஆசைகளை) ஈர்த்துத் தரும் வல்லமை
கொண்டது.
3. சிவாயநம (Si-Va-Ya-Na-Ma) - முக்தி மற்றும் தியானத்திற்காக
இது
சூட்சும பஞ்சாட்சரம். சிவத்தை ('சி') முன்னிறுத்துவது. பிறவிப்பிணி நீங்கி
முக்தி அடையவும், ஆன்மீகத்தில் ஆழமான ஞானம் பெறவும் சித்தர்கள்
உச்சரிக்கும் முறை. இது உங்களைப் போன்ற ஆன்மீகத் தேடலில் உள்ளவர்களுக்கு
மிகவும் உகந்தது.
4. வாயநமசி (Va-Ya-Na-Ma-Si) - காரிய வெற்றி மற்றும் வசியத்திற்காக
திருவருளைக்
குறிக்கும் 'வா' வை முன்னிறுத்துவது. இது நல்ல வசிய சக்தியைத் தரும். எந்த
ஒரு நல்ல காரியத்தைத் தொடங்கினாலும் அதிலுள்ள தடைகளை நீக்கி, இறைவனின்
அருளால் வெற்றியைத் தேடித் தரும் ஆற்றல் கொண்டது.
5. யநமசிவா (Ya-Na-Ma-Si-Va) - இறைவனோடு கலக்கும் நிலைக்காக
ஜீவாத்மாவைக்
குறிக்கும் 'ய' வை முன்னிறுத்துவது. இது மிக உயர்ந்த தியான நிலை. எந்த உலக
ஆசையும் இன்றி, தன்னை முழுமையாக ஈசனிடம் அர்ப்பணித்து, சிவத்தோடு ஒன்றறக்
கலக்கும் பரமானந்த நிலையை இது தரும்.
=============================================
====================================
# இறுதியாக, உங்களுக்குத் தேவையானவற்றை மனதார வேண்டி, உள்ளங்கையில் உள்ளவற்றை அந்த தீபத்தில் இட வேண்டும்
=======================================
போகர்
சித்தர்:- இதைத்தன் எத்தனை முறையை, எத்தனை முறையை அறிந்தும் தான்
விரும்பியவற்றை அடைந்து கடைசியில் ஈசனை நினைத்து பின் எவ்வாறெல்லாம்
நிச்சயம் தீபத்தில் பின் இடுங்கள் இதனை.
சுவடி
ஓதும் மைந்தன் :- (இப்படியே உங்கள் கையில் வச்சுக்கிட்டு.. என்னென்ன
பாடல் எல்லாம் பாட சொன்னார்களோ , அதை எல்லாம் சொல்லிட்டு என்ன பண்ணனும்?
அந்த ஒரு தீபத்துல போடணும்.)
======================================
இந்த
ஆன்மீக வழிபாட்டு முறையின் சாராம்சம், போகர் சித்தர் பெருமானின்
வழிகாட்டுதலின்படி மனதின் சங்கல்பத்தை மந்திர ஆற்றலாக மாற்றி இறைவனிடம்
சமர்ப்பிப்பதாகும். போகர் சித்தர் அருளியபடி, ஒருவர் தான் அடைய விரும்பும்
இலக்குகளை அல்லது கோரிக்கைகளைத் தீர்க்கமாக எண்ணி, குறிப்பிட்ட பாடல்களை
(மந்திரங்களை) முறையோடு ஓத வேண்டும். அவ்வாறு ஓதும்போது அந்த மந்திர
அதிர்வுகளைத் தனது உள்ளங்கையிலேயே நிலைநிறுத்தி (ஆவாகனம் செய்து), அந்த
ஆற்றலை முழுமையாகத் திரட்ட வேண்டும். இறுதியில், அத்தகு வல்லமை பெற்ற
வேண்டுதலைத் தீபத்தின் ஒளியில் சமர்ப்பிப்பதன் மூலம், நம்முடைய எண்ணங்கள்
ஈசனின் பேரொளியோடு கலந்து நிச்சயமாக நிறைவேறும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையை
போகர் சித்தர் பெருமான் நமக்கு அருளியுள்ளார்கள்.
=====================================
=====================================
# அன்னை மகாலட்சுமி மூல மந்திரம்
=====================================
# மந்திரம் உச்சரிக்கும் போது அதி மிக சுத்தமாக இருந்து , தூய எண்ணங்களுடன் செப்பிட வேண்டும்.
=====================================
# பயபக்தியுடன் இருக்க வேண்டும்.
=====================================
=====================================
“ஓம் மகாலட்சுமியே, வசி, வசி.
சர்வ ஜன வசி, வசி.
சர்வ பண வசி, வசி.
ஓம் ஐம் க்லீம் வசி, வசி.
அனைத்தும் அருள் தருக.
அருள் கூர்ந்து எம்மிடத்திலே இருக்க, வசி, வசி.
நல் எண்ணங்களை ஏற்படுத்த வா.
ஐம் க்லீம் சௌம் வசி, வசி.”
=====================================
https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=9h56m17s
போகர் சித்தர்:- பின் மற்றொரு பின் தீபம், அதாவது ஒளி விளக்காக. பின்…
போகர்
சித்தர்:- “ஓம் மகாலட்சுமியே, வசி, வசி. சர்வ ஜன, வசி, வசி. சர்வ பண,
வசி, வசி. ஓம் ஐம் க்லீம் , வசி, வசி. அனைத்தும் அருள் தருக, அருள்
கூர்ந்து எம்மிடத்திலே இருக்க, வசி, வசி. நல் எண்ணங்களை ஏற்படுத்த வா, ஐம்
க்லீம் , சௌம், வசி, வசி.”
போகர் சித்தர்:- எனும் மூல மந்திரத்தை நிச்சயம் செப்பிட வேண்டும். சுத்தமாக செப்பிட வேண்டும். பயபக்தியோடு இருக்க வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னொரு தீபத்துக்கு முன்னாடி
அடியவர் :- இந்த மந்திரங்களை சொல்லணும்.
=================================
# அன்னை மகாலட்சுமி மந்திரங்களை சொல்லும் போது, அன்னை மகாலட்சுமி தாய் அங்கு வந்துவிட்டதாக உணருங்கள். சொல்லுங்கள்.
=================================
போகர் சித்தர்:- (மகாலட்சுமி ) தாயே, வந்து விட்டாயே.
===================================
# முருகப்பெருமானை வருக வருக என்று அன்புடன் மனதில் நினைத்து….
===================================
போகர் சித்தர்:- முருகா வரவேண்டும், முருகா வரவேண்டும், முருகா வரவேண்டும் என்பதை எல்லாம் எண்ணி….
================================
# முருகப்பெருமான் மந்திரம்
================================
# உள்ளங்கையில் மூலிகையை வைத்துக்கொண்டு கீழ்க்கண்ட மந்திரங்களைச் செபிக்க வேண்டும்:
================================
# “ஓம் சரவணபவ,
ஐம் சௌம் சரவணபவ,
ரீம் சௌம் மம் சரவணபவ”
================================
# உங்களால் இயன்ற மந்திரம் சொல்லி முடித்தபின்னர் , உங்கள் கையில் உள்ள மூலிகையை தீபத்தில் இட வேண்டும்.
================================
https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=9h57m10s
போகர்
சித்தர்:- “ ஓம் சரவணபவ, ஐம் சௌம், சரவணபவ, ரீம் சௌம், மம் சரவணபவ” எனும்
மந்திரத்தை தன்னால் முடிந்தவரை பின் அதுவும், பின் அதாவது உள்ளங்கையில்
வைத்து, பின் இவையெல்லாம் பின் வேண்டிக்கொண்டு, பின் அதாவது இத்தீபத்தில்
இட வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- மந்திரம்
சொல்லி இருக்காங்களே. இதெல்லாம் வந்து அடுத்த தீபத்தில் வச்சுக்கிட்டு
உங்களுக்கு தேவையானது என்ன பண்ணனும்?
அடியவர் :- இந்த மந்திரத்தை சொல்லணும். முருகருக்குரிய மந்திரத்தை சொல்லணும்.
சுவடி
ஓதும் மைந்தன் :- ( முருகப்பெருமானே எனக்கு வேண்டுவதை அருளுங்கள் என்று
வேண்டி , என்ன பண்ணனும்? இந்த தீபத்துல கையில் உள்ளதை விடணும். பயபக்தியோடு
செய்யணும். )
சுவடி ஓதும் மைந்தன் :- (
நம்பிக்கையுடன் எல்லோரும் செய்யுங்கள் ஐயா. இதெல்லாம் சொல்றதே பெரிய
கஷ்டங்க ஐயா. நீங்க , ஒரு லட்சம் கோடி கொடுத்தா கூட இதெல்லாம் சொல்ல
மாட்டாங்க யாரும். ஏதோ உங்களுக்கு சொல்றாருன்னா, அதை வந்து நீங்க
பயபக்தியோட, மாமிசம் எதுவும் சாப்பிடாம, உயிர்களுக்கு முதல்ல…
இனிப்புகள்…..)
அடியவர் :- சிறு சிறு உயிர்களுக்கு கொடுக்கணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- சிறு சிறு உயிர்களுக்கு கொடுக்கணும்.
அடியவர் :- எறும்புகளுக்கு…
சுவடி ஓதும் மைந்தன் :- கொடுக்கணும்.
=====================================
மூலிகை கலவை தயாரிப்பு (சிறப்பு முறை):-
நெல்லிக்கனி,
ஆவாரம் பூ, செம்பருத்தி பூ, கிராம்பு, ஏலக்காய், சீரகம், வில்வம்,
முருங்கை இலை, வேம்பு, பாவற்காய், கரிசலாங்கண்ணி மற்றும் துளசி ஆகியவற்றை
நசுக்கி, அதில் ருத்ராட்சத்தையும் இட்டு இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஊற
வைத்து, தினமும் அருந்தி வந்தாலே அதிக சிறப்புகள் உங்களுக்கு ஏற்படும்.
=====================================
போகர்
சித்தர்:- இவை அறிவித்து எதை என்று அறிய. பின் இத்துடனே, பின் அதாவது,
பின் அவ் , பின் அதாவது, பின் ருத்ராட்சத்தை நன்முறையாகவே அதில் கூட
இவ்வாறாகவே இடலாம். நெல்லிக்கனியை நசுக்கி, பின் அதாவது ஆவாரம் பூவை
நசுக்கி, செம்பருத்தி பூவை, பின் நசுக்கி, பின் கிராம்பை நசுக்கி, பின்
ஏலக்காயை நசுக்கி, பின் சீரகத்தை நசுக்கி, வில்வத்தை நசுக்கி, இன்னும்,
பின் அதாவது முருங்கை இலைகளை நசுக்கி, அதாவது வேம்பை சிறிதளவு, பின்
நசுக்கி, பாவற்காயை சிறிதளவை நசுக்கி, இன்னும் விசேஷமான கரிசலாங்கண்ணியை,
பின் இதன், பின் சிறிய நசுக்கி, இன்னும் எதை என்று தெரிவித்து, பின் துளசி
இலைகளிலும் நறுக்கி, நிச்சயம் இதில் இட்டு, இவை தன் இரண்டு நாட்கள் அல்லது
மூன்று நாட்கள், பின் ஊறிய பிறகு, பின் நல் முறையாகவே அருந்தி வந்தாலே
சிறப்புகள் ஏற்படும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, இதெல்லாம் சொல்ல மாட்டாங்க. ஐயா,
அடியவர் :- யாரும் சொல்ல மாட்டாங்க,
சுவடி ஓதும் மைந்தன் :- யாரும் சொல்ல மாட்டாங்க.
சுவடி
ஓதும் மைந்தன் :- (எத்தனை கோடி இருந்தாலும், எத்தனை லட்சம் இருந்தாலும்,
மனுஷனால இதெல்லாம் சொல்ல முடியாது. இறைவன் சில ரகசியங்கள் நம்மளுக்காக
சொல்றார், அவ்வளவுதான். ஆனா யாராவது கேட்டா, சித்தர்கள் ஒருத்தருக்கு தான்
முன்னாடி எல்லாம் சொல்லுவாங்க. ஆனா இப்ப அப்படி இல்ல. எல்லாரும் நல்லா
இருக்கணும்…..என்று …)
அடியவர் :- கூட்டத்தை கூட்டி சொல்றாங்க. எல்லா பேருக்கும்,
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் நல்லா இருக்கணும்னு வந்து… இதை சொல்றாங்க. அதை பயன்படுத்திக்கோங்க.
=================================
# அடுத்த கூட்டுப்பிரார்தனையில் வெளி வர உள்ள குலதெய்வ , முன்னோர்கள் ரகசியங்கள் …..
=================================
போகர் சித்தர்:- எதை, எப்படி அடுத்த வாக்கில் குலதெய்வத்தையும் முன்னோர்களையும் எப்படி கொண்டுவருவது என்பதை பின் தெரிவிக்கின்றேன்.
அடியவர் :- சிவாய நம.
சுவடி
ஓதும் மைந்தன் :- நீங்க அடுத்து எல்லாரும் குலதெய்வத்தையோட முதல்ல அருள்
அது பெறணும். அடுத்து குலதெய்வத்தையும் முன்னோர்களையும் எப்படி கொண்டு
வர்றதுன்னு முதல்ல சொல்லிட்டார். காசியில காசி தீர்த்தம் எடுத்துட்டு
வருவாங்க. நீங்க போக முடியாது. நம்ம (கூட்டுப் பிரார்த்தனை குழு) ஆட்கள்
எடுத்துட்டு வருவாங்க. எல்லாரும்…. )
அடியவர் :- (கூட்டுப் பிரார்த்தனை குழு ) அடியார்கள் ….
சுவடி
ஓதும் மைந்தன் :- (ராமேஸ்வரம் தீர்த்தம் எடுத்துட்டு வருவாங்க.
அதெல்லாம் எடுத்துட்டு வந்து…. நாணயங்கள்…. ஏன்னா இன்னைக்கு மூலாதாரம்
காசு…காசு…. காசு…. துட்டு….. துட்டுன்றாங்க எல்லாரும். அதனால அதை , அங்க
அந்த காசை எடுத்து… ஒரு ரூபாய் நாணயத்தை அங்க கங்கையில் நனைத்து
எடுத்துட்டு வருவாங்க. அப்புறம் இதே மாதிரி போன தடவை சொன்னாரு. விபூதி
எடுத்துட்டு வான்னு சொல்லிட்டு… இப்ப பரிகாரத்தை சொல்லிட்டார். முந்தைய
கூட்டுப்பிரார்தனையில் சொன்ன) அந்த விபூதி என்ன செய்யணும் என்று இந்த
கூட்டுப்பிரார்தனையில் சொல்லிட்டாரு. ஐயா இதெல்லாம் பயன்படுத்திக்கோங்க
ஐயா….)
அடியவர் :- நிச்சயமா
சுவடி
ஓதும் மைந்தன் :- வாய்ப்புகள் பயன்படுத்திக்கணும். ஏன்னா வாய்ப்பு
ஒருமுறை தான் வழங்குவாங்க. இறைவன் வந்து எல்லா இடத்திலும் வாய்ப்பு
தரமாட்டார். அந்த வாய்ப்பை யார் கரெக்டா பயன்படுத்திக் கொள்கின்றார்களோ ,
அவங்க பெரிய ஆளுங்க. ஐயா, வாய்ப்பை தவறவிட்டவன் அவ்வளவுதான். ஒன்னும் பண்ண
முடியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம்
சித்தர் இறங்கி வந்து சொல்றாங்க. ஐயா. யாருங்க சொல்லுவாங்க? வந்து காசா
என்ன, உங்களை வாங்குறோமா? எல்லாம் இறைவன்… மூச்சே இலசுமா கொடுத்திருக்கார்.
ஃப்ரீ, இது கூட செய்யலைன்னா நம்ப ஐயா, புரியுதுங்களா? செய்யணும் ஆனா
பயபக்தியோட செய்யணும். என்ன பண்ணனும்னு சொல்லி இருக்கார். வந்து
சுவடி
ஓதும் மைந்தன் :- ஆனா மந்திரங்கள் சாதாரண சித்தர்கள் கொடுக்க மாட்டாங்க.
ஐயா, ஏன்னா தனியா வரவழைத்து தான் கொடுப்பாங்க ..ஒருத்தர் ஒருத்தருக்கு..
அதாவது நீ இந்த மந்திரம் சொல்லு என்று தனியாக கொடுப்பாங்க….ஆனா இப்ப..இங்க …
கொடுத்திருக்காங்கன்னா…. ஆமா, பெரிய விஷயம். இதெல்லாம் நல்லா
எழுதிக்கிட்டு எல்லாம் டைப் பண்ணுவாங்க. வந்து
அடியவர் :- நிறைய மந்திரங்கள் சொல்லி இருக்காங்க.
=================================
# இன்னும் ரகசியங்கள் வர உள்ளது
=================================
போகர் சித்தர்:- இதைத்தன் பின் செப்பி அறிந்தேனே. இன்னும்
சுவடி ஓதும் மைந்தன் :- இதை செப்பி இன்னும் நான் அறிந்திருக்கிறேன். அதை இப்ப சொல்ல மாட்டேன்.
=================================
# நம்பினால் சித்தன் வாக்கு.
# நம்பாவிடில் எமன் வாக்கு. அவ்வளவுதான்.
=================================
போகர்
சித்தர்:- இன்னும் பல விஷயங்கள் பின் உங்களுக்கு இன்னும் ஆற்றல்கள்
எவ்வாறு தருவதெல்லாம் சித்தர்கள் பின் ரகசியமாக வைத்துள்ளார்கள். நிச்சயம்
அதாவது நம்பிக்கை வேண்டும். நிச்சயம் நம்புங்கள். அறிந்தும் கூட பின்
நம்பினால் சித்தன் வாக்கு நம்பாவிடில் எமன் வாக்கு. அவ்வளவுதான்.
போகர் சித்தர்:- இன்னும் இவை அறிவித்து பின் நன்று ஆசிகள் முருகன் அருளாலே.
சுவடி ஓதும் மைந்தன் :- முருகன் அருளாலே எல்லாருக்கும் நல்லாசிகள், நல்லாசிகள்.
போகர் சித்தர்:- பின் குழந்தையை போற்றி ஒரு பாடலை பாடுக. யானும் கேட்கின்றேன். அழகாக
அடியவர் :- சிவாய நம
பாடகர் :- ( “பச்சை மயில் வாகனனே” என்ற பாடலை பாட ஆரம்பித்தார்கள்)
Start - https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=10h06m07s
பாடகர் :- ( “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்” என்ற பாடலை பாட ஆரம்பித்தார்கள்)
Start - https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=10h12m13s
===================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===================================
குருநாதர்
:- அப்பனே, அழகாக எம்முடைய ஆசிகள். அப்பனே, நல்விதமாகவே. அப்பனே, அதாவது
சிவபுராணத்தை ஓதி, அப்பனே, நல்முறையாகவே அனைவருக்கும் கொடுங்கள். அப்பனே,
நல்முறையாகட்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாம் சிவபுராணம் பாடிட்டு, எல்லாருக்கும் பிரசாதம் இதை வாங்கிக்கோங்கன்றார்…
குருநாதர்:-
அப்பனே, மீண்டும் பின் யான் சொல்லியவற்றை எடுத்து அறிந்தும் புரிந்தும்
எதை என்று அறிய, அப்பனே, இன்னும் சித்தர்கள் பின் சரியான வழியிலே, அப்பனே,
பின் தீர்ப்பை எடுத்துரைப்பார்கள்.
=================================
# மாபெரும் பாக்கியம் , சிவ புண்ணியங்கள் :-
=================================
#
கூட்டுப்பிரார்தனையில் , அன்புடன் அகத்திய முனிவர், அன்புடன் அன்னை
லோபாமுத்திரை , அன்புடன் போகர் சித்தர் , அன்புடன் சிவவாக்கியர் சித்தர்
, அன்புடன் மூக்குப்பொடி சித்தர் அவர்கள் அனைவரும் உணவு அழகாக
உட்கொண்டார்கள் என்று மகிழ்ச்சியான வாக்குகளை அருளினார்கள்….
=================================
குருநாதர்:-
அப்பனே, குறைகள் வேண்டாம். நல்விதமாகவே எம்முடைய ஆசிகள். லோபா
முத்திரையோடு, அப்பனே, உட்கொண்டும் வந்து அழகாக போகனும்… நிச்சயம்
வாக்கியனும் கூட, அப்பனே, பின் மூக்கு பொடியானும் கூட.
சுவடி
ஓதும் மைந்தன் :- அழகா வந்து சாப்பிட்டு போயிட்டு இருக்காங்க.
மூக்குப்பொடி சித்தரும் எல்லாரும் வந்து அழகா வந்து சாப்பிட்டு
போயிருக்காங்க.
===================================
# அடியவர்களுக்கு எப்படி ஆசிகள் பெற்றுத்தர முடியும் கலியுகத்தில் என்ற ரகசியங்கள் ……
==================================
குருநாதர்:-
அப்பனே, எதை என்று புரிய இவ்வாறுத்தான், அப்பனே, ஆசிகள் உங்களுக்கு
பெற்றுத்தர முடியும் இக்கலியுகத்தில் என்பேன் அப்பனே. நீங்களாக இறைவனை
வணங்கினாலும், அப்பனே, கிடப்பது, அப்பனே, இன்னும், அப்பனே, எதை என்று
புரிய, எதை என்று யான் சொல்ல.
=================================
# சித்தர்கள் வருங் காலத்தில் , நிச்சயம் பல நல் மனிதர்களை உருவாக்கி, இன்னும், நன்மைகளை செய்யப் போகின்றார்கள்.
=================================
குருநாதர்:-
அப்பனே, நலங்களாகவே கவலைகள் வேண்டாம். அப்பனே, நிச்சயம் யானும் அறிந்தும்
புரிந்தும் கூட, அப்பனே, இன்னும் கூட பல, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நல்
மனிதர்களை உருவாக்கி, அப்பனே, இன்னும், அப்பனே, நன்மைகளை செய்யப்
போகின்றோம்.
================================
# சித்தர்கள் பின்னே வந்தால், சொர்க்கம்.
================================
குருநாதர்:- அப்பனே, நிச்சயம், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, இதனால் எங்கள் அப்பனே பின் பின்னே வந்தால், அப்பனே, சொர்க்கம்.
===============================
# கர்மாக்கள் முதலில் கரைவதால் , முதலில் நரகம் போன்று தெரியும்.
===============================
குருநாதர்:- அப்பனே, நிச்சயம் நரகம் போன்று தெரியும். ஆனால், அப்பனே, பின் எவை என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- (சித்தர்கள் வழியில் வருவதற்கு முதலில் எல்லாருக்கும் கஷ்டம் தான் என்று தோணும். ஆனால் கடைசியில என்ன? )
குருநாதர்:- சொர்க்கத்தை நிச்சயம் தன்னில் கூட. இதனால்தான் பின் வாழ முடியாத இப்புவி தன்னில் நிச்சயம் யாங்கள் வாழ வைப்போம் உங்களை.
சுவடி ஓதும் மைந்தன் :- மனிதன் வாழ முடியாத ஒரு...
அடியவர் :- இந்த சிறைச்சாலை. இந்த சிறைச்சாலையில் உங்களை நாங்க வாழ வைக்கிறோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- நாங்கள் உங்களை வாழ வைக்கிறோம்.
குருநாதர்:-
எப்படி எல்லாம் மனிதனுக்கு புரிய வைத்து, எப்படி எல்லாம் பின் சொன்னால்
புரியுமோ, அப்படி சொல்லி நிச்சயம் உங்களை காத்திடுவோம்.
அடியவர் :- சிவாய நம
அடியவர் :- எப்படி எல்லாம் உங்களுக்கு வந்து சொன்னா புரியுமோ, அப்படியெல்லாம் சுலபமான விஷயங்கள் சொல்லிக் கொடுத்து வழிகாட்டுவோம்.
=============================
# அனைத்தும் கொடுத்திடுவோம்.
=============================
குருநாதர்:- நிச்சயம் பின் எதை என்று புரிய இன்னும் அனைத்தும் கொடுத்திடுவோம் நிச்சயம் தன்னில் கூட.
=============================
# பலவற்றை எப்படி உங்களுக்கு கொடுப்பது என்று யோசித்து வைத்திருக்கின்றோம்.
=============================
குருநாதர்:-
எங்கெங்கு எதனை எடுத்து வரவேண்டும்… உங்களுக்கு கொடுத்தால் நன்று. நீங்கள்
விரும்பியதை பெறலாம் என்றெல்லாம் யாங்கள் யோசித்து வைத்திருக்கின்றோம்.
=============================
# இறைவன் அளிக்கும் இறுதி வாய்ப்பு
=============================
குருநாதர்:- இதனால்தான் கடைசி ஒரு வாய்ப்பு, அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த கூட்டு பிரார்த்தனை என்னது? என்னது ஐயா?
அடியவர் :- கடைசி ஒரு வாய்ப்பு அனைவருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- மனுஷன் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்காங்க. வந்து இறைவன் வந்து இதுல வந்து கொஞ்சம்
அடியவர் :- எல்லாரும் கெட்டியா பிடிச்சுக்கணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- கெட்டியா பிடிச்சுக்கோங்கன்றார்.
==============================
# எப்போதும் இறைவன் பாதத்தை பிடித்துக் கொண்டால் நன்று.
==============================
குருநாதர்:-
இதை அறிவித்து இதனால் பின் அதாவது பெருவாழ்வு அறிந்தும் எதை என்று
தெரிவிக்க நிச்சயம் பின் இவ்வாறாக எவ்வாறாக இறைவன் பாதத்தை பிடித்துக்
கொண்டால் நன்று.
=============================
# இன்னும் பல ரகசியங்கள் வெளிவர உள்ளது
=============================
குருநாதர்:- பின் உன்னை நீ வெல்லலாம் என்பவை எல்லாம் சித்தர்கள் இன்னும் ஏராளம். இன்னும் ரகசியங்கள் எங்களிடத்தில் பின் வருவோம்.
==========================
# இவ் ரகசியங்களை தெரிவிக்காவிடில் உலகம் அழிந்துவிடும்
==========================
குருநாதர்:-
ஏன்? எதற்கு? ஏனென்றால் தர்மம் தலை கீழாக போய்க்கொண்டிருக்கின்றது.
இவ்விரகசியங்கள் யாங்கள் சொல்லித் தரவில்லை என்றால் இன்னும் கூட தலைக்கீழாக
போயிற்று. பின் உலகம் பின் அழகாக அழிந்துவிடும்.
சுவடி
ஓதும் மைந்தன் :- இப்பவே தர்மம் தலைக்கீழா போயிட்டு இருக்குது. நாங்க
எல்லாம் இன்னும் ரகசியங்கள் எல்லாம் சொல்லலைன்னா இன்னும் மோசமா போயிடும்.
அடியவர் :- இன்னும் மோசமா போய் உலகம் அழிஞ்சிரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- மோசமா போயிட்டு வாழவிட முடியாது.
============================
# கலியுகத்தில் ஜீவ சமாதியில் இருந்து, வெளிவர உள்ள பல ஞானிகள் ….
============================
குருநாதர்:- இதனால்தான் உங்களை மீட்டெடுக்கவே பல ஞானிகள்
============================
# உடனுக்குடன் தண்டனைகள் வழங்குவார்கள் ஞானிகள்
============================
குருநாதர்:-
அவ் இன்னும் முடிவெடுத்து பின் உடனுக்குடன் தண்டனை என்றும் கூட நிச்சயம்.
அப்பொழுது, அப்பொழுது செய்த தண்டனைகள்…. அதாவது தவறுகள்…. பெரும்
தண்டனையாக மாறும்.
சுவடி ஓதும் மைந்தன் :-
இனிமேல் என்ன பண்ணுவாங்க ஐயா? உடனுக்குடன் தண்டனை. என்ன தப்பு செய்றியோ
உடனே தண்டனை. ஞானிகள் அது மாதிரிதான் இனிமேல் முடிவெடுப்பாங்க.
குருநாதர்:- ஏனென்றால் ஞானிகளை எழுப்புவேன். இதனால் பின் நிச்சயம் பின் அதாவது அறிந்து கூட ஜாக்கிரதையாகத்தான்.
சுவடி
ஓதும் மைந்தன் :- சில ஞானிகள் எல்லாம் எழுப்பும் போது… அவங்க பவரா
வந்தாங்கன்னா… என்ன பண்ணுவாங்க? முதல்ல அடிப்பாங்க….. ஆமா. அப்ப நம்ம என்ன
பண்ணனும்? ஆமா. கரெக்டா இருக்கணும்.
குருநாதர்:- எது என்று அறிய எழுதிவிட்டு சென்றுவிட்டார்கள். யார் பார்ப்பது இங்கு?
சுவடி
ஓதும் மைந்தன் :- அழகா எழுதிவிட்டு சென்றாங்க. அவங்க பாட்டுக்கு தர்மத்தை
கடைபிடி, இது கடைபிடி, இப்படி வாழுங்கன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க… ஆனா
கடைபிடிக்க யாரு? யாரும் அதை செய்வது இல்ல. யார் பண்றா? அதனால அவ்
ஞானிகளை கூட்டிட்டு வரேன். நான் அவங்களே இழுக்கிறேன்.
===========================
# அன்பு அடியவர்களுக்கு நிச்சயம் மாற்றங்கள் உண்டு, ஏற்றங்கள் உண்டு. கவலை வேண்டாம்.
===========================
குருநாதர்:- எதை என்று அறிவிக்க நிச்சயம் பின் மாற்றங்கள் உண்டு, ஏற்றங்கள் உண்டு. கவலை வேண்டாம்.
============================
# அன்புடன் அகத்திய மாமுனிவரின் அருள் ஆசிகள்..
============================
# புண்ணியசாலிகள் இவ் கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள்.
============================
# ஒரு வரிதான் பின் வரும் வாக்கு …ஆனால் இதன் வலிமையான மகிமையை யார் அறிவார்கள் இவ் உலகத்தில் ….
============================
# புண்ணியசாலிகள் இவ் கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள்.
============================
குருநாதர்:- நல்லாசிகள், நல்லாசிகள்.
============================
# சிவபுராணத்தை பாடிவிட்டு , பிரசாதத்தை அனைவருக்கும் கொடுங்கள்
============================
குருநாதர்:- பின் புராணத்தை பாடிட்டு அனைவருக்கும் கொடுங்கள் நிச்சயம்.
அடியவர் :- ஐயா, மஞ்சள் குங்குமம் பிரசாதம். அடுத்த கூட்டு பிரார்த்தனை?
குருநாதர்:- இவை தன் அறிவித்து அழகாக நிச்சயம் இவை தன் பின் இல்லத்திலே வையுங்கள். அப்படியே
அடியவர் :- சரி.
சுவடி
ஓதும் மைந்தன் :- அது மஞ்சள் குங்குமம் வந்து… மீனாட்சி தாயை
கும்பிடனும். மஞ்சள் ஏன்னா அது வந்து வீட்டிலேயே வந்து வைக்க சொல்றார்.
=============================
#
நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர் அவர்கள் , இன்னும் சேவைகள்
பலவற்றை எப்படி செய்வது என்று அடுத்த வாக்கில் எடுத்துரைப்பார்கள்.
ஆவலுடன் காத்திருப்போம் நாம் அனைவரும்.
=============================
குருநாதர்:- அப்பனே, இன்னும் எதை என்று அறிய இன்னும் சேவைகள். அப்பனே, பலவற்றை யான் எழுத்துரைக்கின்றேன் அடுத்த வாக்கில்.
சுவடி
ஓதும் மைந்தன் :- இன்னும் சேவை இவர் கேட்டிருந்தாரு. ஏன்னா நிறைய பேருக்கு
திருமணம் ஆகல.. இன்னும் ஒன்னும் ஆகல. திருமணத்துக்காக வராங்க. இன்னும்
அடியார்கள் எல்லாம் திருமணம் ஆகாது இருக்கிறாங்க. அவங்க எல்லாம் நல்ல
அடியார்கள். திருமணம் செய்து கொடுப்போம், ஒன்னு நிறைய கேட்டிருக்காரு.
அகத்தியர் கேட்டு இதெல்லாம் செய்வோம். நல்லா சேவைகள் செய்வோம்.
அடியவர் :- ஏன்னா இருக்கப்போறது கொஞ்ச நாள் இந்த உலகத்துல.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா,
சுவடி ஓதும் மைந்தன் :- ஆயிரம் வருஷம் வாழல, 500 வருஷம் வாழல,
அடியவர் :- 60 வருஷம்
சுவடி
ஓதும் மைந்தன் :- முடிஞ்சதெல்லாம் நம்ம நன்மையே செய்வோம். கெட்டதானாலும்
சரி, நல்லதானாலும் சரி. இறைவன் தீர்ப்பு. ஏன்னா அண்ணாமலையர் உத்தரவு இல்லாம
இங்க வர முடியாது. நிச்சயமா இன்னைக்கு வந்து இங்க படிக்கவும் முடியாது.
சித்தர்கள் அருள் இருக்கிறது. அந்த அருளை வச்சுக்கொண்டே நம்ம அப்படியே
பொழைச்சிட்டு போயிடலாம். நல்லதே நடக்கும். எல்லாருக்கும் சந்தோஷம் ஐயா.
==============================
# எப்போது அடுத்த அடுத்த கூட்டு பிரார்த்தனை?
==============================
அடியவர் :- அடுத்த அடுத்த கூட்டு பிரார்த்தனை?
குருநாதர்:- எதை என்று அறிய. அப்பனே, இன்னும் அப்பனே, பின் ஒரு மாதத்திலே,
அடியவர் :- இன்னும் ஒரு மாதத்திலே சரி.
==================================
# எந்த இடத்தில் அடுத்த கூட்டுப் பிரார்த்தனை வைத்துக் கொள்வது ?
=================================
அடியவர் :- இடம்?
குருநாதர்:- அப்பா, நீங்கள் எதை எதிர்நோக்கின்றீர்கள்? அப்பா,
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் எதை எதிர்நோக்கின்றீர்கள்?
===============================
# அடுத்த கூட்டுப் பிரார்த்தனை - திருவண்ணாமலையில்
===============================
குருநாதர்:- அப்பா, இன்னும் எதை என்று புரிய இன்னும் இங்கு எழுப்புவதற்கு சில சித்தர்கள் இருக்கின்றார்கள். இங்கே செய்.
அடியவர் :- சிவாய நம.
அடியவர்கள்:- கைதட்டல்கள்
அடியவர்
:- நன்றிங்க ஐயா. இன்னும் எழுப்புவதற்கு நிறைய சித்தர்கள் இருக்கிறாங்க.
இப்போ இங்கேயே தான் அடுத்த கூட்டு பிரார்த்தனை சொல்லிட்டாங்க. ஒரு
மாசத்துல வைக்க சொல்லி இருக்காங்க. தேதி சொல்றோம். எக்ஸாக்ட்டா மண்டபம்
அவைலபிலிட்டி கன்ஃபார்ம் பண்ணிட்டு.
அடியவர் :- சிவாய நம.
அடியவர்
:- சிவபுராணம் படிச்சு.. எல்லா பேரும் விபூதி, பிரசாதம், மஞ்சள்,
குங்குமம் எல்லாம் வாங்கிக்கோங்க. இந்த விபூதி ருத்ராட்சத்தை என்ன
பண்ணனும்ன்றத தெளிவா சொல்லி இருக்காங்க. இது வாக்குகளா கூடிய விரைவில்
உங்கள் எல்லா பேருக்கும் வரும். எல்லா பேரும் கூட்டு பிரார்த்தனை சேனல்
சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அந்தந்த சேனலுக்கு எல்லாமே இன்ஃபர்மேஷன் வரும்.
சரிங்களா?
அடியவர் :- சிவாய நம.
பாடகர் :- ( சிவபுராணம் பாட ஆரம்பித்தார்கள்)
Start - https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=10h23m54s
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( அனைவருக்கும் புண்ணிய பிரசாதங்களை வழங்கினார்கள் )
(அன்புடன்
அகத்திய மாமுனிவர் அருளால் 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த
சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்குகள் , நிறைவு அடைந்தது.)
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே...!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
.jpeg)


.jpg)
No comments:
Post a Comment