இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்..
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 1
வாக்குரைத்த நாள் :- 01 / March / 2026 , ஞாயிற்றுக்கிழமை
வாக்குரைத்த இடம் :- சென்னை
இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
===============================================
# இவ் சத் சங்கம் குறித்த ஒரு விளக்க பதிவு குறிப்பு.
===============================================
(
குறிப்பு :- இந்த சத்சங்கத்தில் பங்கேற்ற அடியவர்கள், கடந்த ஆண்டு
பெங்களூர் சத்சங்கத்திலிருந்து தொடங்கி கந்தர் அனுபூதியை படித்தும்
பாராயணம் செய்தும், அதை பொதுமக்களிடம் எடுத்துச் சென்றும் வந்தவர்கள்.
மேலும்,
குருநாதர் கூறியபடி நவதானிய தீபங்களை முறையாக ஏற்றி வழிபாடு செய்தும்,
அறுபடை வீடுகள் மற்றும் பஞ்சபூத ஸ்தலங்களின் யாத்திரையையும் நிறைவேற்றியும்
உள்ளனர். அதுமட்டுமல்லாது, குருநாதர் அருளிய நவ கைலாயம், நவ திருப்பதி
போன்ற புனித யாத்திரைகளையும் செவ்வன செய்து முடித்துள்ளனர்.
அதன்
பின், ராமேஸ்வரத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களில் தீபம் ஏற்றி வழிபாடு
செய்தல், கடலில் பால், புனித நீர், தீபம் விடுதல், பித்துருக்களுக்கான
தர்ப்பணங்கள் போன்ற அனைத்தையும் முறையாக செய்து முடித்தனர்.
கூட்டுப் பிரார்த்தனையில் சித்தர்கள் கூறும் அனைத்து பரிகாரங்களையும் வழிமுறைகளையும் முறையாக செய்து கொண்டே வருகின்றவர்கள்…
இவ்வாறு
குருநாதர் கூறிய உத்தரவுகளை முழுமையாக அனுசரித்து வந்த இந்த அடியவர்களை,
குருநாதர் தனிப்பட்ட முறையில் அழைத்து, ஒவ்வொருவருக்கும் வாக்குகளையும்
நல்லாசிகளையும் வழங்கினார்.
குருநாதர் ஏற்கனவே கூறியிருந்தார்:
“யார்
ஒருவர் சித்தர்களைப் பேச்சு நடக்கின்றார்களோ, அப்படியே பின்பற்றி
வருகின்றார்களோ, அவர்களுக்கு எங்களுடைய வாக்குகளும் வழிகாட்டுதலும்
தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும்.”
குருநாதருடைய
வாக்குகள் எங்களுக்கு கிடைக்கவில்லையே என்று நினைப்பவர்களுக்கு,
குருநாதருக்கு நல்லோர், தீயோர் என்ற பாகுபாடு இல்லை. அனைவரும் குருநாதருடைய
பிள்ளைகளே. ஆனால் குருநாதருடைய வாக்குகளை யார் பின்பற்றி கேட்டு
வருகின்றார்களோ, அவர்களுக்கு வாக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். இதை
அடியவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். குருநாதருக்குரிய விஷயங்களை
அப்படியே செய்து வரவேண்டும். அப்படி செய்து வந்தால்தான் குருநாதருடைய
வாக்குகள் கிட்டும்.
அந்த உத்தரவின்படி நடந்த
இந்த சத்சங்கத்தில் , அடியவர்களுக்கு, குருநாதர் நேற்று வாக்குகளையும்
அருளாசிகளையும் வழங்கினார். அந்த வாக்குகளில் உள்ள பொதுவான உபதேசங்களை
இப்பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறோம்.)
======================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
======================================
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
அடியவர் :- ( பரவசத்தில் ) குருநாதா……
குருநாதர்:-
அப்பனே, அம்மையே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் லோபாமுத்திரையோடு. ஈசனின்
அனுக்கிரகங்களும். ஈசனை பின் துதித்து பாட அனுக்கிரகமும் கூட. இதனால், பின்
அறிந்து கூட, இப்போது எதை, பின் நிச்சயம், பின் யார் அடுத்தடுத்து
வாக்குகளையும் கூட.
பின் அவரவர், அதாவது ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றேன் நிச்சயம்.
பின்
எவருக்கு நிச்சயம் எதை என்று புரிந்தும், பின் ஏன் புரியாமலும் இவ்வளவு
வாழ்க்கை என்பதற்கு இணங்க, அனைவருக்குமே நிச்சயம். அறிந்தும் கூட தெளிவு
பெற வைக்கின்றேன்.
===============================================
# எழுந்து நின்று பாடல்களை பாடி , நின்று வாக்குகள் கேட்க உத்தரவு
===============================================
குருநாதர்:-
இதனால் ஒவ்வொருவரும் நிச்சயம், பின் யாருக்கு எதை என்று அறிய, பின்
பிடித்தார் போல், நிச்சயம் ஒரு பாடலைப் பாடி, பின் நின்றால் நிச்சயம்
அவர்களுக்கே வாக்குகள் யான் செப்புவேன்.
சுவடி
ஓதும் மைந்தன் :- ( அவர் புதுசா எடுத்துக்கொண்டு வருகிறார் அய்யா.
அகத்தியர் அய்யா சொல்வது — யாருக்காவது வாக்கு வேணும்னா, . “ஒரு பாடல்
பாடுங்க , அப்படியே நின்று கொள்ளுங்கள்; நான் சொல்றேன் அவர்களை பற்றி”ன்னு
சொல்றார். பாடுங்க….)
அடியவர் :- ( பரவசத்தில் ) குருநாதா……
அடியவர் 1 :- ( பின்வரும் திருப்புகழ் பாடலை பாடினார்கள் )
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
அடியவர் 1 :- (திருப்புகழ் பாடலை பாடி முடித்த பின்னர் …..)
குருநாதர்:- தாயே எதை என்று புரிய, உன்னைச் சார்ந்தோரும் பின் எழுப்பு.
அடியவர் :- ( அனைவரையும் அழைத்தார் )
==========================================
# அடியவருக்கு பிறவியின் பரம ரகசியங்களை எடுத்து உரைத்தார்கள்
==========================================
குருநாதர்:-
அப்பனே, அம்மையே, எதை என்று அறிந்தும் கூட, இதனால், பின் அறிந்தும் பல
வகைகளில் கூட, பின் பல வகைகளில் கூட நன்மைகள் தான் வாழ்க்கையில். ஆனாலும்
எதை என்று அறிந்து, பின் அறிந்தும் அறியாமலும், பின் புரிந்தும்
புரியாமலும் இருந்தாலும் அவைகளுக்கு ஏற்ப இதைத்தன் கூட நிச்சயம், பின் ….,
அதாவது பின் வழிபாடுகள் பல பல. இவைத்தன் பின் ….. நினைத்து நினைத்து.
குருநாதர்:- ( அடியவருக்கு பிறவியின் பரம ரகசியங்களை எடுத்து உரைத்தார்கள். தனிப்பட்ட பிறவி ரகசிய வாக்கு….)
சுவடி ஓதும் மைந்தன் :- (இவ் அடியவர்க்குக்கு ( #1 ) பிறவி ரகசிய விளக்கங்கள் அதனை எடுத்து உரைத்தார்கள்) அய்யா புரியுதுங்களா?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்ணனும்?
அடியவர் 1 :- ……. வழிபாடு.
சுவடி
ஓதும் மைந்தன் :- ….. வழிபாடு நிறைய பண்ணனுங்க ஐயா. புரியுதுங்களா? ….
வழிபாடு நிறைய பண்ணனும். பண்ணா என்ன ஆகும்? திருப்பி அவர் பார்த்துப்பார்
வந்து. ஏன்னா அந்த ஆன்மாவோட ரகசியம் தெரிஞ்சுக்கிட்டீங்க இல்லையா?
அடியவர் 1 :- ஆமாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்க பிறப்போட நோக்கமே அதுதான்.
குருநாதர்:-
( பிறவி ரசிய வாக்கு ) ……. அதனால் இப்பிறப்பில் சில சில வழிகளிலும் கூட
பணத்தை …… ( விதியின் பரம ரகசியத்தை எடுத்து உரைத்தார்கள் )
அடியவர் 1 :- சரிங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- ( விதியின் அதி ரகசிய விளக்கங்கள் எடுத்து உரைத்தார்கள்……)
குருநாதர்:-
நிச்சயம் அமைதி அமைதியாக இருந்தாலும் நிச்சயம் ……. பின் அணைத்துக்
கொள்வான். கவலை இல்லை. எப்பொழுதும் அணைத்துக் கொண்டு விட்டான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( விதியின் ரகசிய விளக்கங்கள் எடுத்து உரைத்தார்கள்……)
குருநாதர்:-
பின் நிச்சயம் முருகன் நல்வடிவாக பின் அறிந்து கூட பின் பல வகைகளிலும் கூட
நன்மைகள் தான் உண்டு. இதனால் (....இறைவன்) பின் எவை என்று கூற பக்தனுக்கு
பின் எவ்வாறு எப்பொழுது கொடுக்க தெரியும் என்பவை எல்லாம் (....இறைவனே)
அறிவான். கவலை விடுங்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் பாருங்கள்.
============================================
# பல இடங்களில் ஜோதிடம் பார்த்தும், நன்மை இல்லையே
============================================
குருநாதர்:-
தாயே, தந்தையே, பல வகைகளில் கூட பின் நிச்சயம் தன்னில் கூட நீங்கள்
நிச்சயம் எவை என்று புரிந்தும் கூட, பின் அலைந்து ஆனாலும் பின் நன்மை
இல்லையே.மனிதர்கள் இடத்திலும் கூட.
சுவடி ஓதும்
மைந்தன் :- (நிறைய ஜோசியம்/மனிதர்களை பார்த்துட்டீங்க; “ஜோசியம்
சொல்றேன்”ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க, ஆனாலும் அதனால உங்களுக்கு எந்த
நன்மையும் புரியலன்னுதான் அவர் சொல்கிறார்)
=================================================
# உண்மை நிலை என்ன என்று எந்த ஜோதிடனும் சொல்லவில்லை
==================================================
குருநாதர்:- அறிந்த கூட உண்மை நிலை பின் தெளிவு படவில்லை.
சுவடி
ஓதும் மைந்தன் :- உண்மை நிலை என்ன? எத்தனையோ ஜோசியம் பார்த்திருந்தாலும்,
எத்தனையோ ஜாதகம் பார்த்திருந்தாலும், உண்மை நிலை என்ன என்று யாரும்
சொல்லல..
============================================
# ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிறவி இருக்கின்றது.
============================================
குருநாதர்:-
எதை என்று புரிய. இதனால் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகத்தான் பிறவி.
நிச்சயம் தன்னில் கூட. அதேபோலத்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிறவி
இருக்கின்றது.
==============================================
# சரியான வழியில் நடந்திட, நிச்சயம் இறைவன் பல வகைகளிலும் கூட துன்பப்படுத்துவார்.
==============================================
# அத் துன்பப்பட்ட பின்புதான் சரியான வழியிலே செல்ல முடியும்.
==============================================
குருநாதர்:- ஆனால் நிச்சயம் அதை சரியான வழியில் பின் நடந்திட, நிச்சயம் இறைவன் பல வகைகளிலும் கூட துன்பப்படுத்துவான்.
குருநாதர்:- அத் துன்பப்பட்ட பின்புதான் சரியான வழியிலே செல்ல முடியும்.
சுவடி
ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா? எல்லாருக்கும் ஒரு ஒரு வேலை
இருக்குது. அந்த வேலை நீங்க வந்து, சரியா பண்ணலைன்னா என்ன ஆகும்?
அடியவர் :- கஷ்டப்படணும்.
சுவடி
ஓதும் மைந்தன் :- கஷ்டப்பட்டு தான். கஷ்டப்படணும். அந்த கஷ்டப்பட்டு,
கஷ்டப்பட்டு அந்த வழியா,அப்புறம் கடைசில என்ன பண்ணுவீங்க? அந்த வழியில
வந்து ஆனா தெரியாது இல்ல? மனுஷனுக்கு வந்து அந்த கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு
அதுல ஒரு வழி வழியில போயிட்டீங்கன்னா என்ன ஆகும்? அப்பதான் கொடுப்பாரு.
அதுவரைக்கும் என்ன பண்ணுவாரு?
அடியவர் :- சோதிப்பார்.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன பண்ணுவாரு? சோதிப்பார். அப்ப இவருக்கு என்ன பிறவின்னு தெரிஞ்சு போச்சு. அப்ப முருகன் என்ன பண்ணுவாரு?
குருநாதர்:- ( தனி வாக்குகள் …)
சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள்….. )
குருநாதர்:-
நல்விதமாக பல ஆலயங்களிலும் கூட நிச்சயம் பின் யானும் பார்த்தேன். கவலைகள்
வேண்டாம். நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய அதனால் பின் …….. எவை
என்று கூட அனைத்தும் நிச்சயம் அவன் அருளால்தான் . நிச்சயம் அவனே
ஏற்படுத்தும் அனைத்தும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள்….. )
குருநாதர்:- ஆனாலும் தந்தை எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட தாயவளும் கூட துணை.
சுவடி ஓதும் மைந்தன் :- ( எம்பெருமான் ஈசனும், அன்னை பார்வதி தேவியும் துணை )
குருநாதர்:-
அறிந்தும் இதைத்தன் எவை என்று புரிய. ஆனாலும் அனுதினமும் பின் பயிற்சிகளை
பின் நிச்சயம் தன்னில் கூட, சிரசாசனத்தை நிச்சயம் பின் இவன்தன் பின்
மதித்து செய்ய வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- சிரசாசனம். அதிகாலையில என்ன பண்ணனும்?
அடியவர் :- தலையை கீழ வச்சு……
சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா?
குருநாதர்:-
எவை எதை என்று அறிய பின் அதிக அளவு கரிசலாங்கண்ணி எனும் மூலிகையும் கூட.
பின் பொன்னாங்கன்னி எனும் மூலிகை கூட நிச்சயம் தாயே, பின் எவை என்று புரிய
பின் அனுதினமும் கூட.
குருநாதர்:- (தனி வாக்குகள்….. )
சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் …)
( சில வாக்குகள் …சில விளக்கங்கள் ……)
================================================
# நிச்சயம் செயற்கை உணவுகளை நிச்சயம் தவிர்த்தல் நன்று.
================================================
குருநாதர்:- எதை புரிய நிச்சயம் செயற்கை உணவுகளை நிச்சயம் தவிர்த்தல் நன்று.
அடியவர் :- பாஸ்ட் ஃபுட் உணவு.
சுவடி
ஓதும் மைந்தன் :- பாஸ்ட் ஃபுட் எல்லாம் சாப்பிடக்கூடாது. ஓகேங்களா?
எப்பா, பாஸ்ட் ஃபுட் எல்லாம் நிறைய சாப்பிடக்கூடாது. ஓகேவா?
குருநாதர்:- இதை எதை என்று புரிய பின் இடை இடையே பின் அவரைக்காய் எனும் மூலிகையும் கூட நிச்சயம் இவன் எடுத்துக் கொண்டு நன்று.
குருநாதர்:- எதை இன்னும் கூட பின் பசை போன்ற பின் எவை காய்களை கூட
அடியவர் :- வெண்டைக்காய்…..சேனைக்கிழங்கு
சுவடி ஓதும் மைந்தன் :- வெண்டைக்காய். அப்புறம் அதெல்லாம் இவர் எடுக்கணும். பசை போன்ற காயெல்லாம் இவர் எடுக்கணும்.
============================================
# நாம் என்ன வேண்டும் என்று இறைவனிடம் கேட்டு வந்துள்ளோமோ , அது விதியாக மாறுகின்றது.
============================================
குருநாதர்:-
அப்பனே, நிச்சயம் எதை என்று புரிய. அதனால் அப்பனே, இவை போன்றது தான்
நிச்சயம், பின் இறைவன் பின் கேட்டுள்ளது விதியாக மாறுகின்றது. இதனால் விதி
தன்னில் கூட. ஆனாலும் நிச்சயம் பின் …..மாற்றி விடுவான்.
சுவடி
ஓதும் மைந்தன் :- (அதனால் நம்ம என்ன வந்து கேட்டு வர்ரோமோ, அது என்ன
ஆகுது? விதியா மாறுகின்றது. அதனால அந்த விதி அப்படியே வந்து பதிஞ்சிடுது.
அப்ப விதியிலே என்ன ஆகுது? இது வந்து அப்படியே இருக்குது. அதை வந்து …வந்து
ஈஸியா மாத்திடுவார். )
=====================================
# குருநாதர் சொல்லியதை பின் அழகாக செய்ய நன்று.
=====================================
குருநாதர்:- கவலைகள் வேண்டாம். நிச்சயம் யான் சொல்லியதை பின் அழகாக செய்ய நன்று.
=================================================
# எதிர்பார்ப்புடன் செய்யும் வழிபாடுகள் நிச்சயம் தோல்வியை தந்துவிடும்.
=================================================
குருநாதர்:- பின் அதாவது பின் பலன்களை எதிர்பார்க்கக் கூடாது.
சுவடி ஓதும் மைந்தன் :- அதை செஞ்சா….. அப்படி எல்லாம் வரும்னு சொல்லிட்டு நீங்க எதிர்பார்க்கக்கூடாது.
குருநாதர்:-
அப்பப்பா, பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே எதிர்பார்ப்பு, அப்பனே,
நிச்சயம் தன்னில் கூட. அப்பனே. பின் கடைசியில் அப்பனே, பின் நிச்சயம்
தன்னில் தோல்வியை தந்துவிடும்.
சுவடி ஓதும்
மைந்தன் :- எதையும் , எதன் என்ன செஞ்சாலும், எதிர்பார்ப்புடன் செஞ்சா
என்ன ஆகும்? தோல்வி. தோல்வியில் முடிஞ்சிரும். எதிர்பார்ப்பு
இருக்கக்கூடாது.
==============================================
# இறைவனிடத்தில் எதிர்பார்ப்பு இருக்க கூடாது.
==============================================
குருநாதர்:- அப்பனே, நிச்சயம் தன்னில் அறிந்து கூட பின் இறைவனிடத்தில் அப்பனே எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது.
சுவடி
ஓதும் மைந்தன் :- இறைவன் கிட்ட எதிர்பார்ப்போடு இருக்கக்கூடாது.
எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது. சொல்லிட்டாரா? செஞ்சுட்டே போயிடணும்.
========================================================
# ஆசிரியரிடம், யார் அடி முட்டாள் என்ற பட்டம் வாங்குவது?
========================================================
குருநாதர்:-
பின் அப்பனே, நிச்சயம் தன்னில் அம்மையே நிச்சயம் அறிந்தும் அறிந்தும்
குறித்து வைத்துக்கொண்டு. அதாவது பின் ஆசிரியன் நிச்சயம் மாணவனை பார்த்து,
இதை நிச்சயம் பின் செய்துவிட்டு வா என்றால் செய்து விடுகின்றேன் என்று
சொல்லிட்டு, ஆனாலும் மீண்டும் ஏன் செய்ய வேண்டும்? எதற்காக என்றெல்லாம்
பின் கேட்டால் அவனை விட முட்டாள் யாருமில்லை.
சுவடி
ஓதும் மைந்தன் :- ஒரு ஆசிரியர் இதை படிச்சிட்டு வா என்றால் படிச்சிட்டு
வந்தரணும். அப்புறம் வந்து அது ஏன் பண்ணனும்? எழுதணும்?
அடியவர் :- ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்கக்கூடாது.
சுவடி
ஓதும் மைந்தன் :- ஏன் எதுக்கு கேள்வி கேட்டான்னா என்ன ஆகும்? அங்கேயே
அவர் ஃபெயில். ஏன்? நான் ஏன் படிக்கணும்? நான் ஏன் எழுதணும்? என்று
சொன்னாருன்னா என்ன ஆகும்?....
============================================
# முதலில் பக்தி அதை தெளிவுபடுத்த வேண்டும்.
# அதற்காகவே கூட்டு பிரார்த்தனைகள்.
===========================================
குருநாதர்:-
அதனால் அப்பனே, உண்மை நிலை தெரியவில்லை. அப்பனே, பக்தி என்பது என்னவென்று?
அப்பனே, பின் நிச்சயம் மனிதருக்கு தெரியவில்லை அப்பா. முதலில் அதை பின்
தெளிவுபடுத்த வேண்டும். அதற்காகவே அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட
அப்பனே பல வகையிலும் கூட்டு பிரார்த்தனைகள்.
சுவடி
ஓதும் மைந்தன் :- முதல்ல பக்தி என்பது தெரியல மனுஷனுக்கு. அந்த பக்தி
என்பது என்ன? அது தெரிஞ்சுகிட்டா மட்டும்தான் வாக்கு சொன்னாலும், என்ன
ஆகும்? புரியும்.
குருநாதர்:- நலங்களாகவே,
இதனால் கவலைகள் இல்லை. தாயே, எதை என்று புரிந்து கூட இதனால் நல்விதமாகவே
நிச்சயம் தன்னில் கூட பின் எதை. அறிந்தும் அறிந்தும் கூட பின் உங்களுக்கு
பின் எதை என்று பின் நன்மைகளாகவே பின் இறை பலங்கள் அதிகரித்துக் கொண்டே
போகும். கவலைகள் வேண்டாம். நிச்சயம் பின் ஒரு ஆன்மா நிச்சயம் தன்னில் கூட
பின் அருகிலிருந்தே வழிநடத்தும். கவலைகள் வேண்டாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( தனிப்பட்ட விளக்கங்கள் )
குருநாதர்:- ( தனி வாக்குகள் )
குருநாதர்:-
அப்பனே ஆனாலும் ஏன் எதற்கு என்று நிச்சயம் இவை இப்பொழுது
தெளிவுபடுத்தவில்லை. அப்பனே, அனைவருக்கும் இவ் சந்தேகங்கள் உண்டு என்பேன்.
அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் :-
எப்படி ஆன்மா ஏதுன்னு சொல்லிட்டு எல்லாருக்கும் சந்தேகம் உண்டு. ஆனா இப்ப
நான் அது தெளிவுபடுத்த மாட்டேன். அந்த ஆன்மாவினுடைய விளைவுகள் என்ன? ஏது
என்ன? எல்லாம் ஒரு இதுல ஆன்மாவோட ஒருத்தர் ஒருத்தர் பந்தம் பாசம்
சொல்லிட்டு அது இப்ப வந்து புரியாது. தெளிவு இருக்காது.
குருநாதர்:- ( தனி வாக்குகள் ........) அப்பனே பின் அழகாக வழியும் நடத்துவான். வழியும் செய்வான். கவலைகள் விடு.
=======================================================
# இறைவன் எழுதியதை மற்றும் சக்தி மனிதனுக்கு நிச்சயம் கிடையாது
=======================================================
குருநாதர்:-
அப்பனே, இதனால்தான் இறைவன் என்ன எழுதி உள்ளானோ அப்பனே, அதை மாற்ற
உலகத்தில் மனிதனுக்கு நிச்சயம் அப்பனே எவை என்று புரிய அப்பனே, பின் அதாவது
அருள் கிடையாதப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் என்ன எழுதுகிறாரோ, அதை மாத்துறதுக்கு யாராலும் மனிதனாலும் முடியாது.
==========================================================
# விதி பின் எழுதியவனுக்கு மட்டுமே மீண்டும் மாற்றி எழுத முடியும்.
# சொல்லிவிட்டேன். அனைவரும் உணருங்கள்.
==========================================================
குருநாதர்:-
அப்பனே, வேண்டுமானாலும் அப்பனே, பின் நிச்சயம் மனிதன் சொல்லிக்
கொண்டிருக்கலாம். பின் அப்பொழுது இப்பொழுது என்று அப்பனே. ஆனாலும் நிச்சயம்
தன்னில் கூட பின் விதி பின் எழுதியவனுக்கு மட்டுமே மீண்டும் அப்பனை,
மாற்றி எழுத முடியும். அப்பனே, சொல்லிவிட்டேன். அனைவரும் உணருங்கள்.
அடியவர் :- எழுதினவர் மட்டும்தான் மாற்ற முடியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- எழுதினவர் யார்? என்ன எழுதி இருக்காங்களோ, அதுதான் நடக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் யார் எழுதினார்களோ, அவங்க மட்டும்தான் மாத்த முடியும்.
================================================
# நல்ல எண்ணங்களோடு இருந்தால், சித்தர்களே தெளிவுபடுத்தி இவ்வாறு செய்க என்றெல்லாம் சொல்வோம்.
===============================================
குருநாதர்:-
நிச்சயம் ஒவ்வொன்றும் அதனால் நிச்சயம் நல்ல எண்ணங்களோடு இருந்தால்,
நிச்சயம் யாங்களே தெளிவுபடுத்தி பின் இவ்வாறு செய்க என்றெல்லாம் சொல்வோம்.
அதனை பயன்படுத்திக் கொண்டு நிச்சயம் இறைவன் நிச்சயம் அறிந்து கூட.
குருநாதர்:- பின் இவையெல்லாம் பின் அறிவியல் வழியாக ஒரு நாள் எடுத்துரைக்கின்றேன்.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்குகள் தொடரும்……)
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

.jpg)
No comments:
Post a Comment