இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
வணக்கம் அடியவர்களே!
ஸ்ரீ
லோபாமுத்திரா அம்மாவின் திருநட்சத்திரம் (மார்கழிமாதம், சதயம்
நட்சத்திரம்) 25/12/2025, வியாழக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் மாலை 5
மணிக்கு, மதுரையில் உள்ள சக்திமாரி அம்மன் கோவிலில் (தியாகராஜ மில் காலனி,
மூலக்கரை, பசுமலை) உள்ள ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் சன்னதியில்
அபிஷேக ஆராதனைக்கு, அகத்தியர் அடியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அகத்தியப்பெருமானின்
அடியவர்கள் வந்து உழவாரப் பணியும் செய்து பங்கு பெற்று, குருநாதர்,
அம்மாவின் ஆசி பெற்று செல்லுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
அவர்கள் அருளால், மாலை 5 மணிக்கு அபிஷேக பூஜைகளை தொடங்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் வருக! ஆசிகள் பெறுக!
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

.jpg)
No comments:
Post a Comment