அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 21/12/2025 அன்று நடந்த இலங்கை கொட்டாச்சேனை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1
தேதி : 21/12/2025, ஞாயிற்றுக்கிழமை. நேரம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை.
இடம் : ஸ்ரீ வரதராஜ விநாயக ஆலயம், சாய் சரணாலயம், கொட்டாச்சேனை, கொழும்பு
இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
====================================
ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன்.
அப்பனே, அம்மையே, அனைவருக்குமே பின் அறிந்தும் புரிந்தும் ஆசிகள்.
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பின் ஆசீர்வாதங்கள் பெற்றுத்தான் உள்ளீர்கள்.
சுவடி
ஓதும் மைந்தன் :- நீங்கள் எல்லாருமே ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு இறைவனுடைய
ஆசிகள் நீங்க எல்லாமே பெற்று தான் இருக்கின்றீர்கள் என்று சொல்கின்றார்
அகத்தியர்.
குருநாதர் :- அப்பனே,
குறைகள் வேண்டாம். ஏனென்றால், அப்பனே, அனைத்து அனுபவங்கள் தான் அப்பனே,
இறைவனைக் கூட பின் வந்து என்ன செய்யலாம் என்பதை எல்லாம் அப்பனே.
சுவடி
ஓதும் மைந்தன் :- ஏனென்றால், நீங்க எல்லாம் இறைவனைத் தேடித் தேடி சில
அனுபவங்கள் பெற்றிருப்பீர்கள். அந்த அனுபவத்தின் மூலம் மட்டும்தான்,
அனுபவத்தின் மூலமாக மட்டும்தான், மற்றவர்களையும் காக்க முடியும்.
மத்தவங்களுக்கும் நன்மை செய்ய முடியும்.
குருநாதர்
:- அப்பா, இறைவனை, இறைவன் அனைவரையும் தேர்ந்தெடுப்பதில்லை. அனுபவசாலிகளே,
அப்பனே, பின் கஷ்டத்தில், அப்பனே, பின் அதாவது உள்ளுணர்ந்து, அப்பனே, பல
வகையில் கூட உண்மைகளை உணர்ந்தவர்களைத்தான் இறைவன் வரவழைத்து, அவர்கள்
மூலம், அப்பனே, மற்றவர்களுக்கும் சேவை செய்ய, அப்பனே, நிச்சயம்
வைக்கின்றான் அப்பா, இறைவன்.
குருநாதர்
:- அம்மையே, அப்பனே, கவலை வேண்டாம். பல உண்மைகளை இப்பொழுது யான்
எடுத்துரைப்பேன் அப்பனே அறிந்து கூட. இதனால், அப்பனே, உண்மைப் பொருளை எதை
என்று தெரியாமல் வணங்கினாலும், நிச்சயம் தன்னில் கூட இறைவன் ஆசீர்வாதங்கள்
கிடைக்குமா என்ன அப்பனே? நிச்சயம் கிடைக்காது அப்பா. ஆனாலும் உண்மையை,
அப்பனே, புரிந்து கொண்டால் அப்பனே, இறைவனின் ஆசீர்வாதமும் கிட்டும். மோட்ச
பதவியும் அடையும் என்பேன் அப்பனே இதனால், அப்பனே.
=================================
# இலங்கை - உலகின் மூலாதாரம்
=================================
குருநாதர்
:- அப்பனே, இதனால் தான், அப்பனே, பல உண்மைகளை சொல்லப் போகின்றேன்
அப்பனே. இங்கு பல அதிசயங்கள் அப்பனே, இவ் தேசத்தில் என்பேன் அப்பனே.
ஆனாலும், அப்பனே, இவை தான், அப்பனே, மூலமாகவே அனைத்து தேசங்களிலும் கூட,
அப்பனே, பின் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
சுவடி
ஓதும் மைந்தன் :- மூலாதாரம் இலங்கை இங்கதான். இந்த மூலாதாரத்தின் மூலமாக
தான், வந்து, எல்லாமே, எல்லா உலகமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
குருநாதர்
:- அப்பனே, அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இங்கு பக்தி
என்பது அப்பனே, பின் மிக மிக, அப்பனே, பலம் வாய்ந்தது என்பேன் அப்பனே. யார்
ஒருவன் அதிக பக்தி செலுத்துகின்றானோ, அப்பனே, அவன் இங்கு பலசாலியாகவே
வாழ்வான்.
===================================
# உலகம் அழியக் கூடாது என்று இராவணேஸ்வரன் இலங்கை முழுவதும் பல மறைமுகமான பொருட்களை புதைத்து வைத்துள்ளார்.
===================================
குருநாதர்
:- அப்பனே, இதை என்று புரிய. இதனால், அப்பனே, நிச்சயம் மறைமுகமான
பொருள்கள் எல்லாம், அப்பனே, பின் இராவணன் புதைத்து வைத்துள்ளான் அப்பா,
அங்கங்கு. இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவ்வுலகம் அழியக்கூடாது
என்பதற்கிணங்க, அப்பனே, இன்னும் கூட அவைதன், அப்பனே, ஒளியாகவே, அப்பனே,
அதாவது, நிச்சயம் தன்னில் கூட வானத்திற்கும் கூட, அப்பனே, பின், அதாவது,
அப்பனே, பின், அதாவது, அனைத்தும், பின், அப்பனே, அவை தன் ஒளிக்
கற்றைகளாகவே, அப்பனே, வட்டம் அடித்துக் கொண்டே இருக்கின்றது.
குருநாதர்
:- அப்பனே, இதனால் எதை என்று சொல்ல? அப்பனே, இதனால்தான், அப்பனே, பின்
அனைத்தும், அப்பனே, பின், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் முன்
உரைத்தபடியே, அப்பனே, பின், அதாவது பாதி (இலங்கை) , அப்பனே, பின் அழிந்து
விட்டது என்பேன் அப்பனே. கலியுகம் தொடங்குவதற்கு, அப்பனே, எதை என்று புரிய
அப்பனே, சரியாகவே, அப்பன், நிச்சயம் தன்னில் கூட அழிவுகள். இதனால்,
அப்பனே, சிறிது சிறிதாக, அப்பனே, உங்களுக்கு தெரியாமலே, அப்ப, நிச்சயம் இதை
நான் சொன்னேனே.
சுவடி ஓதும்
மைந்தன் :- (கலியுகம் தொடங்கிய நாளிலிருந்தே உலகம் மெதுவாக அழிவின்
பாதையில் பயணிக்கத் தொடங்கியது. இன்று உலகம் அதன் முதன்மை நிலையின் பாதி
அளவிலேயே உள்ளது; மீதி எல்லாம் அழிந்து விட்டது. இதை 19.12.2025 அன்று
நடந்த கூட்டு பிரார்த்தனையில் , குருநாதர் அகத்திய மாமுனிவர்
கதிர்காமத்தில் வாக்குகளாக உரைத்தார். அந்த அழிந்து போன பகுதி எங்கு
இருந்தது என்றால், அது இலங்கையின் தெற்குப் பகுதியில் அதாவது குமரிக்கண்டம்
என்று அழிந்து மறைந்துள்ளது )
==============================
# இராவணன் , கும்பகர்ணன், குபேரன் - இல்லங்கள் ரகசியங்கள்.
==============================
குருநாதர்
:- அப்பனே, அறிந்தும் புரிந்தும், அப்பனே, இதனால், அப்பனே, எவை என்று
அறிய அப்பனே, பின் இராவணன், அப்பனே, இன்னும் எதை என்று அறிய அப்பனே,
ஒவ்வொரு அப்பனே, இன்னும் எதை என்று புரிய அப்பனே, அறிந்தும் கூட, அப்பனே,
பின் இன்னும் எதை என்று அறிய அப்பனே, இவர்கள் இல்லமெல்லாம் மறைந்து கிடந்து
அப்பனே, இருக்கின்றது இன்னும் கூட, அப்பனே.
சுவடி
ஓதும் மைந்தன் :- ( இராவணன் தொடர்பான பல விஷயங்களும், மேலும் அறியப்பட
வேண்டிய பல அம்சங்களும் இன்னும் மறைந்தபடியே உள்ளன. இவர்கள் வாழ்ந்த
இடங்களும், அவர்களுடன் தொடர்புடைய பல தலங்களும் இன்றும் மறைந்து
கிடக்கின்றன. இலங்கையைச் சுற்றி இன்று நீர் பரந்து விரிந்துள்ளது. அந்த
நீரின் அடிப்பகுதியில் இராவணனின் இல்லம் இருந்ததாகவும், அதேபோல்
கும்பகர்ணனின் இல்லமும், குபேரனின் இல்லமும் இன்னும் கூட அங்கு மறைந்து
கிடக்கின்றது. )
=================================
# ராகுவும் கேதுவும் நீரிலேயே மறைந்துள்ளது.
=================================
குருநாதர்
:- அப்பப்பா, அறிந்தும் இதை என்று அறிய ஆனாலும், அனைவரும் அறிய இயலாதவை
ஒன்று, எதை என்று புரிய ராகுவும் கேதுவும் மாய கிரகங்கள் என்றே. ஆனாலும்,
ராகுவும் கேதுவும் பின் நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது நீரிலேயே, பின்
நிச்சயம் தன்னில் கூட மறைந்துள்ளது என்பேன்.
சுவடி
ஓதும் மைந்தன் :- (ராகுவும் கேதுவும் இலங்கையின் கீழ் பகுதியில், அந்த
நீரின் ஆழத்தில் இக்கிரகங்களின் தத்துவம் நிலைபெற்றிருக்கிறது )
==============================
# ராகு கேது பலம் இருந்தாலே பணங்கள்
==============================
குருநாதர்
:- இதைத்தன் உணர்ந்து அறிந்தும் இவை என்று அறிய. ஆனாலும், அவை தன் எவை
என்று புரிய. இதனால்தான், நிச்சயம் தன்னில் கூட, பின் பலங்கள் அதிகம் பெற
பின் இந்நாட்டிற்கு அறிந்து கூட, பின் ஓடி ஓடி அறிந்து கூட, பின் இராவணனும்
அறிந்து கூட, எதை என்று அறிய. சிறப்பாக பணத்தின், பின் பணத்தின் மீது,
பின் எதை என்று கூட, இன்னும் சிறப்பாக, பின் குபேரனும் கூட. இதனாலே, அதன்
பக்கத்திலே அறிந்தும் புரிந்து கூட, பின் இல்லங்கள் அமைத்து அறிந்து கூட,
பின் பல வகையில் கூட நன்மைகள் குபேரனே.
சுவடி
ஓதும் மைந்தன் :- (ராகுவும் கேதுவும் கொடுத்தால் மட்டும் தான் செல்வந்தன்
ஆக முடியும். ராகுவும் கேதுவும் கிரகங்கள் எங்கு இருக்கின்றது என்றால் ,
இலங்கை இங்கே கடல் நீரில் மறைமுகமாக உள்ளது. அதன் பக்கத்தில் தான்
குபேரனே இல்லம் அமைத்து இருக்கிறார்)
குருநாதர்
:- இதை என்று அப்பனே, இதை யார் அறிவார் அப்பனே?, நிச்சயம் தன்னில் கூட?.
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, ராகுவும், அப்பனே, பின் கேதுவும்,
அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட பல, அப்பனே, பின் பல வழிகளில் கூட, பல
லட்ச பிறப்புகள் அப்பனே, பின் குபேரன் எடுத்து, அப்பனே, ராகுவும் கேதுவும்
எங்கு இருக்கின்றார்கள் என்று தேடி. அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் ஒரு
நாள், அப்பனே, கண்ணிற்குத் தென்பட்டது. அப்பனே, அவர்கள் எங்கும் இல்லை.
நீரில்தான் என்று அப்பனே. இதனால், அப்பனே, இங்கு வந்து விட்டான் அப்பா.
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இதனால், அருகிலே, அப்பனே, நிச்சயம் இதனால்,
அப்பனே, இன்னும் கூட, அப்பனே, அறிந்தும் புரிந்தும் கூட.
சுவடி
ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (பல பிறப்புகளை எடுத்துப் பின்,
குபேரன் ஒரு முக்கியமான கிரகத் தத்துவத்தை அறிந்து கண்டுபிடித்தார். அந்தக்
கண்டுபிடிப்பின் கர்த்தா குபேரனே. அவர் பல யோசனைகளின் வழியாகவும், பல
பிறவிகளின் அனுபவங்களின் மூலம் இறைவனை அடைந்து, “செல்வத்தின் அடிப்படை
காரணம் யார்?” என்று ஆராய்ந்தபோது, ராகு–கேதுவே அதற்கான முக்கியத் தத்துவம்
என உணர்ந்தார். ராகு–கேது எங்கு நிலைத்திருக்கின்றன என்பதை அறிந்தவுடன்,
குபேரனின் ஞானம் மேலும் விரிவடைந்தது . அவர் செய்த பெரும் தவங்களின் பயனாக,
அந்த கிரகங்கள் எங்கு மறைந்து உள்ளன என்பதைத் தேடி அறிந்தார். அவை நீரின்
ஆழத்தில் நிலைத்திருக்கின்றன என்று அறிந்து கொண்டார். அந்த நீரின்
அடிப்பகுதியில் அவை அமைந்துள்ளதால், அதன் அருகிலேயே குபேரனும் தனது
இல்லத்தை அமைத்துக்கொண்டார்.)
==============================
# குபேர ரகசியங்கள் - ராகு கேது பக்கத்தில் இருந்தால் , உலகம் அழியும் வரை பெயர் நிலைத்தது நிற்கும்.
==============================
குருநாதர்
:- இப்படியே எதை என்று புரிய (குபேரன்) இவன் வம்சத்தில் பின் இன்னும்
பின் வரிசையாகவே இவர்கள் கற்றுக் கொடுத்து, ராகுவும் கேதுவும் அருகிலே
இருந்தால், பின் இத்தேசம் அறியும் அழியும் வரை யாராலும் ஒன்றும் செய்ய
இயலாது. பின் பெயர், பின் சரியாகவே, பின் நின்றுவிடும் என்றெல்லாம்.
சுவடி
ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (குபேரனின் வம்சத்தில் பிறந்தவர்கள்
எண்ணிலடங்கா பேர். அவர்களில் குபேரன், ராகு–கேதுவின் தத்துவத்தை ஆழமாக
உணர்ந்தவராக விளங்கினார். ராகு மற்றும் கேதுவின் சக்திக்கு அருகாமையில்
நிலைத்திருப்போர், உலகம் அழியும் வரையிலும் தமது பெயரும் பரம்பரையும்
அழியாது நிலைத்திருப்பார்கள் என்பதை அவர் தெளிவாக அறிந்திருந்தார். இந்த
அறிவைத் தமது வம்சத்துக்கும் மறைவில்லா ரகசியமாகப் பகிர்ந்து வழங்கினார்)
===============================
# குபேர ரகசியங்கள் - ராகு கேதுக்களை அறிந்து வைத்திருப்பவன் குபேரனே
===============================
குருநாதர்
:- அப்பப்பா, அறிந்தும் புரிந்தும், அப்பனே, ராகு கேதுக்களை அப்பனே
அறிந்து வைத்திருப்பவன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, குபேரனே.
குருநாதர்
:- அப்பனே, ராகு கேதுக்களை யார் ஒருவர் அறிகின்றார்களோ, அவர்களை உலகம்
போற்றும் என்பேன் அப்பனே. உலகம் அழிவிலிருந்து காக்கலாம் என்பேன் அப்பனே.
===============================
# குபேர ரகசியங்கள் - ஏன் குபேரன் பெயர் என்றும் அழியாது ?
===============================
குருநாதர்
:- இதனால் அப்பனே, குபேரன் நாமம் சரியாக, அப்பனே, பின் அறிந்து
வைத்திருக்கின்றான் அப்பனே. இதனால்தான் இவன் நாமம் அப்பனே, அழியாதப்பா
அப்பனே, எப்பொழுதும் கூட.
===========================
# இலங்கை தேசத்தவருக்கும் குபேரன் வாரி வாரி வழங்குவார்
==========================
குருநாதர்
:- அப்பனே, இதனால், நிச்சயம் தன்னில் கூட இவ் தேசத்தவருக்கும், அப்பனே,
நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அனைவருக்குமே அவன் சொந்தக்காரன் என்பேன்.
அப்பனே, இதனால், அப்பனே, அனைத்தும் வாரி வழங்குவான். அப்பா,
குருநாதர்
:- அப்பனே, எங்கிருந்தாலும், அப்பனே, ஆனாலும், மனிதனின், அப்பனே,
நிச்சயம், அப்பனே, அறிந்தும் கூட எண்ணங்கள் மாறிவிட்டதால், அப்பனே, சிறிது
கோபம் தான் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- குபேரனுக்கு கோபம். மனிதனின் எண்ணங்கள் மாறிவிட்டதால், அதனால் சில கோபங்கள்.
================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் - ராகு கேது ரகசியங்கள் ஆரம்பம்
================================
குருநாதர்
:- அப்பப்பா, இவை தன் அறிந்தும் கூட, அப்பனே, எதை என்று புரிய. இதனால்,
அப்பனே, இன்னும், அப்பனே, அறிந்தும் எதை என்று அறிய. அப்பனே, ராகு
கேதுக்களை பற்றியே இன்றளவு உரைக்கின்றேன் அப்பனே. இதை, அப்பனே, சரியாகவே
இருந்தாலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உலகம், அப்பனே, பின்
அழிவிலிருந்து காக்கப்படும் என்பேன் அப்பனே.
==================================
# அகத்திய மாமுனிவர் ரகசியங்கள் - தவம் செய்தால் மட்டுமே ராகு கேதுக்களை உணர முடியும்
==================================
குருநாதர்
:- அப்பப்பா, இவை தன் நிச்சயம் தன்னில் கூட. இதனால், அப்பனே, அவ் ராகு
கேதுக்களை, அப்ப, நிச்சயம் தவம் செய்தால் மட்டுமே, நிச்சயம் தன்னில் கூட,
அப்பனே, இன்றளவும், அப்பனே, பின் உணர முடியும் என்பேன் அப்பனே.
குருநாதர்
:- ராகு கேதுக்களை பற்றி கூட, அப்பனே, யார் என்பதை எல்லாம், அப்பனே,
விவரமாக ஏற்கனவே நான் எடுத்துரைத்திருக்கின்றேன். அப்பனே, இதனால், ராகுவும்
கேதுவும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, என், அதாவது சந்தோஷமும், அப்பனே,
நிச்சயம் எதை என்று அறிய, அழிவும் கூட, ராகு கேதுக்கள், அப்பனே,
கிரகங்களுக்கு கீழ்த்தான், அப்பனே, உண்டு என்பேன் அப்பனே.
===========================
# ராகு கேதுக்கள் கடலின் ஆழத்தில் சுரா கல்லைச் சுற்றி வட்டம் அடித்துக்கொண்டே, நீந்திக் கொண்டே இருக்கின்றன.
===========================
குருநாதர்
:- அப்பனே, இவை தன் அறிந்து, அறிந்து, அப்பனே, பல மக்கள், அப்பனே,
நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் எதை என்று புரிய. அப்பனே, யானே சொன்னேனே.
அப்பனே, நல்விதமாக அறிந்தும், அப்பனே, அதாவது, அப்பனே, சுரா கல் என்பேன்
அப்பனே நிச்சயம் தன்னில் கூட,
குருநாதர் :- அவை தன் , அப்பனே, அப்படியே, அப்பனே, பின், அதாவது, பிம்பம் என்பேன் அப்பனே, எதை என்று அறிய.
குருநாதர்
:- அப்பனே, இவை தன், அப்பனே, கண்ணாடி, கண், கண்களில் நிற்கும் ஆடியின்
வழியே அப்பனே, எப்படி, எப்படி, அப்பனே, பின் பார்வை தெரிகின்றதோ, அதேபோல,
அப்பனே,அவ் சுரா கல்லின் அப்பனே, பின், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே,
ஊடுருவும் அப்பனே. இதை சூழ்ந்து, அப்பனே, பின் அறிந்து கூட, பின், அப்பனே,
அவை தான், அப்பனே, இருக்கின்றது.
சுவடி
ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( எப்படி ஒரு பொருள் நமது கண்களில்
உள்ள ஆடியின் வழியே நமக்கு பிம்பங்கள் தெரிகிறதோ, அதே போல இலங்கையின்
தெற்கு பகுதியில் கடலில் ஆழத்தில் உள்ள சுரா கல் மீது ராகு கேதுக்கள் ஒளி
ஊடுருவும்.)
(இங்கு இதனை ஒரு எளிய பட வடிவில் அடியவர்கள் புரிந்து கொள்ள அளித்துள்ளோம்.)
குருநாதர்
:- இவைத்தன் அறிந்தும் புரிந்தும், இதைத்தன் அறிந்தாலும், எவை என்று
அறிய, அறிந்தும் இவைத்தன். இதனால்தான், பின் இதற்கும் கூட, அறிந்தும் கூட,
பின் அறிந்தும், எவை என்று அறிய, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் கடல்
நீரில் தன்னில் கூட, பின் நிச்சயம் நீந்திக்கொண்டே, நீந்திக்கொண்டே.
===============================
# நமது உலகம் அழியக் கூடாது என்று இராவணேஸ்வரர் இன்னும் தவங்கள், தியானங்கள் செய்து கொண்டே இருக்கின்றார்.
==============================
குருநாதர்
:- இவைத்தன் அறியா, இன்னும் கூட எதை என்று புரிய. இதனால்தான் இன்னும்
கூட, பின் இராவணன் நிச்சயம் அழியக்கூடாது என்பதற்கிணங்க, பின் தவங்கள்,
தியானங்கள் செய்து கொண்டே இருக்கின்றான்.
குருநாதர்
:- நிச்சயம் கலியுகத்தில், பின் ஆரம்பத்திலே பல ஞானிகள் பிறந்து,
அவர்களும் தவங்கள் செய்து கொண்டே இருக்கின்றார்கள். உலகம் அழியக்கூடாது
என்பதற்கிணங்க,
குருநாதர் :-
ஆனாலும் அவர்கள் இவ்வாறு, பின் நிச்சயம் தன்னில் கூட, ஆனாலும் அறிந்து கூட,
ஆனாலும் நிச்சயம் எவ்வாறு என்பதையெல்லாம் மனிதன் எல்லை மீறுகின்ற பொழுது,
அவர்களுக்கும் கூட கோபம் வருகின்றது. இதனால்தான் அழிவுகள்.
==================================
# ஏன் கூட்டுப் பிரார்த்தனை மிக அவசியம் ?
==================================
குருநாதர்
:- அப்பனே, ஏன் அவர்களும் தவங்கள், தியானங்கள் செய்து கொண்டிருக்க
வேண்டும் அப்பனே? இவ்வாறு பின் நிச்சயம் செய்து கொண்டிருந்தாலே, அப்பனே,
பின் அதாவது, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட அழிவுகள் கூட, அப்பனே,
நிச்சயம் தடுக்கப்படும் என்பேன் அப்பனே.
குருநாதர்
:- இதனால்தான், அப்பனே, எண்ணங்களுக்கு அவ்வளவு சக்தி என்பேன் அப்பனே.
அதனால்தான் கூட்டுப் பிரார்த்தனையில், அப்பனே, அனைவரும் ஒன்றாக, அப்பனே,
இணைந்து, அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் இறைவனை நினைத்து, அப்பனே, பின்
அதாவது, அனைவரும், அப்பனே, மனதில் கூட, பின் பிரார்த்தனை, அப்பனே, நிச்சயம்
என்ன வேண்டும் என்பதை எல்லாம் வைத்தால், அப்பனே, உடனடியாக
கிடைத்துவிடும்.
===================================
# இறைவன் என்ன நினைக்கின்றார் ?
===================================
குருநாதர்
:- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இறைவன் என்ன நினைக்கின்றான் என்றால்,
அப்பனே, அனைவரும் பின் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
குருநாதர் :- அப்பனே, அனைவரும் ஒரே குடும்பம் அப்பனே.
குருநாதர் :- இவ்வுலகம் என்பது, அப்பனே, எதை என்று கூட, அனைவருக்கும் சொந்தம்.
குருநாதர் :- பின் உலகத்தில் உள்ள அனைவருமே ஒரே குடும்பம்.
குருநாதர் :- தன்னைப் போலே பிறரை எண்ணவேண்டும் என்பதையெல்லாம் (இறைவன் நினைக்கின்றான்) அப்பனே.
குருநாதர் :- ஆனாலும் அதற்கு மீறி, அப்பனே, மனிதன், அப்பனே, இருக்கின்றான் அப்பா. இதனால்தான், அப்பனே, அழிவுகள்.
குருநாதர்
:- அப்பனே, இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இறைவன், அப்பனே,
எதை என்று புரிய. அப்பனே, அறிந்தும் புரிந்தும் கூட, அப்பனே, எவர் எவர்
என்பதை எல்லாம், அப்பனே, அதாவது, ஆதியிலே, அப்பனே, நிச்சயம் மனிதனிடத்தில்,
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, தன் செல்ல குழந்தைகளிடம், அப்பனே,
பின் நிச்சயம் உலகத்தை, பின் நிச்சயம் காப்பாற்றி, அப்பனே, நிச்சயம்
தன்னில் கூட, எதை என்று அறிய.
குருநாதர்
:- அப்பனே, நிச்சயம் செல்ல குழந்தைகள் காப்பாற்றுவார்கள் என்றெல்லாம்
நினைத்து, அப்பனே, வாழ்க்கையை மனிதனிடத்திலே, அப்பனே, பின் ஒப்படைத்தான்
இறைவன்.
குருநாதர் :- ஆனாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இப்பொழுது அப்படி இல்லை அப்பா, மனிதன், அப்பனே.
==================================
# கூட்டுப்பிரார்த்தனைக்கும் - மனிதர்களின் ஒலி அலைகளுக்கும் , அவ் சுரா கல்லுக்கும் உள்ள தொடர்பு என்ன ?
==================================
குருநாதர்
:- அப்பனே, அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய, மீண்டும் அப்பனே,
அறிந்தும் எதை என்று புரிய, அப்பனே, அதாவது இன்னும் அப்பனே, அறிந்தும்
புரிந்தும் கூட, அப்பனே, அச் சுரா கல்லானது அப்பனே, பின் அதன், அப்பனே,
நிச்சயம் தன்னில் கூட, அதன் முன்னே, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட,
அனைத்தும் தடுக்கப்பட வேண்டும் என்பேன் அப்பனே.
குருநாதர்
:- அப்பனே, இவ்வாறாக இறைவனை நினைத்துக் கூட்டுப் பிரார்த்தனை செய்தால்
மட்டுமே, அப்பனே, அதாவது, அச் சுரா கல்லுக்கு அனைத்தும் தெரியும்.
அப்பா.
குருநாதர் :- அப்பனே,
அறிந்தும் எதை என்று அறிய. அப்பனே, அதாவது, அப்பனே, அனைத்தும் ஈர்க்கும்
சக்தி அப்பனே, அதற்கு உண்டு என்பேன் அப்பனே.
=====================================
(கூட்டுப்
பிரார்த்தனையில் சிவபுராணம் பாடினால் , அனைவரின் உச்சரிப்பில் ஒட்டுமொத்த
ஒலி அலைகள் விஸ்வரூபம் எடுத்து உலகில் ஊடுருவும். அது அவ் சுரா கல்லைச்
சென்று அடையும்)
=====================================
குருநாதர்
:- இவ்வாறு அப்பனே, பின் ஒலி அலைகளாகவும், அப்பனே, நிச்சயம் தன்னிலே
சென்றால், அப்பனே, பின் பதிவுகள், அப்பனே, பின் ஏற்படுத்தி, அப்பனே,
நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இன்னும், அப்பனே, பின் அதன், அப்பனே,
அதிலிருந்து, அப்பனே, இன்னும், அப்பனே, பின் முன்பே எதை என்று அறிய.
=================================
# பூமியை தாக்க , பல கோடி மைல்கள் தூரத்திலிருந்து ஒரு மிகப் பெரிய அலை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
=================================
குருநாதர்
:- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பல கோடி, அப்பனே, மைல் தன்னில் கூட,
அப்பனே, ஒரு அலை, பெரிய அலை வந்து கொண்டே இருக்கின்றது. அப்பா.
குருநாதர்
:- அப்பனே, அவை தன் வந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே,
அனைத்தும் நீராகவே காட்சி அளிக்கும் என்பேன் அப்பனே. இதனால்தான், அப்பனே,
அப்பனே, நிச்சயம் அக்கல்லுக்கு, அப்பனே, கேட்க வேண்டும் என்பேன் அப்பனே.
(கூட்டுப் பிரார்த்தனையில் சிவபுராணம் பாடி ) ஒலி அலைகள், அப்பனே, பின்
நிச்சயம் தன்னில் எழுப்ப வேண்டும் என்பேன் அப்பனே.
குருநாதர்
:- இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பல ஞானிகள், அப்பனே, பல பல
வழிகளில் கூட, அப்பனே, வந்து, அப்பனே, பின் இதைத்தன், அப்பனே, வாயால்,
நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, உச்சரித்தால், அப்பனே, அக்கல்லுக்கு நன்றாக
கேட்கும் அப்பனே.
=================================
# கூட்டுப் பிரார்த்தனை செய்தால் - சுரா கல் அதற்கு சக்தி அதிகமாகும்
=================================
குருநாதர் :- அப்படிக் கேட்டால், அப்பனே,அக்கல்லுக்கு இன்னும் சக்திகள் அதிகமாகும்.
குருநாதர் :- அதிகமாகின்ற பொழுது, அப்பனே, அப்பனே, அலை வருகின்றதே. அப்பனே, நிச்சயம், அப்பனே, அதை அப்படியே தடுத்து நிறுத்தும்.
குருநாதர்
:- அப்பனே, இதுதான், அப்பனே, பின் நீங்கள் செய்யும் அப்பனே, பின் அதாவது,
அப்பனே, பின் இறைவனுக்கு, அப்பனே, எவை என்று அறிய.
குருநாதர்
:- இதனால்தான், அப்பனே, பல பாடல்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,
அப்பனே, அறிந்தும் புரிந்தும், ஞானிகள் அழகாகவே, அப்பனே, செப்பிவிட்டேன்
அப்பனே.
குருநாதர் :- அப்பா,
இவ்வாறாகவே, அப்பனே, அறிந்தும் புரிந்தும் கூட, அப்பனே, அவ் அலையானது
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் நேராகவே, அப்பனே, நிச்சயம்
தன்னில் கூட, அப்பனே, பின் எவை எவை தடுத்தாலும், அப்பனே, நிற்காதப்பா.
நேராக, அப்பனே, மலையை நோக்கி போய்விடும் அப்பா.
சுவடி
ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (அந்த அலை ஒரு கோடி கிலோமீட்டர்
தொலைவிலிருந்து எழுந்து தொடர்ந்து நாம் வாழும் இவ் புவியை நோக்கி
முன்னேறிக் கொண்டிருக்கிறது. அந்த அலைக்கு எதிராக எதுவும் தடை செய்ய
முடியாது. அப்படியே அந்த அலை வந்துச்சுன்னா என்ன ஆகுமாம்? இமய மலை மேல் ,
மேலே ஏறிடும் அந்த அலை. அந்த அலையை , சுரா கல்லை தவிர வேறு எதனாலும்
கட்டுப்படுத்த முடியாதது.)
குருநாதர்
:- அப்பா, அறிந்தும் வந்து கொண்டே தான் இருக்கின்றது. அது எத்தனை நாட்கள்
என்பதை எல்லாம் யாம் அறிவோம். ஆனாலும் இப்பொழுது வேண்டாம்.
குருநாதர்
:- இதை என்று அறிவித்து, ஆனாலும் இதனால்தான், நிச்சயம் மனிதனுடைய
எண்ணங்கள் அறிந்தும் எவை என்று புரிய. அவ்வளவு சக்திகள், அதாவது, பின்
கதிர் இயக்கங்கள் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, மனிதனிடம், அதாவது,
மனிதன், மனிதன் என்பவனே ஒரு கதிர் இயக்கம் தான்.
குருநாதர் :- இக் கதிர் இயக்கத்தால், பின் அவ் மலைக்கு (சுரா கல் அதற்கு ) சக்திகள் கொடுத்து, பின் அவ் அலையை நிறுத்தலாம்.
சுவடி
ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( மனிதன் என்ற இந்தக் கதிர்
இயக்கத்தின் மூலம் அந்த மலைக்கு—அதாவது சுரா கல்லுக்கு—சக்தி வழங்க
முடியும்; அப்படிச் சக்தி பெற்ற பின், பூமியை தாக்க வந்து கொண்டிருக்கும்
அந்தப் பெரும் அலையைத் தடுத்து நிறுத்தவும் இயலும். மனிதன் யார் என்றால்,
அவர் கதிர் இயக்கத்தின் உருவமே. நாம் நம்மை சாதாரண மனிதர் என்று எண்ணிக்
கொண்டிருக்கிறோம்; ஆனால் உண்மையில் மனிதன் என்பது கதிர் இயக்கத்தின்
வெளிப்பாடு. இந்தக் கதிர் இயக்கத்தின் வல்லமையால் அந்தச் சுரா கல்லுக்கு
ஆற்றல் வழங்க முடியும், அந்த ஆற்றலின் மூலம், நம்மை நோக்கி எழுந்து வரும்
அலைகளை அடக்கவும் முடியும்.)
==========================
# மனிதனின் கதிர் இயக்கத்திற்கு , அதை இயக்கும் சக்தி, திருவாசகம், தேவாரம், இன்னும் இன்னும் பல பல பாடல்கள்.
=========================
குருநாதர்
:- இவைத்தன் அவ்வாறு, நிச்சயம் தன்னில் கூட, இப்பொழுதே எதை என்று கூற
அறிந்தும், இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, இவ் கதிர் இயக்கத்திற்கு
அறிந்தும் கூட, பின் அதாவது, இயக்கும் சக்தி, திருவாசகம், தேவாரம், இன்னும்
இன்னும் பல பல பாடல்கள்.
குருநாதர்
:- அப்பா, அறிந்தும் கதிர் இயக்கத்திற்கு, அப்பனே, பின் சக்திகள்
கொடுத்துவிட்டால், அனைத்தும் தானாக நடந்துவிடும் என்பேன் அப்பனே.
=============================
# மனிதன் = கதிர் இயக்கம்.
=============================
குருநாதர்
:- அப்பப்பா, அதை யாரும் கொடுப்பதே இல்லை. இதனால்தான், அப்பனே,
மனக்கஷ்டங்கள், போராட்டங்கள், வாழ்க்கை இழப்பு. அப்பனே, கடைசியில், அப்பனே,
தெய்வத்தை காணாமலே போய்விடுகின்றான்.
சுவடி
ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (மனிதன் என்ற இந்த கதிர்
இயக்கத்துக்கு சரியான சக்தியை (பவர்) மனிதன் கொடுப்பது இல்லை. அதனால்
என்ன ஆகும் என்றால் , மனிதனுக்கு கஷ்டம் வருகின்றது. துன்பம் வருகின்றது.
என்னடா என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று புலம்பி , கடைசியில் அந்த
வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது.)
=============================
# தினமும் சக்தி கொடுங்கள் உங்கள் கதிர் இயக்கத்திற்கு…
=============================
குருநாதர் :- இக்கதிர் இயக்கத்திற்கு அனைத்தும், அதாவது, இயக்கம் சக்தி இருக்கின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- (மனிதன் = கதிர் இயக்கம். கதிர் இயக்கம், அது என்ன சொல்லுவாங்க? )
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- ரேடியேஷன் ( electromagnetic radiation )
சுவடி
ஓதும் மைந்தன் :- (ரைட். யார் சொன்னது அம்மா? ரேடியேஷன். உடம்பு என்பது
ஒரு ரேடியேஷன். ஆமா, இன்னும் அதுக்கு, அந்த ரேடியேஷன் இன்னும் இன்னும்
அதுக்குசக்தி கொடுக்கணும். )
குருநாதர்
:- நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட இதற்கு சக்தி இல்லை என்றால்,
நிச்சயம் பின் அனைத்தும், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பின் சிறிது
சிறிதாக, நிச்சயம் தன்னில் கூட, நோய்களும், கஷ்டங்களும், பண இழப்புகளும்
வந்து கொண்டே. இதனால், நிச்சயம் இதற்கு எப்பொழுதும் சக்திகள் கொடுத்துக்
கொண்டே இருக்க வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த கதிர் இயக்கத்துக்கு வந்து எப்பவுமே சக்தி கொடுத்துட்டே இருக்கணும். ஓகேங்களா?
குருநாதர் :- அப்பனே, எரியும் எரி அப்பனே, நிச்சயம் அதற்கு அறிந்து கூட கதிரியக்கம் எதை என்று புரிய. அப்பனே,
சுவடி
ஓதும் மைந்தன் :- (ஒரு விளக்குக்கு மின்சாரம் அவசியமானதுபோல், மனிதன்
பிரகாசமாக வாழ வேண்டுமென்றால், அவனுள் தொடர்ந்து ஓடும் உள் சக்தி அவசியம்.
அந்த சக்தி அவனை ஊட்டிக் கொண்டே இருந்தால் தான் அவன் நன்றாக வளர்ந்து ஒளிர
முடியும்; இல்லையெனில் மனச்சோர்வு, கஷ்டம், தோல்வி போன்றவை வந்து எதையும்
சாதிக்க முடியாத நிலை உருவாகும்)
=============================
# ஞானிகள் தெளிவாக அறிந்து வைத்திருந்தனர் - கதிரியக்க ரகசியங்களை
=============================
குருநாதர்
:- இதைத்தன், நிச்சயம் தன்னில் அறிந்தும் புரிந்தும், அதாவது, இறைவனுக்கு
எவ்வாறு என்பதை எல்லாம் எதை என்று புரிய. இதனால்தான் இவையெல்லாம் ஞானிகள்
தெளிவாக அறிந்து வைத்திருந்தனர் பல ஞானிகள்.
குருநாதர்
:- நிச்சயம் கலியுகத்தில் மனிதன் தன்னை உணரப்போவதில்லை. இதனால் எவை என்று
புரிய, புரியாமல் வாழ்ந்து வாழ்ந்து கொண்டிருப்பான். இதனால் தன்னையும்
காக்க முடியாது. தன் சுற்றி உள்ளவரும் காக்க முடியாமல், நிச்சயம்
அழிந்துவிடுவான்.
================================
# அபாய எச்சரிக்கை உலகிற்கு - சுரா கல்லிற்கு சக்திகள் குறைந்து கொண்டே வருகின்றது
================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட ஆனாலும், பின் அவ் கல்லிற்கு சக்திகள் குறைந்து கொண்டே வருகின்றது.
===============================
# சக்தி குறைவடையும் சுரா கல் - மனிதர்களிடம் இருந்து சக்திகளை எடுக்கும்
===============================
குருநாதர்
:- இவ்வாறு குறைந்து கொண்டே வந்தால், நிச்சயம் கதிர் இயக்கங்கள் அங்கே,
அங்கே ஈர்த்து சில விதிப்படி இதனை கூட யான் சொல்கின்றேன். பின் அங்கு
ஈர்த்துவிட்டால், பின் அனைவருக்கும் நோய்கள் வந்துவிடும்.
சுவடி
ஓதும் மைந்தன் :- ஒரு எல்லைக்கு ரேடியேஷன் நம்ம உடம்புல இருக்குது. அந்த
கல்லுக்கு ரேடியேஷன் லைட்டா குறையுது. புரியுதுங்களா, ஐயா? அப்ப அந்த
ரேடியேஷன் நிமிடம் இருந்து தான் அந்த கல்லுக்கே போகுது. எனக்கு தெரிஞ்சு,
அப்படின்னா உண்மை புரியுதுங்களா? அந்த ரேடியேஷன் என்பது நம்மகிட்ட இருந்து
தான் அதுக்கு போகுது. அப்ப அதனோட ரேடியேஷன் என்ன ஆகுது? கதிரியக்கம் என்ன
ஆகுது? சுரா கல் அதுக்கு என்ன ஆகுதுன்னா, அதுக்கு குறைஞ்சுகிட்டே வர, வர,
நம்ம கையிலிருந்து ஈர்த்துக்குது. புரியுதுங்களா? அப்ப என்ன ஆகும்? நம்ம
கையில ஒண்ணுமே இருக்காது. அப்ப என்ன ஆகும்? வந்து ஒண்ணுமே இல்லைன்னா,
நோய்கள் வந்துரும். நிறைய நோய்கள் வரும்.
==============================
# மனிதனின் உடம்பில் உள்ள கதிர் இயக்கம், மனிதனை விட்டு போய்க்கொண்டே இருந்தால் …. பைத்தியம் போலே திரிவான் மனிதன்
==============================
குருநாதர்
:- இவ்வாறாக, நிச்சயம் அவை தன் சக்திகள் அங்கு அறிந்தும் புரிந்தும்
போய்க்கொண்டே இருந்தால், நிச்சயம் தன்னில் கூட பின் மனக்குழப்பங்கள், பின்
கஷ்டப்படும். இன்னும் சூழ்நிலை, பின் தன்னை தன், அதாவது ஒருவர் ஒருவன் மனம்
புரிந்து கொள்ளாமல், பைத்தியம் போலே திரிவான் மனிதன்.
===============================
# உங்களுக்கும் சக்திகள் ஏற்ற வேண்டும். அதே நேரத்தில் சுரா கல்லிற்கும் சக்திகள் ஏற்ற வேண்டும்.
==============================
குருநாதர்
:- அப்பா, இதனாலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், அறிந்தும்
புரிந்தும், இதனாலே, அப்பனே, பின் உங்களுக்கு சக்திகளும் ஏற்ற வேண்டும்.
அதற்கும் சக்திகள் ஏற்ற வேண்டும். அப்பொழுதுதான் அழியாதப்பா.
=================================
# யாங்கள் அறிவியல் வழியாக, அனைத்தும் வெளியே கொண்டு வருவோம்.
=================================
குருநாதர்
:- அப்பனே, இவை தன், அப்பனே, யாங்கள் கண்டுபிடித்தோம் அப்பனே நிச்சயம்
தன்னில் கூட. அப்பனே, அவையெல்லாம் வெளியே கொண்டு வருவோம். அப்பனே, நிச்சயம்
தன்னில் கூட. அறிவிலும் அப்பனே, எப்படி அப்பனே, பின் இறைவனை பார்க்க
முடிகின்றது என்பதில்.
குருநாதர்
:- அப்பா, இங்கு ஒன்று சொல்கின்றேன். அப்பா, இன்னும் இறைவனைப் பற்றி
பேசிக்கொண்டிருந்தாலே, கலியுகத்தில் பின் மனிதன் பொய் என்று தான்
சொல்லுவான்.
================================
# கலியுகத்தில் பல உண்மைகள் இனி அறிவியல் வழியாக மனிதனுக்கு எடுத்துரைப்போம்
================================
குருநாதர்
:- ஆனாலும் சித்தர்கள் யாங்கள் விடப்போவதில்லை. அறிவியல் வழியாகவே
எடுத்துரைப்போம். அப்பொழுது பின் என்ன செய்வார்கள் மனிதர்கள் ?
===============================
# கதிர் இயக்கம் குறைந்தால் - இறைவனைப் பார்க்க முடியாது
===============================
குருநாதர்
:- அறிந்தும் ஏனென்றால், இக் கதிர் இயக்கம் நிச்சயம் தன்னில் கூட
அறிந்தும் புரிந்தும் குறைந்து எவை என்று அறிய. பின் இவ்வாறாகவே சக்திகள்
குறைந்து கொண்டே வந்தால், நிச்சயம் தன்னைத்தானே பாதுகாக்க முடியாது.
நிச்சயம் தன்னில் கூட இறைவனைப் பார்க்கவா முடியும்?
===============================
# ஏன் சித்தர்கள் இவ்வளவு வாக்குகள் சொல்லி வருகின்றார்கள்?
===============================
குருநாதர்
:- இதனால்தான் நிச்சயம் ஆனாலும் மனிதர்கள் ஏதோ எவை என்னுடைய இறைவனை பின்
தொழுது தொழுது இறைவன் நல்லது செய்வான் என்றெல்லாம் எண்ணிக்கொண்டு, ஐயோ
பாவம்! ( மனிதர்கள் ).
குருநாதர் :- அதனால் தான் உலகத்தை பின் எப்படி எல்லாம் நிச்சயம் உண்மை இருக்கின்றது என்பதை யாங்கள் சொல்ல வந்தோம்.
சுவடி
ஓதும் மைந்தன் :- ( மனிதன் கஷ்டம் வந்தால் இறைவனை நம்பி வணங்கி, அவர்
நன்மை செய்வார் என்று எதிர்பார்க்கிறான்; ஆனால் உண்மையான நிலை என்ன என்பதை
அறியாமல் இருப்பதால் தான் அவன் தவிக்கிறான். அந்த உண்மையைப்
புரிந்துகொண்டால் அவனும் நல்லவராக இருக்க முடியும், அவன் சுற்றத்தாரும்
நன்மை பெற முடியும், அனைவரும் நல்லதைச் செய்ய முடியும். அதனால் சித்தர்கள்
மனிதனை ஐயோ பாவம் என்று எண்ணி , இறைவன் யார் என்பதை அறியாதவர்களுக்கு,
உண்மையை உணர்த்துவதற்காகவே இந்த வாக்குகள் மூலம் சொல்ல சித்தர்கள்
வந்துள்ளார்கள். இன்னும் பல வாக்குகள் வரும் அனைவருக்கும்)
குருநாதர் :- இவைத்தன் நன்கு உணர்ந்து விட்டால், நிச்சயம் உங்களை நீங்களே வெல்லலாம்.
குருநாதர் :- அறிந்தும் கூட இறைவனையும் காணலாம்.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அழிவிலிருந்தும் காக்கலாம்.
குருநாதர்
:- இதனால்தான் நிச்சயம் மனிதனிடத்தில் இவ்வளவு சக்திகள் வைத்துக்கொண்டு,
நிச்சயம் தன்னில் கூட கடைசியில் இவ்வுடம்பு எதற்கும் உதவாமல்
போய்விடுகின்றது. பின் ஏனென்றால் மனிதன் தன்னைப் பற்றி உணர்வதில்லை.
===============================
# ஏன் உலகில் அழிவுகள் பல வருகின்றது என்று அதிர்ச்சி உண்மை !!!
=============================
குருநாதர்
:- அப்பப்பா, இன்னும் கூட அப்பனே, நீங்கள் அனைவரும் கேட்கலாம். ஏன்
அடிக்கடி அழிவுகள் வருகின்றது என்றெல்லாம்? அப்பனே, நிச்சயம் தன்னில்
அறிந்தும் புரிந்தும் அப்பனே.
குருநாதர்
:- அதாவது அப்பனே, அறிந்தும் புரிந்தும் எவை என்றறிய, பின் அக்கல்லுக்கு
பின் கீழேயும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, அறிந்தும். அப்பனே,
அதாவது எவை என்று புரிய.
==================================
# சுரா கல்லின் கீழே ஒரு பெரிய நெருப்பு உள்ளது
==================================
குருநாதர்
:- அப்பனே, நெருப்பு எரிந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே.
நிச்சயம் அக்கல்தான் அனைத்தும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட காத்துக்
கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அப்பனே, அவ் நெருப்பானது. அப்பனே, நிச்சயம் நட்சத்திரங்களுடன் தொடர்புடையது என்பேன் அப்பனே.
குருநாதர்
:- இவ்வாறாக நிச்சயம் தன்னில் எது என்று புரிய அப்பனே, இவ் நெருப்பானது
அப்பனே, ஒரு விதத்தில் அப்பனே, திடீரென்று பலமாக அப்பனே, பின் எரிகின்ற
பொழுது, அப்பனே, பின் அக்கல்லை விட மேல் நோக்கி வந்து, அப்பனே, பின்
அறிந்தும் புரிந்தும் கூட அப்பனே, பின் இவ்வாறாக, அதாவது ஒவ்வொரு அப்பனே,
நிச்சயம் தன்னில் கூட நட்சத்திரங்களைத் தாக்கும் என்பேன் அப்பனே. அவ்வளவு
வேகம் என்பேன் அப்பனே அவ் நெருப்பிற்கு. இதனால், அப்பனே, அவ்
நட்சத்திரம், அப்பனே, கீழே விழும் என்பேன் அப்பனே.
குருநாதர்
:- அங்குதான் அழிவுகள் என்பேன் அப்பனே, நிச்சயம் அவை தன் விஞ்ஞானியாலும்
கண்டுபிடிக்க முடியாது அப்பா. உடனடியாக அங்கே அழிவு ஏற்படும். இதுதான்,
அப்பனே, அதை எப்படித் தடுப்பது என்பதை எல்லாம் யான் உங்களுக்கு
எடுத்துரைப்பேன் அப்பனே.
சுவடி
ஓதும் மைந்தன் :- ( இலங்கையின் தென்பகுதி கடலில் , சுரா கல்லின் அடியில்
எரிந்து கொண்டிருக்கும் ஒரு வலிமை மிக்க நெருப்பு, திடீரென அதிக அடர்த்தி
மற்றும் சக்தி பெற்றால், அது ஒரு கணத்தில் மிகுந்த வேகத்துடன் மேலே எழும்பி
நட்சத்திரத்தைத் தொடும் அளவுக்கு உயரும். அந்த தாக்கம் நட்சத்திரத்தை நிலை
இழக்கச் செய்து கீழே விழச் செய்யும்; அது விழும் இடத்தில் தவிர்க்க
முடியாத அழிவுகள் நிகழும். இதனை எந்த விஞ்ஞானத்திலும் கண்டுபிடிக்க
முடியாது.)
==================================
# செயற்கைக்கோள் - அதுவும் படம் பிடிக்க முடியாது.
=================================
குருநாதர் :- ஆனாலும் எதை என்று அறிய, இவை தான் இப்பொழுது செயற்கைக்கோள் என்கின்றார்கள். அதுவும் படம் பிடிக்க முடியாது.
சுவடி
ஓதும் மைந்தன் :- ( அவ்வளவு தூரத்தில் நுணுக்கத்திலும் நடைபெறும் அந்த
நிகழ்வுகளை எந்தக் கேமராவாலும் அல்லது செயற்கைக்கோளாலும் பதிவு செய்ய
முடியாது. செயற்கைக்கோள்கள் அண்டத்தின் ஆழத்திற்குச் சென்றாலும், அந்த
அளவுக்கு வேகமாகவும் திடீரெனவும் நிகழும் நிகழ்வுகளைப் பிடிக்கும் திறன்
அவற்றுக்கில்லை; எனவே அவை மனிதனின் கருவிகளால் காணப்படாதவை ஆகவே
இருக்கும்.)
==============================
# கீழே விழும் ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு.
==============================
குருநாதர்
:- இதைத்தன் நிச்சயம் தன்னில் கூட பின் நட்சத்திரங்களுக்கு ஒவ்வொன்றும்
எதை என்று அறிய. பின் அதற்கும் பின் பலன்கள் உண்டு. எதை என்று புரிய.
இதனால், நிச்சயம் எதனால் அழிவு அறிந்தும் புரிந்தும்.
குருநாதர் :- அப்பனே, அறிந்தும் புரிந்தும் கூட இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒரு நட்சத்திரத்திற்கு, அப்பனே, நிச்சயம் மழை.
குருநாதர்
:- அப்பனே, ஒவ்வொரு அப்பனே, இன்னொரு அப்பனே, நட்சத்திரத்துக்கு, அப்பனே,
மனிதனின், அப்பனே, மனிதனின் எண்ணங்கள் மாறக்கூடும்.
குருநாதர் :- இன்னொரு ஒரு நட்சத்திரத்திற்கு, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் நிலம் அதிர்வு.
குருநாதர் :-இவையெல்லாம், அப்பனே, இன்னும் பல லட்சம். அப்ப, நிச்சயம் இவ்வாறு நட்சத்திரங்கள்.
சுவடி
ஓதும் மைந்தன் :- (ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித்துவமான சக்தியும்
தாக்கமும் உள்ளது. ஒரு நட்சத்திரத்தின் மாற்றம் நிலநடுக்கம் போன்ற இயற்கை
நிகழ்வுகளை உருவாக்கும்; மற்றொன்று மழையை ஏற்படுத்தும்; இன்னொரு
நட்சத்திரத்தின் தாக்கம் மனிதர்களின் மனநிலையையே மாற்றி, சமூகத்தில்
கலக்கம் மற்றும் வன்முறையை உருவாக்கும். இவ்வாறு, ஒவ்வொரு நட்சத்திரமும்
தனித்தனி ஆற்றலைக் கொண்டதால், அவற்றின் மாற்றங்கள் உலகத்திலும் மனிதர்களின்
வாழ்க்கையிலும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்)
=================================
# கீழே விழும் நட்சத்திரங்களை எப்படி தடுத்து நிறுத்துவது ?
=================================
குருநாதர் :- அப்பா, அறிந்தும் ஆனால் அவ் நட்சத்திரம் கூட அங்கேயே தங்க வேண்டும். அப்பனே, நிச்சயம் நீங்கள் என்ன செய்வீர்கள்?
குருநாதர்
:- அப்பனே, அறிந்தும் எது என்று புரிய. அப்பனே, இதனால், அப்பனே, நீங்கள்
நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக. அப்பனே, இவ் கதிர் இயக்கத்தை பலமாக
இயக்கினால், அப்பா, அறிந்தும் கூட, அப்பனே, நல்ல விதமாக, இவ் கதிர்
இயக்கம், அப்பனே, நிச்சயமாக அக்கல்லை நோக்கி செல்லுமடா.
சுவடி
ஓதும் மைந்தன் :- ( நமது உடலில் உள்ள கதிர் இயக்கத்தை
அதிகப்படுத்தினால், அந்த ஆற்றல், சுரா கல்லை நோக்கி செலுத்தப்படும்; அதே
சக்தி மனிதனின் உள்ளத்திலும் உயர்ந்து, அவனுடைய எண்ணங்களும் செயல்களும்
வெற்றி பெரும். அதே நேரத்தில் சுரா கல்லும் சக்தி ஊட்டப்படும்.)
குருநாதர்
:- நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக, நிச்சயம் அக்கல்லும் பின் சமநிலை.
இன்னும் சக்திகள் பெருகி, நிச்சயம் தன்னில் கூட பின் அழுத்திக் கொள்ளும்.
அறிந்தும் கூட, அதனால் அவன் நெருப்பை குறைவாக, எதை என்று புரிய. இன்னும்
குறைவாக்க, நிச்சயம் இக் கல்லால் முடியும். இதனால் மனிதனிடத்திலே அனைத்து
சக்திகளும் இருக்கின்றது.
சுவடி
ஓதும் மைந்தன் :- (கூட்டுப் பிரார்த்தனையின் மூலம் மனிதர்கள் உடம்பில்
கதிர் இயக்கம் அதாவது ரேடியேஷன் அதிகமாகும் பொழுது , கூட்டுப்
பிரார்த்தனையின் மூலம் அந்த சுரா கல்லுக்கும் சக்தி அதிகரிக்கும். அப்போது
அதன் சுரா கல் , தனக்கு கீழே உள்ள அந்த நெருப்பை கண்ட்ரோல் செய்துவிடும்.
அப்படி கண்ட்ரோல் செய்யும் போது என்ன ஆகும்? ஐயா)
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- உலகம் காப்பாற்றப்படும்.
சுவடி
ஓதும் மைந்தன் :- (உலகம் காப்பாற்றப்படும். ஆம், உலகம் காப்பாற்றப்படும்.
அதனால், உலகைக் காப்பாற்றும் பொறுப்பு மனிதனின் கைகளில்தான் உள்ளது.)
குருநாதர்
:- எது என்று புரிய. இதனால்தான் உங்களுக்கு தெளிவு உதிக்க மனிதனுக்கு
அழகாக அறிவு கொடுத்து தான் அனுப்புகின்றான். ஆனால் நிச்சயம் பின் அறிவு
இல்லாத செயல்கள் எல்லாம் செய்து, மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொண்டு,
அனைவரையும் அழித்துக் கொண்டிருக்கின்றான்.
==============================
#
கூட்டுப் பிரார்த்தனையின் எந்த இதிகாசம், இன்னும் பல புத்தகங்கள்
வேண்டுமானாலும் படிக்கலாம். அது அந்த சுரா கல்லிற்குச் சேர்ந்துவிடும்.
சுரா கல் சக்தி அதிகரிக்கும்.
==============================
குருநாதர்
:- அப்பனே, இதற்காகத்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அனைவரும் ஒன்றாக
இணைந்து, அப்பனே, இன்னும், அப்பனே, இதிகாசங்கள், அப்பனே, இன்னும் எது
என்று அறிய. இப்படித்தான், அப்பா, இன்னும் பல புத்தகங்கள் என்பேன் அப்பனே.
எவை வேண்டுமானாலும், அப்பனே, கூட்டு பிரார்த்தனை நீங்கள் படியுங்கள்
என்பேன் அப்பனே. ஆனாலும், அப்பனே, அனைத்தும், அப்பனே, அக்கல்லிற்குச்
சேரும் அப்பா, சக்திகளை உருவாக்க.
==============================
# கூட்டுப் பிரார்த்தனை செல்வச் செழிப்போடும் , உடல் ஆரோக்கியத்துடன் வாழ
==============================
குருநாதர்
:- நிச்சயம் தன்னில் கூட. இதனால்தான், அப்பனே, அறிந்தும் கூட, அனைவரும்
ஒன்றாக இணைந்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு எல்லாம் . அப்பனே,
அப்பனே, இன்னும் பல ஆயிரம், அப்பனே, ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாறு எல்லாம்
இருந்தது அப்பா. இதனால் மக்கள் அழியாமல் செல்வச் செழிப்போடும்
வாழ்ந்தார்கள் பின், அப்பனே.
குருநாதர்
:- ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் அது மறந்து மறந்து போய், அப்பனே,
இவ்வாறாக, அப்பனே, பின் மறந்து மறந்து போய் இருக்கின்றார் மட்டுமே. அப்பனே,
நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, உலகம் அழிந்து கொண்டே வருகின்றது.
குருநாதர் :- அப்பனே, கலியுகம் தொடர்வதற்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட
சுவடி
ஓதும் மைந்தன் :- (கலியுகம் தொடர்வதற்கு முன்பு , மக்கள் கூட்டுப்
பிரார்த்தனையின் முக்கியத்துவத்தை மறந்து விட்டனர். அதன் விளைவாக, பல
உண்மைகள் மற்றும் நுண்ணறிவுகள் மனிதனுக்குத் தெரியாமல் போகின்றன; இதனால்
வாழ்க்கையில் பல சிக்கல்களிலும் குழப்பங்களிலும் சிக்கித் தவிக்கிறார்கள்)
=============================
# உண்மையை தெரிந்து கொண்டாலே உங்களிடம் மாற்றங்கள் உண்டாகும்
=============================
குருநாதர்
:- அப்பனே, இன்னும் பல விஷயங்களை யான் சொல்வேன். அப்பனே,
நட்சத்திரங்களைப் பற்றி கூட, அப்பனே, நல்ல விதமாக அறிந்து கூற கிரகங்கள்
பற்றி கூட
குருநாதர் :- அப்பனே, இதை தெரிந்து கொண்டாலே, அப்பனே, நிச்சயம் மாற்றங்கள் அப்பா உங்களுக்கு.
குருநாதர்
:- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தெரியாமல் இருந்தால், அப்பனே, அதாவது
தேர்வு, அப்ப, நிச்சயம் தன்னில் கூட தேர்வை எழுதுகின்றீர்கள். அப்பனே,
ஆனால் தெரிந்து தான் எழுதுகின்றீர்களே. அப்பனே, தெரியாமல் இருந்தால் என்ன
ஆகும்?
சுவடி ஓதும் மைந்தன் :-
(ஒரு தேர்வில் தேர்ச்சி பெற படிப்பது அவசியமானதுபோல், வாழ்க்கையின்
உண்மைகளை அறிந்துகொள்வதும் அவசியம் என்று கூறுகிறார். படிக்காமல்
தேர்வுக்கு சென்றால் தோல்வி வரும்; அதுபோல் உண்மையை அறியாமல் வாழ்ந்தால்
சரியான முன்னேற்றத்தையும் அடைய முடியாது. ஆனால் உண்மையைப்
புரிந்துகொண்டால், தேர்வில் பாஸ் செய்வதுபோல் வாழ்க்கையிலும் முன்னேற்றம்
உறுதியாக கிடைக்கும்.)
=============================
# உண்மை நிலை தெரிந்து கொண்டாலே நிச்சயம் வெற்றி.
=============================
=================================
# உண்மை நிலை இறைவனைக் காண வைக்கும்
==================================
குருநாதர்
:- அப்பனே, உண்மை நிலை தெரிந்து கொண்டாலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட
வெற்றி. அப்பனே, உண்மை நிலை இறைவனை காண வைக்கும். அப்பா,
குருநாதர்
:- அப்பனே, அவை இல்லாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின்
இறைவனை, அப்பனே, எதை என்று அறிய. அப்பனே, நிச்சயம் தன்னில் பின் உண்மை
தெரியாமல் இறைவனை வணங்கினாலும் கஷ்டங்கள் தான். அப்பா, இதனால், அப்பனே,
நிச்சயம் மனிதன் இறைவனே இல்லை என்று
குருநாதர் :- அப்பப்பா, கலியுகத்தில் இறைவனே இல்லை என்று சொல்ல வேண்டும் என்பதுதான் தீர்ப்பு. அப்பனே.
======================================
# கலியுகத்தில் இறைவன் இருக்கின்றார்
# கலியுகத்தில் இறைவன் இருக்கின்றார்
# கலியுகத்தில் இறைவன் இருக்கின்றார்
======================================
குருநாதர் :- ஆனாலும், அப்பனே, யாங்கள் விடப்போவதில்லை.
குருநாதர்
:- அப்பனே, உண்மை நிலை தெரிவிப்போம். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட
இறைவன் இல்லை என்று எவை என்று எவை என்று புரிய. அப்பனே, இதுவும் மனிதனால்
தான். அப்பா,
குருநாதர் :- ஏனென்றால், உண்மை நிலை தெரியாமல் மனிதனிடத்தில் பொய்கள் உரைத்துக் கொண்டு, உரைத்துக் கொண்டு
==============================
# உண்மை நிலை யாருக்கும் தெரியவில்லை
=============================
குருநாதர்
:- அப்பனே, இதனால்தான், அப்பனே, வந்தோம். எதை என்று புரிய. அப்பனே,
நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அறிந்து கூட. ஏனென்றால், அப்பனே, அறிந்தும்
புரிந்து கூட. அப்பனே, உண்மை நிலை யாருக்கும் தெரியவில்லை என்பேன். அப்பனே,
நிச்சயம்
=====================================
# உண்மை நிலை தெரிந்தால் நோய்களும் வளராது. இன்பமுடன் வாழலாம். இறைவனும் காணலாம்.
=====================================
குருநாதர்
:- அப்பனே, உண்மை நிலை அப்பனே, தெரிந்தால், அப்பனே, நோய்களும் வளராது.
அப்பனே, இன்பமுடன் வாழலாம். அப்பனே, இறைவனும் காணலாம் என்பேன்.
குருநாதர்
:- அப்பனே, இன்னும் சொல்கின்றேன் அப்பனே. நிச்சயம் தேசத்தை. அப்பனே,
நிச்சயம் எப்படி எல்லாம் காப்பாற்றுவது அப்பனே, எப்படி எல்லாம் எது என்று
புரிய.
குருநாதர் :- அப்பனே,
எப்படி எல்லாம் சக்திகளை கல்லுக்கு ஏற்றினால், அப்பனே, தேசம் காக்கப்படும்
என்று. அப்பனே, சிவபுராணத்தை ஓதுங்கள். அப்பனே, மீண்டும் சொல்கின்றேன்.
அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன்
:- அந்தக் கல்லுக்கு மீண்டும் சக்தி சேர்க்க மனிதன் ஆன்மீக ஆற்றலை உயர்த்த
வேண்டும் என்று கூறுகிறார். அதற்காக சிவபுராணத்தைப் பாடுவது மிகுந்த
பயனுள்ளதாகும். ஏனெனில் அது உலகில் உள்ள அனைவருக்கும் நன்மை வேண்டி
இறைவனிடம் மனிதன் இப்படிப் பாடும் போது, அவன் உருவாக்கும் ஆன்மீக ஆற்றல்
அந்தக் கல்லை நோக்கி செல்கிறது; இது கதிர்வீச்சின் சமநிலையைப் பேண
உதவுகிறது. அதனால் சிவபுராணம் தனித்துவமான சக்தி கொண்டது என்று
விளக்குகிறார். சிவபுராணம் பாடுங்கள். )
(அடியவர்கள் சிவபுராணம் பாட ஆரம்பித்தனர் ….)
(அன்புடன்
அகத்திய மாமுனிவர் அருளால், 21.12.2025 அன்று ஸ்ரீ வரதராஜ விநாயக ஆலயம்,
சாய் சரணாலயம், கொட்டாச்சேனை, இலங்கையில் நடந்த சிவபுராண
கூட்டுப்பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …. )
====================================================
வணக்கம் அடியவர்களே ,
நம்
அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் இந்த வாக்கினை நீங்கள்
பயன்படுத்தி, உங்கள் அன்றாட வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி, உங்களை
நீங்களே உருமாற்றிக் கொள்ள, உங்கள் வலிமையை அதிகரித்துக் கொள்ள பின்பற்ற
வேண்டிய நடைமுறை வழிமுறைகள் மற்றும் நீங்கள் அடைய உள்ள நன்மைகள் இதோ:
1.
கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவப் பாடங்களாகக் கருதுங்கள்:-
வாழ்க்கையில் ஏற்படும் சவால்களைக் கண்டு அஞ்சாதீர்கள். ஒவ்வொரு கஷ்டமும்
ஒரு அனுபவம் என்றும், அந்தப் பக்குவம் பெற்றவர்களைத்தான் மற்றவர்களுக்குச்
சேவை செய்ய இறைவன் தேர்ந்தெடுக்கிறார் என்று குருநாதர் உரைத்துள்ளார்.
நடைமுறை
வழிமுறை: ஒரு பிரச்சனை வரும்போது "இது எனக்கு ஏன் நடக்கிறது?" என்று
வருந்துவதை விட்டுவிட்டு, "இந்த அனுபவம் எனக்கு எதைக் கற்பிக்கிறது?" என்று
சிந்தியுங்கள்.
கிடைக்கும் பலன்: நீங்கள் மனரீதியாகப் பக்குவம்
அடைவீர்கள். கஷ்டப்படுபவர்களுக்கு உதவும் ஆற்றலும், வழிகாட்டும் தகுதியும்
உங்களுக்குக் கிடைக்கும்.
2. உங்கள் உள்நிலை சக்தியை (கதிர்
இயக்கம்) பலப்படுத்துங்கள்:- மனிதன் என்பவன் வெறும் உடல் அல்ல, அவன் ஒரு
கதிர் இயக்கம் (Radiation) என்று குருநாதர் உரைத்துள்ளார். இந்தச் சக்தி
குறையும் போது தான் நோய், மனக்குழப்பம், தோல்வி மற்றும் பண இழப்பு
ஏற்படுகிறது.
நடைமுறை வழிமுறை: உங்கள் உள்நிலைச் சக்தியை
அதிகரிக்கத் தினமும் திருவாசகம், தேவாரம் அல்லது சிவபுராணம் போன்ற பல
புனிதப் பாடல்களை பக்தியுடன் ஓதுங்கள்
கிடைக்கும் பலன்: உடல் ஆரோக்கியம் மேம்படும், மனம் பிரகாசிக்கும், தோல்விகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிட்டும்.
3. உண்மையை அறிந்து பக்தி செலுத்துங்கள் உண்மைப் பொருளைப் புரிந்து கொள்ளாமல் இறைவனை வணங்குவது முழுமையான பலனைத் தராது.
நடைமுறை
வழிமுறை: சடங்குகளை இயந்திரத்தனமாகச் செய்யாமல், அவற்றின் பின்னால் உள்ள
உண்மை நிலையை (அறிவியல் பூர்வமான உண்மைகள் உட்பட) ஆராய்ந்து அறிந்து பக்தி
செலுத்துங்கள்.
கிடைக்கும் பலன்: இறைவனின் முழுமையான ஆசீர்வாதமும், மோட்ச பதவியும் கிட்டும்,.
4.
கூட்டுப் பிரார்த்தனையை ஒரு கடமையாகச் செய்யுங்கள்:- தனி மனித எண்ணங்களை
விட, பலரும் இணைந்து செய்யும் கூட்டுப் பிரார்த்தனைக்கு அபரிமிதமான சக்தி
உண்டு. இது உலகத்தை அழிவிலிருந்து காக்கும் வல்லமை கொண்டது.
நடைமுறை
வழிமுறை: "அனைவரும் ஒரே குடும்பம்" என்ற எண்ணத்துடன், உலக நன்மைக்காகவும்
மற்றவர்களுக்காகவும் பிறருடன் அவசியம் இணைந்து தொடர்ந்து பல கூட்டுப்
பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். மற்றவர்களையும் கூட்டுப்பிரார்தனையில்
ஈடுபடுத்துங்கள். ஒன்று கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
கிடைக்கும்
பலன்: இறைவன் அருளால் உங்கள் தனிப்பட்ட கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறும்
மற்றும் உலகம் இயற்கைச் சீற்றங்களில் இருந்து காக்கப்படும்,.
5.
எண்ணங்களைச் சீரமைத்து சமநிலை பேணுங்கள்:- மனிதனின் எண்ணங்கள் மாறும் போது
ஞானிகளுக்கே கோபம் வருவதாகவும், அதுவே அழிவுகளுக்குக் காரணம். உங்கள்
எண்ணங்கள் நேர்மறையாக (positive ஆக) இருக்கும்போது அது இயற்கையைச்
சமநிலையில் வைக்கும்.
நடைமுறை வழிமுறை: கோபம், சண்டை மற்றும் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, பிறரையும் உங்களைப் போலவே கருதுங்கள்.
கிடைக்கும்
பலன்: மன அமைதி கிடைக்கும், மன குழப்பம் அடைவது போன்ற நிலைகளில் இருந்து
தப்பிக்கலாம், உங்களைச் சுற்றி உள்ளவர்களையும் உங்களால் காக்க முடியும்.
சுருக்கமாகச்
சொன்னால், உங்கள் கதிர் இயக்கம் (உள் ஆற்றல்) சீராக இருந்தால், நீங்கள்
உங்களையும் காத்துக் கொள்ளலாம், நீங்கள் வெற்றி பெறலாம், இந்த உலகத்தையும்
காக்கலாம்.
ஒரு சிறிய உதாரணம்: ஒரு மின்விளக்கு பிரகாசமாக எரிய
மின்சாரம் (சக்தி) தேவையோ, அதுபோல உங்கள் வாழ்க்கை பிரகாசிக்க உங்கள்
உள்நிலை சக்தியைத் கூட்டுப் பிரார்த்தனை , தினசரி காலை மாலை இறை வழிபாடு
மற்றும் தியானம் மூலம் எப்போதும் 'சார்ஜ்' செய்து கொண்டே இருக்க வேண்டும்.
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!