அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் நம் தளம் சார்பில் அனைத்து அறப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது மகாளய பட்ச சேவையாக நம் தளம் சார்பில் கடந்த 11.09.22 முதல் இனிப்புடன் கூடிய அன்னசேவையும், கோமாதாக்களுக்கு வாழைப்பழங்களும் கொடுத்து வருகின்றோம். புரட்டாசி மாத ஆயில்ய பூஜை நேற்று கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் சிறப்பாக நடைபெற்றது. இன்றைய பதிவில் மீண்டும் நேற்றைய குருநாதர் தரிசனம் காண இருக்கின்றோம்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல் என்பதற்கிணங்க குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் தரிசனம் அனைவரும் பெற்று வருகின்றோம். அடுத்து தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் என்று தினமும் கூட்டு வழிபாட்டில் குருவின் நாமம் சொல்லி வருகின்றோம். அடுத்து தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் என்பதற்கிணங்க குருநாதர் கூறி வரும் ஜீவ வாக்கை கேட்டு, அவ்வப்போது செய்து வருகின்றோம். தமிழ்பாராயண திரட்டு என்ற பதிவில் அளித்த வாக்கை இங்கே மீண்டும் தருகின்றோம்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தல்தானே
என்று திருமந்திரம் குருவின் மகிமையை சொல்கின்றது. மேம்போக்காக பார்த்தால் குருவின் திருமேனி காண்பது, குருவின் திருநாமம் சொல்வது, குருவின் வார்த்தை கேட்டல், குருவின் திரு உரு சிந்தித்தால் தெளிவு பிறக்கும் என்பது தெளிவாக நமக்கு புரிகின்றது. மீண்டும் முதல் வரியையும், நான்காம் வரியையும் பாருங்கள். குருவின் திருமேனி, குருவின் திரு உரு வேறு விதமாக பொருள் வருகின்றது அல்லவா? இங்கே குருவின் திருஉரு என்பது குருவின் உபதேசம் ஆகும். இது மிக மிக கடினம் ஆகும். ஆம். முதலில் குருவை காண்பது , அவர் நாமம் சொல்வது, அவரது திருவார்த்தை கேட்பது என அனைத்தும் எளிதாக பெறலாம். ஆனால் குருவின் திருஉரு கிடைப்பது அரிதினும் அரிதாம். அவ்வாறு கிடைத்த குருவின் திருஉருவை சிந்திப்பது அதனினும் அரிதாம்.
இதற்கு முந்தைய இரு பதிவுகளில் குரு உபதேசம் என்றதலைப்பில் ஒரு ஒற்றுமை உண்டு என்று கூறி இருந்தோம். முதல் பதிவில் குருவருளால் ஸ்ரீ முருகப் பெருமான் உபதேசமாக மனதை திறக்க வேண்டிய மந்திர உபதேசம் கிடைத்தது. மீண்டும் அவற்றை இங்கே பகிர்கின்றோம்.
இதற்கு முந்தைய பதிவான குரு உபதேசம் பதிவானது சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடிலில் இருந்தும் அருளப்பட்டது. அன்றைய தினம் அங்கே திருவாசக முற்றோதல் நடைபெற்றது. இரண்டு குரு உபதேசம் பதிவுகளும் சின்னாளப்பட்டி ஸ்ரீ அகத்தியர் ஞானக்குடில் தொடர்பில் இருப்பதை பார்க்கும் போது காரணமின்றி காரியமில்லை என்பது தெளிவாக புரிகின்றது.
ஞானத்தை பெற வேண்டும். அதுவும் நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் ஞானத்தை பெற வேண்டும். இதனை அருணகிரிநாதரும் திருப்புகழில் கேட்கின்றார்.
......... பாடல் .........
காலனிடத் ...... தணுகாதே
காசினியிற் ...... பிறவாதே
சீலஅகத் ...... தியஞான
தேனமுதைத் ...... தருவாயே
மாலயனுக் ...... கரியானே
மாதவரைப் ...... பிரியானே
நாலுமறைப் ...... பொருளானே
நாககிரிப் ...... பெருமாளே.
மீண்டும் அடுத்த பதிவில் இன்னும் பேசுவோம்.
குருவே சரணம் - ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம ஸ்வாமிகள் அவதார திருநாள் - https://tut-temples.blogspot.com/2021/05/blog-post.html
ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html
எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html
பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html
வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html
No comments:
Post a Comment