"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, September 13, 2022

குரு உபதேசம் - ஓம் ஸ்ரீம் அம் அகத்தீஸ்வராய நம!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் இது வரை நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் அருளிய வாக்குகளை இங்கே தொகுத்து அளிக்க உள்ளோம். இவற்றை குரு உபதேசமாக அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். குறு உபதேசம் என்பது என்ன? குரு உபதேசம் என்பது நம்மை அறிய செய்து இறைவனை சுட்டிக் காட்டுவது ஆகும். இதனை நாம் இன்றைய பதிவில் குருவருளால் பெற உள்ளோம். நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியப் பெருமான் அருளிய வாக்குகள், பல நேரங்களில் சுருக்கமாக இருக்கும். ஆனால், அவற்றை விவரிக்க நினைத்தால் மிகப் பெரிய விஷயமாக மாறும். அப்படி அவரில் நின்று வெளி வந்த ஒரு சில வாக்குகள் நமக்கு  நினைவு படுத்துவதற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவை பார்ப்பதற்கு எளிமையாக இருக்கும். அனால் விரித்துப் பார்த்தால் மிக பெரிதாகும். இங்குள்ள கீழ்க்கண்ட வாக்குகளை நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையில் பொருத்திப் பார்த்தால் நாமெல்லாம் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கின்றோம் என்பது நன்கு புரியும்.


    "நடக்கட்டும் நம்புகிறோம்" - மனிதர் வாக்கு!  "நம்புங்கள் நடக்கும்" - சித்தர் வாக்கு.


    திடமாய் உழைத்தும் வெற்றி இழந்திடின் தோற்றுப்போ! கர்ம பாரம் கரைந்திடும்.


    தேவைக்காக இறைவனை தேடாமல், தேவையே நீதான் இறைவா என்றிரு.


    இறைவனுக்கு நன்றி சொன்னால், அதுவே குருதக்ஷிணையாகும்.


    பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதை புரிந்துகொள்ளும் சக்தி உனக்கேதடா.


    நல்லவனாய் இல்லாவிடினும், நல்லதை செய்யாவிடினும், கெட்டவனாய் வாழ்ந்திடாதே, கெடுதலை செய்யாதே.


    மனமது செம்மையானால், மந்திரம் ஜெபிக்கவேண்டா!


    இருப்பதில் கொடுப்பது சிறப்பு. இருப்பதையே கொடுப்பது சிறப்பிலும் சிறப்பு.


    நல்ல விஷயங்களை செய்து வந்தால், யாமே அவனை தேடி செல்வோம்.


    சமூகத்தில் இறையருள் நிலைக்கவே, பண்டிகைகளும் தான தர்மமும்.


    நலம் எண்ணி, நலம் உரைத்து, நலம் செய்ய, நலமே நடக்கும்.


    தர்மத்தின் வழி செல்லச் செல்ல, கர்மத்தின் வலி குறையுமப்பா.


    பொது நலமும், சத்தியமும், நற்சிந்தனையும் கொண்டு வாழ்கின்ற மனிதனுக்கு, எல்லா நாழிகையும் சுப நாழிகை தான்.


    செய்கின்ற தர்மங்கள், ஒருவனின் இறையருளை கூட்டி, ஜென்ம பாபத்தை கழித்து, புண்ணியத்தை பெருக்கி, தேவை அற்றதை, வகுத்து வைக்கும்.


    இழக்க இழக்கத்தான் ஒரு மனிதன் பெறுகிறான்.


    பிறரை நிம்மதியாக வாழ வைத்தால், ஒருவன் நிம்மதியாக வாழலாம்.


    ஒரு மனிதன், தன் இதயத்தை தவிர இறைவனுக்கு கொடுப்பதற்க்கென்று வேறெதுவும் இல்லை.


    மனிதர்களிடம் பேசுவதே சித்தர்கள் செய்யும் பாபம்.


    ஒருவன் செய்கின்ற பாபங்கள்தான் தசா,புக்தி,அந்தரமாக, ஏழரை சனியாக வருகிறது. இறைவன் அதனுள் சாட்சியாகத்தான் இருக்கிறார்.


    எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்குமோ அப்படி வாழ்ந்து விடு. இறைவனே உன்னை தேடி வருவார்.


    பிறருக்கு ஈவதெல்லாம், ஒரு மனிதன் தனக்குத் தானே ஈவதாகும்.


    குருவைத் தேடி நல்ல சிஷ்யர்கள் அலையக்கூடாது. சிஷ்டியனை தேடித்தான் குரு வரவேண்டும்.


    காசியில் இறந்தால் முக்தி என்பது தவறு. காசி எனும் புருவமத்தியில் மனதை நிறுத்தி இருந்தால் முக்தி என்பதே சரி.


    "நான்" என்ற தனித்தன்மை ஒழிந்தபின் அங்கே சித்தன் முளைக்கிறான்.


    தவறை செய்கின்ற மனிதனுக்கு இருக்கும் மனஉறுதி, நல்லதை செய்கின்ற மனிதனுக்கு ஏன் இல்லாமல் போகின்றது?


    மனிதர்கள் செய்கின்ற உதவி கோடைக்கால கூரைபோல் அன்றி மழைக்கால கூரை போல் இருக்கவேண்டும்.


    எந்த மந்திரமும், கவசமும் சுயநலம் இன்றி, பொது நலத்துக்காக கூறினால், பலமடங்கு உடன் பலனளிக்கும்.


    சவத்தை, சிவமாக்கத்தான் தினமும் காலை நீராடல்.


    உள் அதிர்வு மனிதனை உணர்த்தும், உள் அமைதி சிவத்தை உணர்த்தும்.


    சொத்து சேர மனிதனுள் அகம்பாவம், சித்தம் சேர மனிதனுள் சிவபாவம்.


    புண்ணியம் சேர்ப்பதால், கர்மாக்கள் நீற்றுப்போகும்!


    இறை பாதத்தில் பூவிட, இறை சேர்ந்தோர் ஆசீர்வதிப்பர்.


குருநாதர் கூறிய உபதேசங்களில் ஏதேனும் ஒன்றையாவது பற்றினாலே போதும். குருநாதர் சரணத்தின் நிழல் கிடைத்து விடும் என்பது உறுதி. இதனை நோக்கியே நம் தேடல் உள்ள தேனிக்கள் குழுவின் பயணமும் குருவருள் துணை கொண்டு நடந்து வருகின்றது, வாழ வழி காட்டும் குருவின் பொற்பாதங்கள் என்றும் பணிவோம்.

இதற்கு முன்பும்  குரு உபதேசம் - ஓம் அகத்தீசாய நம! என்ற தலைப்பில் ஒரு பதிவை கொடுத்திருந்தோம். இன்றைய பதிவின் தலைப்பும் குரு உபதேசம் -  ஓம் ஸ்ரீம் அம் அகத்தீஸ்வராய நம! என்று குருவருளால் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பதிவுகளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அதனை குருவருள் துணை கொண்டு மீண்டும் காண்போம். ஆஹா.. திருவாசக முற்றோதல் கேட்டுக் கொண்டே இந்த பதிவை இங்கே தருகின்றோம்.

ஓம் குருவே சரணம்! ஓம் குருமார்களின் பதம் போற்றி!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 குரு உபதேசம் - ஓம் அகத்தீசாய நம! - https://tut-temples.blogspot.com/2021/06/blog-post_14.html

No comments:

Post a Comment