இறைவா நீயே அனைத்தும்! இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!
இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே!
இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! சர்வம் சிவார்ப்பணம்
அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி! போற்றி!
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் , புரட்டாசி மாதம், 16/10/2026 அன்று அன்புடன் போகர் சித்தர் - அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கு சென்னையில் உரைத்த வாக்கு. பகுதி 4 ( நிறைவு பகுதி )
வாக்குரைத்த தேதி: 16 அக்டோபர் 2026
வாக்குரைத்த நாள்: கன்னி திங்கள் , புரட்டாசி மாதம், வியாழக்கிழமை
வாக்குரைத்த இடம்: அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கு சென்னையில் உரைத்த வாக்கு.
===========================
# அன்புடன் போகர் சித்தர் வாக்கு
===========================
உலகத்தை அழகாக வழிநடத்தும் இறைவா, இறைவி போற்றியே!
மனதில் நிறுத்தியே உரைப்பேன் போகனவன்.
(பகுதி 3 அதன் தொடர்ச்சியாக ….)
சுவடி ஓதும் மைந்தன்:- எது நடந்தாலும் அமைதியா இருந்துட்டோம்னா அங்க யாருக்கு வேலை?
அடியவர்கள்:- பணியாளருக்கு வேலை.
===========================
# எருமை போல், ஆமை போல் இருக்கவேண்டும்
===========================
போகர் சித்தர்:- அதாவது பின் உயர்ந்த ஜீவராசி, எருமை போல் இருக்க வேண்டும்.
( இவ் வாக்கின் இடையே மீண்டும் பாலாம்பிகை குறித்த உரையாடல்கள் )
சுவடி ஓதும் மைந்தன்:- போட்டோ எடுப்பா. பாலாம்பிகை வந்திருக்கு.
அடியவர் 7:- பாலாம்பிகை போட்டோ எடுப்பா.

அடியவர்கள்:- ( சிலாகித்து …… பாலாம்பிகையே வந்திருக்கு )

( சுவடி ஓதும் மைந்தன் பாலாம்பிகை ஆசி பெற்ற தருணம்)
அடியவர் 7:- வாங்கிட்டியா? இப்படி பாருமா… இந்த பக்கம் பாரு…. அவர் பாரு பாரு பார்த்தீங்களா? லைட் போதும்
அடியவர் 7:- ( சில இனிப்புகள் வழங்கினார்கள் ) அம்மா வாங்கிக்கோங்க
சுவடி ஓதும் மைந்தன்:- ஓகே
அடியவர் 7:- நல்லா இருக்கா? இந்தா நான் உனக்கு பை தரேன் அப்புறமா.
அடியவர்:- இந்தா பை ( என்று பாலாம்பிகைக்கு கொடுத்தார்கள் )
( மீண்டும் வாக்குகள் ஆரம்பம் )
சுவடி ஓதும் மைந்தன்:- அய்யா புரியுதுங்களா எப்படி இருக்க வேண்டும் ஒரு மனிதன்?
போகர் சித்தர்:- அதாவது ஆமை போல் இருக்க வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன்:- எப்படி இருக்க வேண்டும்? எந்த துன்பம் வந்தாலும்…?
அடியவர் 3:- உள்ள போய் அமைதியா இருக்கணும்
போகர் சித்தர்:- இவையெல்லாம் தெரிந்து கொண்டால் அகத்தியன் அழகாக உங்களுக்கு செப்புவான்.
சுவடி ஓதும் மைந்தன்:- இதெல்லாம் நீங்க அறிவாளியா நல்லா தெரிஞ்சுக்கினீங்கன்னா… இறைவன் இப்படித்தான் இப்படித்தான்
அடியவர் 7:- எது நடக்கும்? இருக்கணும்னு சொன்னாரு…?
சுவடி ஓதும் மைந்தன்:- உங்களதான்..
அடியவர்கள்:- ( சிரிப்புகள் )
சுவடி ஓதும் மைந்தன்:- எருமை மாட்டு மேல மழை பெஞ்சாலும் அமைதியா இருந்துரனும்.
அடியவர் 7:- ஆமை போல இருக்கணும் அது இருக்கேன்.
சுவடி ஓதும் மைந்தன்:- எருமை போல கூட… எருமை வந்து…. மழை பெய்ஞ்சுன்னா என்ன பண்ணும்? …. ஓடுமா?....
அடியவர் 7:- உடனே குடையை தூக்க கூடாது.
சுவடி ஓதும் மைந்தன்:- நனைஞ்சிட்டு போயிட்டே இருக்கணும்
அடியவர்கள்:- ( சிரிப்புகள் )
சுவடி ஓதும் மைந்தன்:- புரியுதுங்களா? அதேபோலத்தான் ஆமை எப்படி இருக்குது வந்து?...
போகர் சித்தர்:- நிச்சயம் கலியுகத்தில் மனிதனுக்கு அனைத்தும் தெரிந்தாக வேண்டும். அப்பொழுதுதான் வாழ்வான். இல்லையென்றால் வீழ்வான்.
கடைசியில் ஒன்றும் தெரியாமல் இறைவனை குறை கூறுவான். இதுதான் கலியுகத்தில் நடக்கப் போகின்றது. ஆனால் நாங்கள் விடமாட்டோம் இறைவனை குறை கூறுவதற்கு.
இதைத்தன் அறிய பொதுவாகவே, அனைத்தும் மனிதனும் ஒருவனே.
===========================
# அகத்திய மாமுனிவரை, ஈரேழு உலகத்தின் மாபெரும் அறிவியல் விஞ்ஞானியை , எப்படி அணுக வேண்டும்? ( வாக்கு கேட்க )
===========================
போகர் சித்தர்:- பின் இப்பொழுது கூறுங்கள் அகத்தினை எப்படி நாட வேண்டும் என்று பாருங்கள்?
அடியவர் 3:- கோபம், பொறாமை சொல்றது எல்லாம் சில மாதிரி குணங்கள் இல்லாமல் இருக்கணும்.
போகர் சித்தர்:- இதைத்தன் அறிய அறிவை பயன்படுத்த வேண்டும். இப்பொழுது என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்?
அடியவர் 5:- என்ன நடந்தாலும் அமைதியா இருக்கனும்.
அடியவர் 7:- எருமை மாடு போல அமைதியா இருக்கனும்.
அடியவர் 2:- சொன்னதையெல்லாம் செஞ்சுட்டு அமைதியா இருக்கனும்.
( இவ்விடத்தில் சுவடி ஓதும் மைந்தன் குடிப்பதற்கு நீர்/ஜூஸ் கேட்டார்கள். ஏனென்றால் அவருக்கு கொடுக்கப்பட்ட ஜூஸ் அங்கு சிந்தி விட்டது. இதை வைத்தே அங்கு உடனே வாக்குகள் வந்தது…அடியவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்…)
போகர் சித்தர்:- இதைத்தன் அப்படி இல்லையென்றால் நிச்சயம் இப்பொழுது ஆனதே, அதேபோல் தள்ளிவிட்டுச் சென்று விடுவான் இறைவன்.
அடியவர்கள்:- ( சிரிப்புகள் )
சுவடி ஓதும் மைந்தன்:- இதை பத்தி சொல்றாரு.
அடியவர் 2:- என்ன ஐயா?
அடியவர் 7:- இப்ப இந்த மாதிரி (கொடுக்கப்பட்ட ஜூஸ் அங்கு சிந்தி விட்டது) தள்ளி விட்டு போயிட்டே இருப்பாங்க.
சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப என்ன பண்ணுவாரு? கொட்டிவிட்டது அல்லவா இப்ப? இதை வச்சு சொல்றாரு. சித்தர்கள் கூறுவது நம்ம ஏற்றுக் கொண்டால்… அப்படியே நடந்து கொண்டால்… ஓகே. இல்லையென்றால்….. இப்ப தள்ளிவிட்டு பண்றாரு பாரு அதே மாதிரி தள்ளிவிட்டு நீ போடாப்பா உன் வேலை பார்த்துக்கோன்னு சொல்லிட்டு….. இப்படியே உடனே வருது பாருங்க ஐயா….. உடனே இங்க எழுத்துக்கள் வருதுங்க ஐயா…..
அடியவர் 7:- உட்கார்ந்து பார்த்துட்டு இருக்காரு.
போகர் சித்தர்:- அனைத்தும் செய்ய நாங்கள் தயார் ஆனால் நீங்கள் தயாரா?
அதாவது எதை அப்பா ஒரு கணினியை கொடு பார்ப்போம். இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று.
சுவடி ஓதும் மைந்தன்:- லேப்டாப் குடுப்பா…. அது எப்படி பண்றாங்கன்னு பார்க்கிறேன்றாரு வந்து… லேப்டாப் குடு…
போகர் சித்தர்:- அப்பா கொடுத்து விடாதே…
அடியவர்கள்:- ( சிரிப்புகள் )
போகர் சித்தர்:- அதாவது அறிவில்லாதவன் கையில் கொடுத்துவிட்டால் அனைத்தும் இழந்து விடுவான். அதேபோலத்தான் எங்களிடம் கேட்டாலும் நாங்கள் கொடுக்கப் போவதில்லை. அறிவு மிகுந்து கேட்டால்தான் நாங்கள் கொடுப்போம். அப்படி கொடுத்தால்தான் நீங்களும் நன்றாக இருப்பீர்கள். மற்றவர்களும் நல்வழிப்படுத்துவீர்கள். புரிகின்றதா அனைவருக்கும்? மீண்டும் எழுந்து சொல் கணினி பயன்படுத்துபவனே?
சுவடி ஓதும் மைந்தன்:- என்ன சொல்றாரு தெரியுங்களா? இந்த கணினி உன் கையில கொடுத்தா என்ன ஆகும்? ( பயன்படுத்த தெரியாமல் போட்டு விளையாடி) எல்லாம் பண்ணிடுவீங்க. ஆனால் தெரிஞ்சவங்க கையில கொடுத்தா? அதே மாதிரிதான். நீங்க என்ன கேட்டாலும் நாங்க கொடுக்க போவதில்லை. நீங்க அறிவுள்ளவனாக இருந்தால்… சொல்றதுக்கு வந்து கரெக்டா இப்படி இருந்தால்தான்… நாங்கள் கொடுப்போம். அப்பதான் நீங்க என்ன பண்ணுவீங்க? ஒழுங்கா சரியா பயன்படுத்துவீங்க. மற்றவையும் உபயோகிக்கிறீங்க. இல்லையென்றால் நாங்கள் கொடுத்தும் பிரயோஜனம் இல்லை. மத்தவனை நீங்க கெடுத்துருவீங்க. ஐயா சொல்லுங்க ஐயா?
கணினி பயன்படுத்துபவர்:- இந்த லேப்டாப் யூஸ் பண்ண தெரிஞ்சவங்க கிட்ட கொடுத்தா அவங்க அதை நல்வகையில பயன்படுத்துவாங்க ஐயா. யூஸ் பண்ண தெரியாதவங்க கிட்ட கொடுத்தா அதை என்ன பண்ணனும்னு தெரியாம உடைச்சு போட்டுருவாங்க. அந்த மாதிரி எது வேணாலும் நடந்துரும். சோ ஐயா கொடுக்கணும்னு நினைக்கிறத நம்ம வாங்கிக்கிறதும்… எப்படின்றத புரிஞ்சு வாங்கிக்கிட்டு…. அது மாதிரி நம்ம வழிநடத்தி கொண்டு போனோம்னா…. ஐயாவை போய் அணுகுறது ரொம்ப ஈஸியா இருக்கும். தகுதியை வளர்த்துக்கணும்.
போகர் சித்தர்:- அதனால் நீங்கள் பின் அதாவது இப்பொழுது கூறுங்கள். உங்கள் கஷ்டங்களை. என்னிடத்தில் சொல்லத்தான் அதாவது எங்களிடத்தில் சொல்லத்தான் வேண்டுமா என்று?
உங்களைப் பற்றி அதாவது யாங்கள் புரிந்து வைத்திருக்கின்றோம்.
எங்களைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளவில்லை அவ்வளவுதான்.
அடியவர் 10:- உண்மைதான் அய்யா.
போகர் சித்தர்:- இதனால் சித்தன் எதையும் செய்ய தயார். ஆனால் அதற்கு நீங்கள் பின் நிச்சயம் பின் தகுதி உள்ளவனாக இருக்கின்றீர்களா? நீங்கள் சிந்தித்துக் கொள்ளுங்கள். தகுதியானவர்கள் யார்?
அடியவர் 4:- அது அவங்கதான் சூஸ் பண்ணனும்.
போகர் சித்தர்:- மூதாட்டியே தர்மம் தான்.
அடியவர் 7:- தர்மம் தான் முடிவு பண்ணனும்.
சுவடி ஓதும் மைந்தன்:- தர்மம் தான் என்னன்னா அது அர்த்தம்? நீங்கள் எல்லாம் தர்மம் செய்தால் மட்டும்தான் சித்தர்கள் கொடுப்பார்கள். இல்லையென்றால்?
அடியவர்கள்:- கொடுக்கமாட்டார்கள்.
===========================
# எது தர்மம்? - மிக முக்கிய வாக்கு
===========================
போகர் சித்தர்:- என்ன தர்மம்? சொல் பார்ப்போம்?
அடியவர் 4:- அதாவது எதை எதையும் எதிர்பார்க்காம செய்யணும். மத்தவங்களோட தேவைகளை நம்ம பூர்த்தி பண்ணனும். அவங்க கேட்காமலே பண்றது என்ன வேணுமோ அதை தரணும்.
போகர் சித்தர்:- தாயே!....
முதலில் வருவது அனைத்து ஜீவராசிகளிடம் அன்பாக பழகுதல். இது தர்மம்.
தாய் தந்தை சொல் பேச்சு நடப்பதில் இது தர்மம்.
பொய் சொல்லாமல் இருத்தல் இது தர்மம்.
இன்னும் ஏமாற்றாமல் பின் எதை என்று புரிய. புரிந்து கொள்ளுங்கள் இது தர்மம்.
நம்பிக்கை துரோகம் பின் செய்யாதிருத்தல் இதுவும் தர்மம்.
இன்னும் சரியாக பின் அதாவது முன்னோர்கள் இப்படித்தான் செய்தார்கள். அதை கடைபிடிக்க வேண்டும் என்று பின் சொல்வது தர்மம்.
அதனால்தான் அகத்தியன் முதலிலே முன்னோர்கள் செய்ததெல்லாம் உங்கள் முன்னோர்கள் செய்ததெல்லாம் எடுத்து வருவான்.
***** அத்தர்மம் இருந்தால்தான், இத்தர்மம் அனைத்தும் பின் வெல்லும். *****
சுவடி ஓதும் மைந்தன்:- பழைய ரெக்கார்டிங்.. உங்கள் முன்னோர்கள் என்ன செஞ்சிருக்காங்க நீங்க வந்து உட்காரும்போது அதை பயன்படுத்தணுமா
வழி வழியா என்ன வழி வழியா என்ன பயன்படுத்தினாங்களோ அதை முதல்ல எடுத்துட்டு வரணும். யாருக்காவது தெரியுமா? அதனாலதான் அகத்தியர் என்ன பண்ணுவாரு? அடுத்த காலத்துல அதை எடுத்துட்டு வருவாராம். அதை எடுத்துட்டு வந்து அந்த தர்மத்தை நீங்க பயன்படுத்தினா… தானா இது வந்துருமாம்.
===========================
# முன்னோர் வழிபாடு - ஒரு உதாரணம்
===========================
போகர் சித்தர்:- எதை ஏது என்று புரிய இவைத்தன் அறிய. அதனால்தான் இவைத்தன் அறிய. பணம் பணம் என்று உன் முன்னோர்கள் சென்று கொண்டிருந்தார்கள். அதேபோலத்தான் நீயும் பணம் பணம் என்று. இதைத்தன் அறிய வரும். ஆனாலும் போகும்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஆனாலும் வரும்… இது எக்ஸாம்பிள்க்காக சொல்றாரு வந்து ….வரும்… போகும் ….
போகர் சித்தர்:- ஆனாலும் மனிதனை நம்பாதே. ஆனாலும் உங்கள் முன்னோர்கள் மனிதனை நம்ப மாட்டார்கள். தெய்வத்தை நம்பி பணத்தை சேர்த்தார்கள். அதேபோல் நீயும் இருக்க வேண்டும். இதுதான் பிறவியின் ரகசியம்.
சுவடி ஓதும் மைந்தன்:- உங்களுக்கு சொல்லிட்டாரு கேட்டதுக்காக சொன்னாரு. உங்க முன்னோர்கள் வந்து நல்லா பணத்தை சேமிச்சாங்க.
அடியவர்:- இறைவனை நம்பி சேமிச்சாங்க
சுவடி ஓதும் மைந்தன்:- இறைவனை நம்புனாங்க மனுஷனை நம்பல. அவர் நல்லா சேர்ந்துச்சு. அப்ப நீங்க என்ன பண்ணுவீங்க? அதேபோல இருக்கணும். உங்களுக்கு இது தெரியுமா? இப்பதானே தெரியும்…. மனுஷனை நம்பினால்….. பணம் அழகாக போகும்ன்றார்.
போகர் சித்தர்:- தாயே இருப்பது இப்பொழுது கடைபிடித்துக் கொள். அகத்தியன் வந்து சொல்வான்.
சுவடி ஓதும் மைந்தன்:- பணத்தை இருக்கிறதும்… மனுஷன் கையில ஏதாவது போட்டு…. ஏதாவது பண்ணுவான்னு சொல்லிட்டு… ஏமாத்துவான்… ஏமாறாத. இறைவனை நம்பு. அகத்தியர் வந்து சொல்வார் என்றார்
போகர் சித்தர்:- இதை போலத்தான் அவரவருக்கு ஒரு வினை இருக்கிறது. அதை அகத்தியன் எடுத்துச் சொல்வான். ஏனென்றால் இது ஒரு எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்.
இதனால் அடுத்து, இதனால்தான் அகத்தியன் வருவான். தனித்தனியாகத்தான் சொல்வான்.
அடியவர் 7:- கார்த்திகை மாசம் நம்ம அகத்தியர் கிட்ட கேக்குறதுக்கு முன்னாடி நம்மள பக்குவப்படுத்திக்கணும்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஏன்னா அடுத்து உங்களுக்கு விதியை சொல்றாரு… நம்மள பக்குவப்படுத்திக்க சொல்றாரு… உங்களுக்கு விதியை சொல்றாரு… ஒவ்வொரு விதியும் உங்க முன்னோர்கள் என்ன பயன்படுத்தினா அது சொல்ல போறாரு… அப்ப அது என்ட்ரன்ஸ் எக்ஸாம் மாதிரி இது வந்து…. நீங்கள் இது பாஸ் ஆகுனால்..
===========================
# சித்தர்களுக்கு கொடுக்க வேண்டிய ஒரே ஒரு சன்மானம் என்ன?
===========================
போகர் சித்தர்:- பின் அதாவது இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
அடியவர்கள்:- நீங்க சொன்ன மாதிரி நாங்க நடந்துக்கணும்
போகர் சித்தர்:- பின் எதை என்று கூற தர்மம். தர்மம் கடைபிடியுங்கள்.
அதனால் உங்கள் பிரச்சனைகள் ஏன் நீங்கவில்லை? சொல்லுங்கள் பார்ப்போம்?
சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப என்ன பண்ணனும்? தர்மத்தோட இருக்கணும்ன்றாரு வந்து அப்பதான் வந்து அகத்தியர் ….
போகர் சித்தர்:- நீங்கள்.. அதாவது உங்களிடத்தில் எதையும் எதிர்பார்க்கவில்லை சித்தர்கள் யாங்கள். ஒன்றே தான். தர்மத்தை தான். அதுதான் நிச்சயம் நீங்கள் கொடுக்கும் சன்மானம்.
அடியவர்கள்:- ( கைதட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன்:- உங்கள் இடத்தில் சித்தர்கள் காசுக்காகவோ வேற என்னது எதுக்காகவோ
போகர் சித்தர்:- மனிதன் எதிர்பார்ப்பான்
சுவடி ஓதும் மைந்தன்:- மனிதன் தான் நீ காசு கொடு. நான் இது பண்றேன். நான் பரிகாரம் கொடு. இது பண்றேன்னு சொல்லுவான். ஆனால் சித்தர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள்? சன்மானம் எதை கொடுக்கணும் நீங்க வந்து? தர்மத்தை
போகர் சித்தர்:- இனிமேல் யார் ஒருவன் சன்மானமாக தர்மத்தை கொடுக்கின்றானோ அவனுக்கு நிச்சயம் எங்கள் வழிகள் உண்டு. தர்மத்தை கொடுத்து பின் இறைவன் வழியை காட்டுவோம்.
சுவடி ஓதும் மைந்தன்:- தர்மத்தையும் உங்களுக்கு…. அது நீங்க தர்மத்தை கடைபிடிச்சீங்கன்னா….. இன்னும் அந்த தர்மத்தையும் உங்களுக்கு அது எப்படி சொல்றாருன்னா….. அந்த தர்மம் திருப்பியும் கொடுத்து…. உங்களுக்கே கொடுத்துட்டு…. இறைவன் வழியும் காட்டுவோம்.
போகர் சித்தர்:- இதனால் எதை என்று புரிய, அதனால் பின் உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்களே காரணங்கள். அவ்வளவுதான்.
இதனால் இறைவன் விதியை அப்படி எழுதிவிட்டான். இறைவன் அப்படி செய்துவிட்டான். கிரகங்கள் சரியில்லை. நல்ல நேரம் இல்லை என்றெல்லாம் சொல்பவன் அதி முட்டாள்.
சுவடி ஓதும் மைந்தன்:- கிரகங்கள் சரியில்லை… நல்ல நேரம் எங்களுக்கு இல்லை… விதி சரியில்லை… அப்புறம் வேற என்ன சொல்லுவாங்களாம்? ஜாதகம் பார்க்கிறது….இதெல்லாம் என்னது? இதெல்லாம் வந்து முட்டாள்தனமான விஷயங்கள்.
===========================
# யார் ஞானி ஆக முடியும்?
===========================
போகர் சித்தர்:- அறிவுள்ளவன்…. இறைவன் மேலே இருக்கின்றான் என்று (சொல்லுவான்). அதனால்தான் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு இருப்பவன் சொல்பவன் தான் ஞானியாக கருதப்படுகின்றார்கள்.
எல்லாத்துக்கும் அவன்தான் யார் ஒருத்தர் சொல்றாரோ அவர்தான் ஞானியாக கருதப்படுகின்றார் யார் சொன்னது இந்த மாதிரி எல்லாம் யாரை கேட்டா எல்லாம் பார்த்துப்பான் யாருங்க ஐயா பணியாரம் பணியாரம் இல்லைங்க ஐயா அதனால சாயிராம்
சுவடி ஓதும் மைந்தன்:- சாயிபாபா என்ன சொல்லுவார் பார்த்தீங்களா.. எல்லாம் அவர் இருக்காரு எல்லாம் அவர் சொல்லுவார்… அதே மாதிரிதான் எல்லாரும்… யார் ஒருத்தர் அது மாதிரி சொல்றாரோ… இறைவன் தான் இது நடத்துவது…. எல்லாமே இறைவன் அருளால் தான் நடக்கிறது யார் ஒருத்தர் உணர்றாரோ அவர்தான் வந்து ஞானி ஆவான்.
===========================
# சன்மானத்தை கொடுத்து, தன்மானத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
===========================
போகர் சித்தர்:- இதனால் சன்மானத்தை கொடுத்து அதாவது தன்மானத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- சன்மானம் = தர்மம் செய்தல். தன்மானம்= மரியாதை. உன் மரியாதை நீ காப்பாத்திக்கோ.. அடடா!!!!! கரெக்டான வார்த்தை. தர்மம் பண்ணனும்னா உன் மரியாதை காப்பாத்தப்படும். அப்ப என்ன மரியாதை? துன்பம் இருக்காம இருக்கிறது. நீங்கள் நினைக்கிறது நடக்கக்கூடியது. புரியுதுங்களா? கௌரவமா வாழ்ந்துக்கோ.
அடியவர் 7:- பிரச்சினை இல்லை என்றால் ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே அதுவே தன்மானம்.
சுவடி ஓதும் மைந்தன்:- சன்மானம் என்பது என்ன? தர்மம். அப்புறம் நீங்க வந்து ஜென்டில்மேன் போல வாழ்ந்துக்கோங்கமதிப்புடன் . அவ்வளவுதான் இப்படித்தான் நாங்க பண்ண முடியும்.
===========================
# எல்லாமே கொடுக்கல் வாங்கல் தான்
===========================
போகர் சித்தர்:- எதை அறிந்து கொடுத்து வாங்குவது. அவ்வளவுதான்
சுவடி ஓதும் மைந்தன்:- கொடுத்து வாங்குவதுன்னா?
அடியவர் 4:- எல்லாமே கொடுக்கல் வாங்கல் தான்.
சுவடி ஓதும் மைந்தன்:- கரெக்டா அந்த அம்மா சொன்னாங்க. கொடுக்கல் வாங்கல் தான். கொடுக்கல் வாங்கல் என்ன பண்றீங்க? தர்மத்தை கொடுங்க. மரியாதையே வாங்குறீங்க.
சுவடி ஓதும் மைந்தன்:- மரியாதைன்னா என்னது? சுயமரியாதை உங்களுக்கு என்ன தேவையோ?
===========================
# தர்மமே அனைத்தும் உங்களுக்கு கொடுத்துவிடும்.
===========================
போகர் சித்தர்:- அதாவது தர்மமே செய்துவிடும் உங்களுக்கு. இறைவன் அதாவது என்ன செய்வது?
சுவடி ஓதும் மைந்தன்:- தர்மமே உங்க வழி. என்ன சொல்றாரு? நீங்க தர்மத்தை பண்ணீங்கன்னா அதுவே உங்களுக்கு எல்லாம் செய்யப்போகுது. அப்ப இறைவன் என்ன பண்ணுவாரு?
அடியவர் 3:- தர்மம் தலை காக்கும்.
சுவடி ஓதும் மைந்தன்:- அம்மா அது ஓகேம்மா. தர்மமே செஞ்சிரும்ன்றாரு. தர்மத்தை கடைபிடித்தால் அந்த தர்மமே நம்மளை காக்கும்
போகர் சித்தர்:- தர்மம் செய்யாதவன் நல் நேரங்கள்.. அதாவது தீய நேரங்கள்… ராகுகாலம்… எமகண்டம்…. அதாவது விதி இப்படி இல்லை… கிரகங்கள் சரியில்லை… என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பான்.
அனைத்தும் குற்றங்களை… அதாவது மனிதத்தில்… அதாவது உங்களிடத்தில் வைத்துக்கொண்டு…. மனிதன் நேரம் சரியில்லை என்று சொல்வான். பெரிய அறிவாளி போல் பேசுவான் மனிதன்.
===========================
# எப்போது உங்கள் ஜாதகம் உங்களுக்கு சாதகமாகும்?
===========================
போகர் சித்தர்:- எதை தன் அறிய தர்மத்தை கடைபிடித்தால் ஜாதகமும் சாதகமாகும்.
சுவடி ஓதும் மைந்தன்:- தர்மத்தை கடைபிடித்தால் ஜாதகமும் சாதகமாகும். சாதகம்னா என்ன? ஜாதகமும் உனக்கு சாதகமா செயல்படும்.
போகர் சித்தர்:- தர்மத்தை கடைபிடிக்கவில்லை என்றால் அதாவது ஜாதகமும் நிச்சயம் பாதகமாகும்.
சுவடி ஓதும் மைந்தன்:- பாதகம் ஆயிடும். பாதகம்னா என்னது? தப்பா நடக்கும் எல்லாமே வந்து… நல்ல நேரம் இருந்தா என்னது?
அடியவர் 7:- நல்லதா நடக்க வேண்டியது கூட தப்பா போயிடும்
===========================
# ராகுவானவன் கொடுப்பதை போல் எவரும் இல்லை.
===========================
போகர் சித்தர்:- ராகுவானவன் கொடுப்பதை போல் எவரும் இல்லை. ஆனால் ராகுகாலம் என்று சொல்கின்றார்கள்… எவ்வளவு அவனுக்கு அறிவில்லை.
===========================
# எமகண்டன் யார்?
===========================
போகர் சித்தர்:- ஏன் எதற்காக பின் எமகண்டன் யார்?
அடியவர்கள்:- கேது
போகர் சித்தர்:- அறிவை கொடுப்பவன். ஆனாலும் அவன் நேரத்தில் எதையும் செய்ய மாட்டான். அறிவு வளர்ந்துவிட்டால்?....
===========================
# தர்மத்தைப் பற்றி எடுத்துரைங்கள் அனைவரும்.
===========================
# சித்தர்கள் உரைக்கும் அதி உயர் புண்ணிய வாக்குகளை, இவ் உலகில் , முழு வேகத்தில் எடுத்துரைங்கள் அனைவருக்கும்….
===========================
போகர் சித்தர்:- தர்மம் செய்வவனுக்கு எப்பொழுதும் தோல்விகளே இல்லை.
யாராலும் ஒன்றும் பின் எங்கும் எதுவும் நடக்காது.
இதனால் தர்மத்தைப் பற்றி கூறுங்கள்.
எடுத்துரைங்கள் அனைவரும்.
முதலில் உங்களிடத்தில் சொல்லுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- முதல்ல உங்க பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கன்றாரு வந்து. தர்மத்தை பத்தி இப்படித்தான் இருக்கணும். இப்படித்தான் செயல்படணும்.
===========================
# பேய் என்பது யார்?
===========================
போகர் சித்தர்:- ஆனாலும் சில இல்லத்தில் இதற்கு மாறுபாடாக பேசுவார்கள். அவர்கள் பின் உள்ளத்தில் அதாவது எதை என்று புரிய பேய்களே என்றே சொல்வேன்.
போகர் சித்தர்:- இதனால்தான் சித்தனுக்கு எதிர்ச்சொல் சொல்பவன் பேய் என்பேன்.
சுவடி ஓதும் மைந்தன்:- சித்தனுக்கு…. அதாவது சித்தர் இப்படி சொல்றாரு இல்ல…. அதெல்லாம் பொய். என்னடா இதெல்லாம் என்று எதிர்ச்சொல் தருபவன் என்னது? பேய் என்றார் வந்து..
போகர் சித்தர்:- அதாவது பின் நாங்கள் சொல்வோம் ஒரு உயிரை கொல்லாதே. அதாவது மற்றொருவன் சொல்வான் கொன்றால் தப்பா என்று?
அடியவர் 7:- அப்ப அவன் பேய்.
போகர் சித்தர்:- எப்படி பின் அழிகின்றதோ அதேபோல் பின் குடும்பமும் கூட.
சுவடி ஓதும் மைந்தன்:- (அசைவ உணவு சாப்பிட்டுவதால் வாயில்லா ஜீவராசிகள்) அது எப்படி வந்து… அந்த சாப்பிட்டு அந்த அழிகின்றதோ…. அதே மாதிரி என்ன ஆகும் வந்து?
அடியவர் 7:- அந்த குடும்பமும் அழியும்.
சுவடி ஓதும் மைந்தன்:- குடும்பமும் சீக்கிரமா வந்து நோய்கள் நொடிகள் எல்லாமே வந்து போகும்ன்றார்.
போகர் சித்தர்:- அனைவரும் சொல்லுக. எதிர்ச்சொல்.
சுவடி ஓதும் மைந்தன்:- நான் சொல்றேன். எதிர்ச்சொல் சொல்லணும்ன்றார்.
போகர் சித்தர்:- அதாவது தானம்?
சுவடி ஓதும் மைந்தன்:- எதிர்ச்சொல் சொல்க.
அடியவர்கள்:- தர்மம்
போகர் சித்தர்:- இதை தன் அறிய இன்பம்?
அடியவர்கள்:- துன்பம்.
போகர் சித்தர்:- இன்னும் நீங்களே சொல்லுங்கள் உங்களுக்கு உங்களுக்குள்ளே
சுவடி ஓதும் மைந்தன்:- நான் ரெண்டு சொல்லிட்டேன். நீங்களே சொல்லுங்கன்றாரு அவ்வளவுதான்
அடியவர்கள்:- வெற்றி தோல்வி
அன்பு வெறுப்பு
பாசம் வேஷம்
உயர்வு தாழ்வு
அறிவு அழிவு
சுவடி ஓதும் மைந்தன்:- நீங்களே வந்து ஒவ்வொன்றா தெரிஞ்சுக்கோங்க. தொழில் இருக்குதா ஐயா புரியுதுங்களா அதுக்கு என்னது?
அடியவர்கள்:- வெற்றி தோல்வி
லாபம் நஷ்டம்
வரவு செலவு
அன்பு கோபம்
போகர் சித்தர்:- அதேபோலத்தான் நீங்கள் செய்யும் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூறப்பின் அறிய.
சுவடி ஓதும் மைந்தன்:- அதேபோலத்தான் நீங்கள் என்ன செய்கின்றீர்களோ அது நிச்சயமாக உங்களுக்கு வரும்…நீங்க நன்மை செய்றீங்களா நன்மையாகவே வரும்… தீமை செய்கின்றீர்களா தீமையாகவே வரும். அப்படித்தான்.
===========================
# சித்தர்களின் கோட்பாடு என்ன?
===========================
போகர் சித்தர்:- ஆனால் கலியுகத்தில் தீமைத்தான் அதிக அளவு நடைபெறும்.
ஆனாலும் அதை என்று புரிய புரிந்து கொள்ளுங்கள்.
நன்மையை செய்து கொண்டே இருங்கள்.
இப்பிரபஞ்சத்திற்கு நன்மை தேவை.
இல்லையென்றால் இப்பிரபஞ்சம் அதிவிரைவில் அழிய நேரிடும்
அதனால்தான் எங்களிடத்தில் மனிதன் வருகின்ற பொழுது ஒரு வேலையை வைக்கின்றோம்.
அவ் வேலையை பின் நிச்சயம் பின் சரியாக செய்தால் உங்களுக்கும் நாங்களே நன்மை செய்வோம்.
பின் உங்களால் இப்பிரபஞ்சமும் நலமடையும்.
அவ்வளவுதான் எங்கள் கோட்பாடு.
இதனால்தான் சித்தன் யார் என்பதே தெரியாமல் சித்தனிடத்தில் தைரியமாக வந்து அதாவது முதுகில் கையை போடுகின்றான்.
எவ்வளவு துரோகி?
அப்பொழுது துரோகிக்கு நல்லது செய்யலாமா? தீங்கு செய்யலாமா?
அதனால்தான் நீங்கள் தெரியாமல் கை வைக்கின்றீர்கள் அதனால்தான் நல்லது செய்து கொண்டிருக்கின்றோம். திருந்துங்கள் என்று.
சுவடி ஓதும் மைந்தன்:- நீங்கள் தெரியாமல் கை வைக்கிறீங்க நீங்க… என் மேல டேய் வைக்காத… அய்யா புரியுதுங்களா? என்ன சொல்றாரு…. தெரியாம கை வைக்கிறீங்களா…. நீங்க எல்லாம் வந்து…. சித்தர் யாருன்னே தெரியல….. சித்தன் தெரியாம யாருன்னே தெரியல…. நீ வந்து என் மேல கை வைக்கிறீங்க…. இருந்தாலும் இதெல்லாம் தெரிஞ்சுக்கணும்….. சித்தன் எல்லாம் இந்த வழிகள் எல்லாம் பயன்படுத்தணும்ன்றாரு வந்து…. தெரிஞ்சுக்கோங்க தெரிஞ்சோ தெரியாமலோ கூப்பிட்டீங்க வந்து…. இதெல்லாம் தெரிஞ்சுக்கணும்.
===========================
# சித்தர்கள் மேல் பின் கை வைப்பது மின்மாற்றி மேல் பின் கை வைப்பது போல ….
===========================
போகர் சித்தர்:- இதை தன் அறிய மின்மாற்றி மேல் பின் கை வைப்பது போல்… சித்தன் மேல் கை வைத்தால்…. இதனால் தெரிந்து கொண்டு வைக்க வேண்டும். இல்லையென்றால் அவனுடைய வாழ்க்கை அவ்வளவுதான்.
அதனால்தான் அதிக அளவு நிச்சயம் பின் எவை என்று எங்களை நாடியும் வருவதில்லை.
எதை என்று எங்களை (யாங்கள்) தெரியபடுத்துவதும் இல்லை
இவ்வுலகத்திற்கு எது நன்மையோ அதை செய்து கொண்டு சென்றுவிடுவோம்.
உங்கள் பிரச்சனைகளை பின் தீர்ப்பதற்கா எங்களுக்கு வேலை?
அதாவது நீ ஒழுங்காக இருந்தால் நாங்கள் வருவோம் அவ்வளவுதான்
இதை தன் அறிய இதுதான் பின் அதாவது நிச்சயம்.
சுவடி ஓதும் மைந்தன்:- இதுதான் நிச்சயம் என்றாரு… இதுதான் சத்தியம் என்றாரு வந்து…. நீங்கள் ஒழுங்காக இருந்தால்…?
===========================
# அறிவு மூலம் அருள். அருள் மூலம் புண்ணியம்.
===========================
போகர் சித்தர்:- ஏன் எதற்கு இவ்வளவு நேரம் பேசுகின்றோம் என்றால் உன் முன்னோர்கள் சரியாக அனைத்தும் கடைபிடித்தார்கள். ஆனால் நீங்கள் கடைபிடிக்கவில்லை. அவர்களுக்காக வந்து இறங்கி சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.
இதனால் சட்டியில் (உடம்பில்) என்ன வைத்திருக்கின்றீர்கள்?
பின் துன்பத்தை இட்டு நிரப்பி வைத்திருக்கின்றீர்கள். அவ்வளவுதான்.
முதலில் அதை எடுத்து. எப்படி எடுப்பது? பின் அறிவு… அதாவது அருள்… அதாவது அறிவு… பின் இதன் மூலம் பின் அருள்… நிச்சயம் (துன்பம்) அது தானாக ஓடிவிடும்
பின்பு பின் அதாவது உங்களுக்கு தேவையான சில உபகரணங்களை அதில் இடுவோம். அதை உபயோகித்துக் கொள்ளுங்கள். புரிகின்றதா?
சுவடி ஓதும் மைந்தன்:- சட்டியில எல்லாம் இருக்குது. நிரம்பி இருக்குது பாவம். உங்க துன்பம் நிறைய இருக்குது. அதை எப்படி நீக்குறதுன்னா உங்களுக்கு அறிவு கொடுப்போம். அந்த அறிவின் மூலமாக மூலமாக என்ன வந்துரும்? அருள் வந்துரும். அருள் மூலமா இது என்ன ஆகும்? சட்டியில இருக்கிற துன்பம் வந்து நீங்கிடும். அதுல சில உபகரணங்களை நாங்கள் போடுவோம். அந்த உபகரணங்களை வைத்துக்கொண்டு, நீங்கள் வாழுங்கள். உபகரணம்னா என்னது? புண்ணியம்னு சொல்லலாம். உங்களுக்கு தேவையானது. புரியுதுங்களா?
போகர் சித்தர்:- இதையெல்லாம் அறிந்தவனுக்கு நாங்களே அனைத்தும் சொல்வோம். நீங்கள் கேட்டு பெறுவதில்லை புண்ணியத்தை.
சுவடி ஓதும் மைந்தன்:- நீங்கள் கேட்டு பெறுவதில்லை புண்ணியத்தை… நீங்கள் எல்லாம் அறிவாக இருந்தால், தானாக அருள் வந்துவிடும். தானாக புண்ணியம் வந்துரும். புண்ணியத்தின் மூலம் இறைவன் சில உபகரணங்களை கொடுப்பார் அதன் மூலம் என்ன பண்ணனும்? ஐயா
===========================
# ருத்ராட்சம் அணிவதன் ரகசியம்…
===========================
போகர் சித்தர்:- பின் ஏன் அனைவரும் ருத்ராட்சை அணிகின்றார்கள் சொல்லுங்கள் பார்ப்போம்?
அடியவர்கள்:- பாதுகாப்பு
போகர் சித்தர்:- எதற்கு? எதை? அதாவது படைத்தவனுக்கு தெரியும். ஏனென்றால் ருசியானது அதாவது எதை என்று புரிய, எங்கு வரை?
அடியவர்கள்:- தொண்டை வரை.
போகர் சித்தர்:- அதேபோலத்தான் சில விஷயங்கள் நிச்சயம் உள்ளே சென்று விடக்கூடாது என்பதற்கு இணங்க, எதை என்று தடுப்பதற்கே.
சுவடி ஓதும் மைந்தன்:- அதனால சில வினைகள்… சில இதெல்லாம் வந்து என்ன பண்ணனும்? (தொண்டை) இங்க நின்னு… (தொண்டை) இதை தாண்டி போகக்கூடாது. இதை தாண்டி போச்சுன்னா? முடிஞ்சு போச்சு லைஃப் விஷமா மாறிடும்ன்றாரு வந்து. அதனாலதான் இறைவனை வணங்கி நம்ப… எப்பா தெரியாம தெரியாம பண்ணிடுறோம்…. அதனால இதோட என்னை அப்படியே போட்டு…. இது பண்ணிட்டு வெளிய துரத்திருப்பா…. உள்ள வந்து போயிட்டு என்னால வாழ முடியாதுப்பான்னு சொல்லிட்டு தான்… என்ன பண்றோம்? எல்லாமே மாலைகள் ருத்ராட்சம் எல்லாமே பொருந்தும். அப்படித்தான் பொருந்தும். ஒரு இங்க போட்டுருப்பாரு ஒரு இங்க போட்டுருப்பாங்க ஓகேங்களா
அடியவர் 7:- எல்லாமே தாண்டி இறங்கக்கூடாது
போகர் சித்தர்:- அறிந்தும் இதை தன் அறிய அப்படி சென்றாலும் பின் யான் நீண்டு இடுகின்றேன். எடுத்துவிடு என்று.
சுவடி ஓதும் மைந்தன்:- அப்படி சென்றாலும் உள்ளுக்குள்ள நான் நீண்டு…. பெரிய மாலை போட்டுக்கிறார்…. அப்படியாவது நீ வந்து வெளியில எடுத்து வெளியே எடுத்துருப்பா.
போகர் சித்தர்:- இதை உணர்ந்தவர் எவர்?
அடியவர் 7:- ஐயா யாரும் உணரல ஐயா இதுவரைக்கும் தெரியாது ஐயா
போகர் சித்தர்:- அப்பொழுது சித்தன் இதையெல்லாம் உணராதவன் சித்தன் பேரை சொன்னாலும் வருத்தம் வருத்தமே. துன்பம் துன்பமே.
அடியவர் 7:- மன்னித்துக் கொள்ளுங்கள். யாரும் சொல்லிக் கொடுக்கல.
சுவடி ஓதும் மைந்தன்:- இதையெல்லாம் உணராதவன் சித்தனை வணங்கினாலும் பிரயோஜனம் இல்லை.
போகர் சித்தர்:- ஒரு நல்லவனிடத்தில் சென்றால் அதாவது நல்ல இடத்திற்கு எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட நீங்களும் நல்லவராக இருக்க வேண்டும் அல்லவா? இல்லையென்றால் யாருக்கு பழி?
சுவடி ஓதும் மைந்தன்:- ஒரு நல்லவனிடத்தில் செல்லனும்னா என்ன பண்ணனும்? நீங்களும் நல்லவனா இருக்கணும். இல்லன்னா யாருக்கு பழி? அவனுக்கு தான் பழி வரும்.
போகர் சித்தர்:- அதேபோலத்தான் அதனால்தான் சித்தன் யாரும் பின் அருகில் வைப்பதே இல்லை. ஏனென்றால் மனிதனுக்கு பழக்கங்கள் நம்பிக்கை துரோகங்கள் மட்டுமே.
சுவடி ஓதும் மைந்தன்:- அதனாலதான் சித்தன் நாங்க யாருமே சேர்க்கிறது இல்லைன்றாரு வந்து… என் பக்கத்துல சேர்க்கிறதே இல்லை… மனிதனுக்கு என்ன தெரியும்?
அடியவர் 7:- நம்பிக்கை துரோகம் மட்டும்தான் தெரியும்
போகர் சித்தர்:- ஏதோ எதை என்று கூறப்பின், வருத்தப்பட்டு அதாவது உங்கள் முன்னோர்கள் செய்த பின் தர்மங்கள் உங்களை காக்கின்றது. அதனால் ஏதோ தெரிந்து கொள்ளுங்கள் என்று பின் உங்களை அழைத்து சொல்லி வைக்கின்றோம். துன்பங்கள் நாங்கள் போக்குவோம். நீங்கள் போக்க தேவையில்லை.
அவ் ஆற்றல்கள் அதிக அளவு இருக்கிறது. அவ் ஆற்றலாகத்தான் நாங்கள் வந்து சொல்கின்றோம் உங்களுக்கு.
இதனால் நீங்கள் எதை என்று புரிய அவ்வளவு யான் பக்தி உள்ளவனாக அதாவது நீங்கள் யோசிக்கக்கூடாது.
இதனால் பின் எதை என்று புரிய அதனால் எங்களிடத்தில் வந்தாலே உங்களுக்கு ஆற்றல்கள் பெருகும். இதனால் தானாகவே பின் யாங்கள் இறைவனிடத்தில் ( ஆலயத்திற்கு ) அனுப்புவோம். பின் அவ்வாறு அங்கு (தரிசனம்) கண்டால் பல தொல்லைகள் போகும்.
===========================
# சித்தர்கள் வாக்குகள் படிக்க படிக்க, அறிவு உயரும்……
# அறிவு உயர உயர , அருள் உயரும்……
# அருள் உயர உயர, துன்பம் விலகும்……
# துன்பம் விலக விலக, புண்ணியங்கள் உயரும்……
# புண்ணியங்கள் உயர உயர, சந்தோஷமான வாழ்க்கை கிட்டும்……
===========================
போகர் சித்தர்:- இதனால் இன்னும் அதாவது அறிவுள்ளவனாக இருங்கள்.
அதனால் அவ் அறிவு வளர்ப்பதற்காக உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன் இன்னும் வாக்குகள்.
****** அதனால் அருள் வளரட்டும். ******
****** இதனால் துன்பம் போகட்டும். ******
****** இதனால் புண்ணியங்கள் வளரட்டும். ******
****** இதனால் சந்தோஷமான வாழ்க்கை வரட்டும். ******
அப்பனே அறிவுள்ளவனுக்கு அனைத்தும் சமமாகும்.
அறிவில்லாதவனுக்கு அப்பனே அனைத்தும் தோல்வியாம்.
===========================
# ஏன் எதற்காக அம்பாளை வணங்குகின்றோம்?
===========================
# நவராத்திரி முன்னிட்டு தர்மங்கள் செய்ய வேண்டும்
===========================
போகர் சித்தர்:- இதை தன் அறிய இதனால் பின் ஏன் எதற்காக அம்பாளை வணங்குகின்றோம்? என்பதற்கெல்லாம். அதாவது பரிபூரண என் அம்மை. என் அம்மைக்கு நீங்கள் செய்ய வேண்டியது செய்யுங்கள். அழகாக திருத்தலத்திற்கு சென்று பின் தானம் கொடுங்கள். அதாவது தானம் என்று பின் நிச்சயம் பின் நீங்கள் பின் எதை என்று புரிய அதாவது தர்மம் என்று கொடுத்து விடுங்கள் நிச்சயம் அவள் பார்த்துக் கொள்வாள்.
சுவடி ஓதும் மைந்தன்:- என் அன்னைக்கு என்றால் யாரு? பராசக்தி. யார்? போகருடைய அன்னைக்கு… நான் இப்ப சொல்றதை கேளுங்க. அவங்க வந்து கோயிலுக்கு போயிட்டு…. எல்லாரும் வந்து புடவை கொடுக்க சொல்றாரு. தர்மம் எது நினைக்கக்கூடாது ஐயா புரியுதுங்களா?
போகர் சித்தர்:- ஏன் எதற்கு என்றால் நிச்சயம் இச் சமயத்தில் உங்கள் முன்னோர்கள் அனைவரும் பின் அம்பாளுக்கு சேவை செய்தார்கள். அதேபோல ஆகட்டும் பின்பு உரைப்பேன்.
சுவடி ஓதும் மைந்தன்:- உங்க முன்னோர்கள் முன்னோர்கள் என்ன பண்ணாங்களாம்? இந்த நவராத்திரி வருகின்ற பொழுது எல்லாருக்கும் என்ன பண்ணாங்களாம்? கோயில்கள்ல என்ன பண்ணாங்களாம்? சேலை கொடுத்தாங்களாம் வந்து…. அம்பாளுக்கு வந்து சேலை கொடுத்து அருள் பெற்றங்களாம். எப்ப? இந்த நவராத்திரி அன்று… அதை நீங்க செய்யுங்க. உங்க முன்னோர்கள் செய்தது வந்து அப்ப உங்களுக்கு என்ன ஆகும்? அப்படியே வந்து ஆக்டிவேஷன்.. அப்படி ஐயா. புரியுதுங்களா ?
===========================
# சித்தர்கள் கொடுக்கும் , யாருக்கும் தெரியாத அறிவு ரகசியங்கள்.
===========================
போகர் சித்தர்:- இன்னும் பல ரகசியங்கள் சித்தர்கள் சொல்வதற்கு தயார் ஆனாலும் பின் நிச்சயம் நீங்கள் அறிவுள்ளவராக இருங்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- அறிவு எப்படி வளர்த்துகிறதுன்னு தெரியலையே
போகர் சித்தர்:- அதாவது நீங்கள் படித்தால்தான் அறிவு வளரும் என்பதை எல்லாம் உங்களுக்கே தெரியும்.
படிக்காமல் பின் அதை தேர்வு எழுதினால் என்ன ஆகும்? என்ன பயன்?
சுவடி ஓதும் மைந்தன்:- என்ன ஆகும்? ஃபெயில் ஆயிடுவீங்க. அதனால என்ன பிரயோஜனம்?
அடியவர்கள்:- அந்த கிளாஸ்ல அப்படியே உட்கார்ந்து குப்பை கொட்டிக்கிட்டே….
சுவடி ஓதும் மைந்தன்:- ஆனால் படிச்சீங்கன்னா அறிவு வளரும்.
போகர் சித்தர்:- இதனால் இவ்வறிவு என்பது நிச்சயம் உங்களுக்கு தெரியாது. அதனால் இவ்வறிவை வளர்த்துக்கொண்டு அருளைப் பெற்றுக் கொள்ளுங்கள். இதனால் புண்ணியத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
அதாவது கல்வியில் சேர வேண்டுமானாலும் சன்மானம் நிச்சயம் கொடுக்க வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஸ்கூல்ல…… காலேஜ்ல படிச்சா……. என்ன பண்ணனும்? பைசா…. பீஸ் கட்டணும். .
போகர் சித்தர்:- ஆனால் நீங்கள் நிச்சயம் கட்டுங்கள் பின் தர்மத்தை.
சுவடி ஓதும் மைந்தன்:- நீங்கள் கண்டிப்பா பீஸ் கட்டணும். என்ன பீஸ் கட்டணும்?
அடியவர்கள்:- தர்மம்
சுவடி ஓதும் மைந்தன்:- தர்மம் என்ற பீஸ நீங்க கட்டியே ஆகணும்ன்றாரு வந்து…
போகர் சித்தர்:- கட்டவில்லை என்றால் நிச்சயம் வெளியே தான்
சுவடி ஓதும் மைந்தன்:- ஸ்கூல்ல பீஸ் கட்டினால் என்ன பண்ணுவாங்க? உள்ளார வைப்பாங்க. எல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க. இல்லையென்றால்? அடிச்சு துரத்திடுவாங்க… டேய் நீ வெளிய போடா…. தேவையில்லை…
அதேபோலத்தான்… நீங்கள் இதுவரைக்கும் நான் உனக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுத்துக்கிறேன்.
நீங்க என்ன பண்ணனும்? தர்மம் செய்யணும். இல்லையென்றால் உங்களை என்ன பண்ணுவாரு கழுத்து புடிச்சு வெளிய தள்ளிடுவாரு. நீ போடாப்பா வெளிய ஐயா புரியுதுங்களா?
ஐயா தர்மம் தர்மம் இதுக்கு வந்து சன்மானம் என்னது? தர்மம் அது ஒழுங்கா செய்யணும் இல்லையென்றால் நீங்கள் ஃபெயில். கழுத்து புடிச்சு வெளிய தள்ளிடுவார்.
===========================
# வந்த அனைவருக்கும் அன்னையின் ஆசிகள்……
===========================
போகர் சித்தர்:- ஏனென்றால் இதை தன் அறிய இன்னும் சொல்கின்றேன். இன்னும் அகத்தியன் வந்து சொல்வான். இப்பொழுது ஆசிகள். அன்னையின் ஆசிகளும் அனைவருக்கும் பெற்று தந்துவிட்டேன்.
அடியவர் 7:- ஐயா… ஐயா இங்க இங்க எல்லாரும் எல்லாரும்… இங்க ஐயா என்னை மன்னிச்சுக்கோங்க ஐயா… போகர் ஐயா… நான் கேக்குறேன்னு சொல்லி…. இங்க அத்தனை பேருமே ஐயா கிட்ட இருந்து அருள் வாக்கு வாங்கலாம்னு சொல்லி எதிர்பார்த்து வந்தாங்க…. ஆளுக்காள் மனசுக்குள்ள ஒரு சின்ன ( வருத்தம் - வாக்கு கிடைக்கவில்லை என்று) …
போகர் சித்தர்:- இதை தன் அறிய வந்து இதனால் இப்பொழுது என்ன சொல்லிக் கொண்டிருக்கின்றேன்? அனைத்தும் நீக்கத்தான் இவையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றேன்.
இதனால் அடுத்து இன்னும் பெரிய வாய்ப்பு அளிக்க போகின்றான் அகத்தியன். சரியாக உபயோகித்துக் கொள்ளுங்கள்.
அடியவர்கள்:- ( சந்தோஷத்தில்…. பலத்த கை தட்டல்கள்…..)
சுவடி ஓதும் மைந்தன்:- அடுத்து பெரிய ஒரு வாய்ப்பு தராரும்மா…. அதுல வந்து நீங்க கேள்வி கேட்டுக்கலாம் அகத்திய பெருமானை…. ஆனா அதுக்கு முன்னாடி என்ன பண்ணனும்? தர்மம் செய்யணும்ன்றாரு வந்து… சரியாக வந்து இதெல்லாம் செஞ்சுட்டு வந்தீங்கன்னா அடுத்து வந்து என்ன பண்ணுவாரு? தனியா உட்கார வச்சிடுவாரு.
அடியவர் 7:- ஐயா நவம்பர் தீபாவளிக்கு முடிந்து, ஆறுபடை வீடு போறதுக்கு உங்க ஆசீர்வாதமும் நீங்களும் கூட வரணும் ஐயா. புது பசங்க அத்தனை பேரும் போக்குறதுக்கு அருள் பண்ணனும்.
போகர் சித்தர்:- எதை ஏது என்று புரிய எவ்வாறு அனைத்தும் நலமே.
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாமே நலமேன்றாரு…. அதெல்லாம் ஈஸியா…. ஐயா கோயில்கள்ல அதெல்லாம் ஈஸியா கொடுத்துருவாருங்க வந்து….. அறிவு வளர்ப்பது தான் இப்ப பெருசு.
அடியவர்கள்:- ( சிரிப்புகள் )
ஒரு அடியவர் :- ( தனி கேள்வி.)
போகர் சித்தர்:- இதைத்தான் தாயே இப்பொழுது வேண்டாம். அதாவது சொல்லிவிட்டேன் அல்லவா?
சுவடி ஓதும் மைந்தன்:- கார்த்திகை மாசம் கண்டிப்பா சொல்லுவாரு
===========================
# சித்தர்களிடம் கேட்டு பெறுவது தானம்
# சித்தர்களிடம் எதையும் கேட்காமல் தானாகவே பெறுவது தர்மம்.
# தானம் வேண்டுமா ? தர்மம் வேண்டுமா ?
===========================
போகர் சித்தர்:- தாயே இதனால் நிச்சயம் நீங்கள் அதாவது கேட்டு பெறுவது தானம். பின் நீங்கள் கேட்காமலே தருவது உங்களுக்கு தர்மம். எதை வேண்டும்? இப்பொழுது சொல்லுங்கள்.
அடியவர்கள் :- ( சில உரையாடல்கள் )
===========================
# அகத்திய மாமுனிவர் யாத்திரை யாத்திரை குழுவினர் வேண்டுதல்
===========================
அடியவர் 7:- ஐயா ஐயா ஒரே ஒரு சின்ன ஒரு ரிக்வெஸ்ட் ஐயா…. நாங்க 52 பேரும் முருகனை பார்க்க வர நேரம்… கந்த சஷ்டி விழா ஐயா…. நல்ல கூட்டம் இருக்கும்…. நீங்க எங்க கூட இருந்து…. முருகனை ஆறுபடையில தரிசனம் பண்ண முடியும்…
போகர் சித்தர்:- இதை தன் அறிய பின் அதாவது பின் முருகன் பார்த்துக் கொள்வான். அதாவது அனைத்தும் எளிதாக கிடைத்துவிட்டால்? இதை தன் அறிய அதாவது முருகன் என்ன நினைக்கின்றானோ அதுவாக ஆகட்டும் ஆனாலும் துணை.
அடியவர் 7:- அது போதும்யா அது போதும்யா நன்றியா நன்றியா
===========================
# குழந்தைகள் பொது நல கேள்வி……
===========================
அடியவர் 13 :- ஒரே ஒரு பொதுவான வாக்கு மட்டும் கேட்கணும்யா நான் ஸ்கூல்ல டீச்சரா இருக்கேன்யா. குழந்தைகள் எல்லாம் அந்த போனுக்கு ரொம்பவே இதாகுறாங்க… பேரண்ட்ஸ் அதை அடிமைக்கிறாங்க… அதை உண்மையிலேயே பாக்குறப்ப..
போகர் சித்தர்:- தாயே இதனைப் பற்றி யான் எடுத்துரைத்து விட்டேன். அகத்தியனும்எடுத்துரைத்து விட்டான். அதனால்தான் பக்தர்கள் எதை என்று புரிய சிறிது பின் பக்தியாவது இருந்தால் அவர்களை இவ்வாறாக வளமாக்கி, அதை அனைத்தும் தீர்த்து கட்டி விடுவோம்.
அடியவர் 14 :- ஐயா பொது வாக்கு ஐயா. பிள்ளைங்க வந்து இங்கிலீஷ் மட்டும் படிக்கிறது. இல்ல தமிழ் படிக்க மாட்டேங்குது.
போகர் சித்தர்:- தாயே எதை படித்தாலும் முதலில் வெற்றி தருவது யாங்கள்தான். அதாவது கஷ்டம் என்ற படிப்பை படிக்கச் சொல் போதும்.
எவ்வளவு பெரிய மேதைகள் எல்லாம் நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
ஆனால் மனம் சரியாக இருந்தால் போதுமானது தாயே.
மொழி என்பது பிரச்சனை இல்லை பின் ஒரு துளி அளவில் யாங்கள் கொடுத்துவிட்டு செல்வோம், பின் அதாவது அறிவை.
சுவடி ஓதும் மைந்தன்:- அம்மா எங்களுக்கு கொடுக்க தெரியும் ஒரு செகண்ட் கொடுக்க தெரியும்ன்றாரு வந்து… மொழி என்றது பிரச்சனையே இல்லை…. நல்ல மனங்கள்… நல்ல குணம் தான் இங்க பிரச்சனைன்றாரு…. வந்து…. அதனால அதை கத்துக்கொடுங்கன்றாரு தர்மத்தை பத்தி கத்துக்கொடுங்க… இதுதான் பாடம்.
போகர் சித்தர்:- தாயே அன்றைய கல்வி எப்படி? அதாவது இறைவனைப் பற்றித்தான். ஆனால் இன்றைய கல்வி அப்படி இல்லை.
அப்படி இல்லை இதனால் பின் எதை என்ற ஒரு அனைத்தும் தோல்விகள் தான்
அடியவர் 14 :- அதனால ஐயா ஒரு வார்த்தை ஐயா…. அதாவது தமிழகத்துல தமிழ் பாடத்துல வந்து சிலபஸ் குறைச்சிட்டாங்க…. எதுக்கு நார்த் இந்தியனும் தெலுங்குக்காரும் எல்லாருமே வந்து தமிழை ஈஸியா படிச்சு பாஸ் பண்றதுக்காக….
போகர் சித்தர்:- தாயே எது என்று புரிய ஆனாலும் எப்படி செய்தாலும் உயர்வுகள் கொடுப்பது யாங்களே தானே.
நிச்சயம் இப்பொழுது படிப்பதெல்லாம் ஒரு பாடமே இல்லை. புரிந்துகொள் தாயே.
எது பாடம் என்று அதாவது இப்பொழுது சொல்லிக் கொடுத்தேனே இவ்வாறெல்லாம் இறைவனைப் பற்றியும் இறைவன் சிந்தனை வளர்ப்பதும்… தர்மங்கள் செய்வதும்…. உலகத்தை நன்மை பின் அதாவது உலகத்திற்காக நன்மை செய்வதும்…. இதுதான் ஒரு படிப்பு. பின் அப்படி இப்பொழுது உள்ளதா என்று நீ கூறு?
அடியவர் 14 :- இல்லை
போகர் சித்தர்:- அதனால் இப்பொழுதெல்லாம் ஏதோ ஒரு பின் அதாவது பின் மகிழ்ச்சிக்காகத்தான் வந்து சென்று கொண்டிருக்கின்றார்கள். இவருக்கெல்லாம் நல்லது செய்ய முடியாது தாயே.
===========================
# யாரை சித்தர்கள் உயர்த்தி விடுவார்கள்?
===========================
போகர் சித்தர்:- எப்போது உலகத்திற்காக பாடுபடுகின்றானோ அவனைத்தான் நாங்கள் மேல் நோக்கி பின் விடுவோம்.
அன்றைய பின்னாளில் திருவாசகமும் தேவாரமும் இன்னும் அகில எதை என்று புரிய இன்னும் பல வழிகளில் கூட. ஆனால் பின் நிச்சயம் இப்பொழுது இருக்கும் புத்தகங்கள் அனைவருக்கும் பின் அழிவதற்கே.
அதாவது பின் எவை என்று ஒரு அனைத்தும் இதைத்தன் அறிய சமமாக எதை என்று அறிய புரிய. அதனால் அனைத்தும் திருவாசகம் இன்னும் இதைத்தன் அறிய அதாவது இன்னும் பல பல வழிகள் கூட சமயங்கள் பின் பற்றியும் கூட அனைத்தும் ஒன்றாக இருந்தது. இன்று பிரித்துவிட்டார்கள்.
மனிதனை பிரித்தால் பின் எவை என்று அறிய..
சுவடி ஓதும் மைந்தன்:- அதனால மனிதன் பிரிப்பதற்காகவே எல்லாம் என்ன பண்ணிட்டாங்க வந்து? ( அனைத்து மத பாடங்களை பள்ளிகளில் ) சொல்றது இல்ல.
போகர் சித்தர்:- இதனால்தான் இதை தன் அன்றைய பின் அதாவது காலகட்டம் தர்மத்தில். பின் இவ்வாறு சென்றால் வெற்றி உண்டு என்று. ஆனால் இன்று அப்படி இல்லை அனைத்தும் காதலாக மாறிவிட்டது. பின் காதல் கூடங்களாக மாறிவிட்டது. அனைத்தும் சொல்லிவிட்டேன்.
ஒரு அடியவர்:- ஐயா உடல் தானம் இறந்தவங்க தானம் பண்றாங்க அதை பத்தி கேட்கணும்
போகர் சித்தர்:- தாயே இப்பொழுது தேவையில்லை. இவ்வறிவு வளர்ப்பதற்கு இன்னும் இன்னும் எதை என்று அறிய.
===========================
# போகர் சித்தர் இங்கு ஆசிரியராக
===========================
போகர் சித்தர்:- இதைத்தன் அறிய இப்பொழுது கூறுங்கள் பார்ப்போம். பின் நிச்சயம் அதாவது உங்களுக்கு ஒரு ஆசிரியன் பின் அதாவது சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தான். அவ்வளவுதான் என்று எண்ணிக்கொள்ளுங்கள்.
இதையெல்லாம் நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம் எவ்வாறு என்பதெல்லாம் அப்பனே அதுபோல் நீ நினைக்கக்கூடாது. ஆனால் இதை பயன்படுத்த வேண்டும்.
===========================
# சித்தர்களிடம் கேள்வி கேட்டு…… பதில் பெறுவது தானத்தில் போய் விடும். அதில் பலனில்லை.
===========================
அடியவர் 16:- ஐயா இறைவனே வந்து வேலை ஆளாக சொன்னாரு ஐயா. இப்ப அகத்தியர் வந்து ஈரேழு லோகத்தையுமே வந்து அவர் பார்த்துக்கிறார். அப்ப எப்பேர்ப்பட்டவர் இந்த இறைவன்றது…. ஒரு கொஞ்சமாவது எங்களுக்கு அந்த அறிவு கொடுங்க ஐயா.
போகர் சித்தர்:- தாயே இன்னும் பொறுத்திரு… ஒவ்வொரு சித்தனும் ஒவ்வொன்றை சொல்கின்ற பொழுது உனக்கு புரிந்துவிடும்.
தாயே இப்பொழுது சொன்னேன்.
நீங்கள் பின் கேட்டு பெறுவது தானத்தில் போய்விடும். இதனால் பலன் இல்லை.
சுவடி ஓதும் மைந்தன்:- ஆசிரியன் வந்து ஒரு மாணவனுக்கு சொல்லிக் கொடுத்து இப்படி பண்றான்னு சொல்லிக் கொடுக்கிறது.. அது தர்மம். மாணவன் வந்து ஆசிரியனை வந்து, நீ அப்படி சொல்லி கேள்வி கேட்டால் அது தானம். அது வந்து பயன் இல்லாம போயிடும்ன்றாரு அம்மா. டீச்சர் அம்மா புரியுதா?
===========================
# ஏன் இவ் சித்தர்கள் ஆட்சி வலை தலத்தில் அடியவர்கள் கேள்வி பதில் வருவதில்லை என்ற கேள்விக்கு பதிலும் இங்கு உள்ளது என்று அடியவர்கள் அறிய தருகின்றோம்.
===========================
# அடியவர்கள் சித்தர்களிடம் கேள்விகள் கேட்பது தானம்.
# சித்தர்கள் வாக்குகளை அப்படியே பின் பற்றுவது தர்மம்.
===========================
போகர் சித்தர்:- தாயே இதனால்தான் இன்றைய கால அதாவது இளைஞர்கள் எதை என்று புரிய, அதாவது உலகத்தை அழகாக அழிக்கப் போகின்றார்கள். இதனை மாற்றுவதற்கே. எப்படியாவது சித்தர்கள் நாங்கள் செய்தே ஆகவேண்டும். அதற்கெல்லாம் நீங்கள் துணை நின்றால் சரி.
அடியவர்கள்:- கண்டிப்பாக ஐயா…. கண்டிப்பாக ஐயா … ( துணை நிற்போம் )
ஒரு அடியவர்:- ஐயா ஓலைச்சுவடி எல்லாம் திருடிவிட்டு போனாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்போ சித்தர்கள் வந்து விஞ்ஞானிக்கு மேல… அஷ்டம சித்திகள் எல்லாத்தையும் அடகுணவங்க…
போகர் சித்தர்:- இதைத்தன் அறிய அதில் இருப்பவை எல்லாம் இக் கலியுகத்தில் தெரியவரும் அனைத்தும்.
சுவடி ஓதும் மைந்தன்:- அதுல எழுதி வச்சிருக்காங்க பாருங்க… எல்லாமே கலியுகத்துல சித்தர்கள் வந்து பரப்பிடுவாங்கன்னு…
ஒரு அடியவர்:- (ஆதிகால ஓலைச்சுவடி அதனை ) தெரியாமல் எடுத்து போயிட்டாங்க…. இவங்களாலதான் அதை கையாளவே முடியும் அவங்களுக்கு?
போகர் சித்தர்:- எதை எது என்று புரிய அப்பா. உன்னை யோசித்துப் பார் நீ என்ன படித்துக் கொண்டிருந்தாய் ? நீ என்ன பார்த்துக் கொண்டிருந்தாய் யான் பார்த்தேன் அப்பா.
அடியவர்கள்:- ( சிரிப்புகள் )
சுவடி ஓதும் மைந்தன்:- சரி ஓகே.
சுவடி ஓதும் மைந்தன்:- பாருங்க சித்தர் வந்து பார்த்தா மட்டும்தான்…. உங்களை அவர் கையில வர முடியும்…. அவர் வாக்கு கேட்க முடியும்…. இப்ப பார்த்தீங்களா உங்களை என்ன வாட்ச் பண்ணிருக்காருன்னு….. ஸ்கேனர்…. இப்பதான் சொன்னாரு ஸ்கேன் பண்ணிட்டாரு உங்களை….. அதுக்குள்ள எல்லாத்தையும் பண்ணிட்டாரு….. எல்லாம் பண்ணிட்டாரு அவ்வளவுதான்…. ஸ்கேன் பண்ணிட்டாருன்னா அவ்வளவுதான்….
போகர் சித்தர்:- இப்பொழுது கூறுங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்று ?
அடியவர் 7:- நீங்கள் கொடுத்ததே போதும் ஐயா.
அடியவர் 16:- தமிழ் மொழியின் வளர்ச்சி
போகர் சித்தர்:- தாயே இதையெல்லாம் இன்னும் இருக்கிறது. இப்பொழுது நேரங்கள் போதாதது. இப்பொழுது போதும்.
உங்களுக்கு என்ன தேவையோ அதை கொடுத்து அனுப்புகின்றேன் போதுமா?
அடியவர் 7:- போதும்
போகர் சித்தர்:- நன்மைகளே நடக்கும். அதாவது என் பிள்ளையை பிடித்துக் கொள்ளுங்கள் அழகாக…
===========================
பின் வரும் வாக்குகள் எற்கனவே அடியவர்கள் உடனே பலன் பெற…. நவராத்திரியின் பொழுது…. அடியவர்களுக்கு…. குருவருளால் வெளியிடப்பட்டது…. என்று அடியவர்கள் அறிய தருகின்றோம்.
சித்தன் அருள் - 2346 - அன்புடன் அகத்தியர் - போகர் சித்தர் சென்னையில் உரைத்த வாக்கு. - புவனேஸ்வரி அன்னை மந்திரம்
https://tut-temples.blogspot.com/2026/10/2346.html
( மீண்டும் இவ் வாக்கினை இங்கு காண்போம்)
===========================
போகர் சித்தர்:- நன்மையே நடக்கும், அதாவது என் பிள்ளையைப் பிடித்துக் கொள்ளுங்கள், அழகாக.
சுவடி ஓதும் மைந்தன்:- என் பிள்ளைன்னா யாரு? முருகப்பெருமான்.
போகர் சித்தர்:- என் தாய்க்கும் நிச்சயம் பின் நல் விதமாகச் செய்யுங்கள், போதும்.
சுவடி ஓதும் மைந்தன்:- என் தாய்க்கன்னா யாரு?
அடியவர்கள் :- அம்பாள்.
சுவடி ஓதும் மைந்தன்:- அம்பாளுக்கு செஞ்சிருங்கன்னு சொல்லிட்டார் அய்யா. அம்பாளுக்கு வந்து ஒரு டெய்லி வந்து ஒரு புடவை சாத்திருங்க, ஐயா. ஒரு கோயில்ல போயிட்டு கொடுத்துருங்க.
(இதனை இயன்ற போது செய்து வாருங்கள்.)
போகர் சித்தர்:- இதைத் தன் அங்க இருப்பவர்களுக்கு ஏதாவது இனிப்பை தானம் செய்யுங்கள். அதாவது தானம் என்று பின் எதை என்று நினைக்கக்கூடாது.
சுவடி ஓதும் மைந்தன்:- செய்யுங்க. நீங்க எதையும் நினைக்கக் கூடாது. நீங்க வந்து கொடுத்துட்டு வந்தீங்கன்னா இருக்கணும். போகர் சித்தர் இவர் சொன்னாரா? அவ்வளவுதான். முடிஞ்சு போச்சு. அதனால் அது வந்து இல்லைன்னா தானத்துல போயிடும்ன்றாரு.
அடியவர்கள் :- யோசிக்க கூடாது.
சுவடி ஓதும் மைந்தன்:- அதுதான்.
போகர் சித்தர்:- அதுதான் தாயே இதனால் மனிதன் மனிதன் ஒரு இயந்திரம். இயந்திரத்தைப் பற்றி எல்லாம் அகத்தியன் சொல்வான் வரும் காலத்தில். இதனால் பின் எப்பொழுது எதற்காக நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கின்றீர்கள்? எதற்காக ஓடுகின்றீர்கள்? எதற்காக பின் சிந்திக்கின்றீர்கள்? என்பவையெல்லாம் உங்களை நிச்சயம் ஒரு இசை… அதாவது இசையும்… அதாவது அது திசையும் சொல்லலாம். அதாவது ஒரு விசையும் இயக்குகின்றது அவ்வளவுதான். அவ்விசையைப் பற்றி அகத்தியன் சொல்வான். புரிந்து கொள்ளுங்கள். வெற்றி கொள்ளுங்கள்.
***** ஓம் ஐம் க்லீம் புவனேஸ்வரி தாயே வருக. *****
***** குறைகள் நீக்குக. *****
***** எப்பொழுதும் என் உள்ளத்தில் குடியிருக்க. *****
***** குடியிருந்து காக்குக. *****
***** காத்து அருளுக. *****
***** மக்கள் அனைவரும் செழிப்புடன் வாழ. *****
***** ஓம் மம மம வசி மம வசி ஐம் க்லீம் புவனேஸ்வரியே நமஹ. *****
எனும் மந்திரத்தை உள்ளத்தில் ஒலிக்கட்டும். ஆசிகள், ஆசிகள்.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் , புரட்டாசி மாதம், 16/10/2026 அன்று அன்புடன் போகர் சித்தர் - அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கு சென்னையில் உரைத்த வாக்குகள் நிறைவு அடைந்தது…)











No comments:
Post a Comment