இறைவா நீயே அனைத்தும்! இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!
இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே!
இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! சர்வம் சிவார்ப்பணம்
அன்புடன் பூலோகத்தை காத்து அருளக்கூடிய அகத்திய மாமுனிவர் விதி ரகசியங்கள் குறித்து உரைத்த வாக்கு.
( வணக்கம் அடியவர்களே, குருநாதர் அருளால் , கருணையால் இவ் சித்தர்கள் ஆட்சி வலை தளத்தில் வாக்குகள் வெளிவர ஆரம்பித்தபோது, முதல் வாக்கு ஆதி ஈசனார் வாக்காக வெளிவந்தது.
இவ் வாக்குகளை அறிய பின்வரும் லிங்க் அதனை நீங்கள் கிளிக் செய்து , அதன் உள்ளே சென்று பார்க்கவும்.
(1) சித்தர்கள் குருகுலம் - 2350 - அன்புடன் அகத்தியர் - ஆதி ஈசன் 23/10/2026 அன்று கேதார்நாத் திருத்தலத்தில் உரைத்த வாக்கு! - https://tut-temples.blogspot.com/2026/10/2350-23102026.html
அதன் பின்னர் இரண்டாவது வாக்காக - குருநாதர் அருளால் , கருணையால் அதன் பின்னர் ஸ்ரீமன் நாராயண பெருமாள் முதல் முறையாக ஜீவ நாடியில் உரைத்த வாக்கு வெளிவந்தது.
இவ் வாக்குகளை அறிய பின்வரும் லிங்க் அதனை நீங்கள் கிளிக் செய்து , அதன் உள்ளே சென்று பார்க்கவும்.
(2) சித்தர்கள் குருகுலம் - 2351 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீமன் நாராயண பெருமாள் ஜீவ நாடியில் உரைத்த வாக்கு - https://tut-temples.blogspot.com/2026/10/2351.html
(3) இப்போது மூன்றாவது வாக்காக படைப்பு கடவுள் பிரமதேவர் குறித்து அன்புடன் அகத்திய மாமுனிவர் உரைத்த வாக்கு அதனை நீங்கள் இப்போது படிக்க உள்ளீர்கள்.
எனவே குருநாதர் அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் - மும் மூர்த்திகளின் ஆசிகளோடு, அவர்கள் வாக்குகள் வெளிவந்து......
இதன் பின்னர் அனைத்து வாக்குகளும் இங்கு வெளிவரும் என்று அடியவர்கள் அறிய தருகின்றோம். வாருங்கள் வாக்கின் உள் செல்வோம்)
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவசங்கரியின், பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே, அம்மையே, அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்.
கவலைகள் வேண்டாம்.
===========================
# விதி மாற்றம் எப்போது நிகழும்?
===========================
எப்பொழுதும், எதை, யார் யாருக்கு, என்ன செய்ய வேண்டுமோ, அவையெல்லாம் ஏற்கனவே சரியாக—அதாவது, பின் பிரம்மன் எழுதிதான் இவ்வுலகத்திற்கு அனுப்புகின்றான்.
இவையெல்லாம் பின் யான் சொல்லிவிட்டேன்.
ஆனாலும், நிச்சயம் அதை மாற்ற சற்று காலம், நிச்சயம் பொறுத்தே ஆகவேண்டும் அனைவருமே, நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதெல்லாம்.
இதனால், நிச்சயம் எதை என்று புரிய தான் தான் செய்யும். புண்ணியங்கள் எல்லாம் பிரம்மாவிடம் எடுத்துரைத்து, விதியை நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு மாற்றுவதெல்லாம், நிச்சயம் பின்—அதாவது, அறிந்து கூற .
அதனால்தான், உங்கள் பின் ஒவ்வொரு பின் குற்றம் எதை என்று, நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதெல்லாம்.
குற்றம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு குறை.
இதைத்தான் பின் பிரம்மனாலே எழுதப்பட்டது.
அவையெல்லாம், நிச்சயம் பின் மாற்றியும் தருவேன். மாற்றியும் தந்து கொண்டும் இருக்கின்றேன். கவலைகள் வேண்டாம்.
===========================
# மனிதனுக்கு உதவாத காரியங்கள் எல்லாம், பரிகாரத்தால் மாற்ற முடியும்.
===========================
இதனால், பின் என் பின்னே வருவோருக்கெல்லாம், நிச்சயம் தன்னில் எவ்வாறு என்பதெல்லாம்.
சில காரியங்கள் பரிகாரத்தால் முடியும்.
ஆனாலும், எதை என்று புரிய, பின் சிறு சிறு—அதாவது, நிச்சயம் மனிதனுக்கு உதவாத காரியங்கள் எல்லாம், பரிகாரத்தால் முடியும்.
===========================
# மனிதனுக்கு உதவும் காரியங்கள் எல்லாம், விதி மாற்றினால் மட்டுமே முடியும்.
===========================
ஆனாலும், பின் நிச்சயம் எதை என்று புரிய, உதவும் எதை என்று, நிச்சயம் தன்னில் கூட , பின் சில—பின் எவை என்று அறிய, பின் அவற்றுக்கெல்லாம் விதியும் தான்…..
பின் எதை என்று கூற, பின்—அதாவது, பின் தர்மங்கள் செய்வதனால் மட்டுமே, நிச்சயம் தன்னில் கூட மாற்ற இயலும் அப்பா.
அதனால்தான், அப்னே, நிச்சயம் தன்னில் கூட , பின் எவை என்று கூற , உதவாத காரியங்களுக்கு, அப்பனே, பரிகாரம்.
உதவும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட , காரியங்களுக்கு, அப்பனே, பின் விதியைத்தான் மாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டேன் அப்பனே.
கவலைகள் வேண்டாம் என்பேன் அப்பனே.
இதனால், பின் அவரவருக்கு என்ன தேவை, ஏது என்று உணர்ந்தெல்லாம், அப்பனே, நிச்சயம் எனை நம்பி வந்துவிட்டாலே, உங்கள் நினைப்புகள், அப்பனே, பின் என்ன நிலை என்றெல்லாம் யான் தெரியும்.
யான் அறிந்திருக்கின்றேன்.
யான், அதாவது, தெரியவும் வைத்திருக்கின்றேன் பலமுறை, பலமுறை, பிரம்மாவிடம் கூற .
அப்பனே, இதனால் நல்விதமாக அப்பனே, நீங்களும் கேட்கலாம்.
பின் அனைத்தும், பின் உங்களுக்கு தெரியுமே என்றால் அப்பனே….
===========================
# படைப்பு கடவுள் பிரமதேவர், அகத்திய மாமுனிவர் பக்தர்களுக்காக உரைத்த வாக்கு
===========================
ஆனாலும் யாரிடம், அப்பனே, எதை என்று கூற, எத் தொழில், அப்பனே, பின் செய்கின்றாரோ, அவர்களிடத்திலே முறையிட்டுத்தான், அப்பனே, நிச்சயம்.
ஆனாலும், பிரம்மனும், பின் எதை என்று கூற , பின் ஏது என்று புரிய, அடிக்கடி வந்து விடுகின்றாயே அகத்தியனே !!!!! எவ்வாறு என்பதெல்லாம்,
உன் பக்தர்களுக்கு எவ்வாறு என்பதெல்லாம், என்றெல்லாம், நிச்சயம் அழகாக.
எதை என்று கூற சரி, எவ்வாறு என்பதெல்லாம், பின், அதாவது, உன் பக்தனுக்கு, நிச்சயம் விதிவிலக்கும், பின் கொடுக்கின்றேன்.
ஆனாலும், சற்று ஆண்டுகள் பொறுத்தே ஆகவேண்டும். நிச்சயம் தன்னில் கூட.
ஏனென்றால், சற்று, பின் ஆண்டுகள் பொறுத்து, பின் எவை என்று கூற , பின் அனைத்தும் தீர்ப்பேன்.
ஏனென்றால், பொறுத்துக்கொள்ளும், சகித்துக் கொள்ளும் தன்மை இருந்தால் மட்டுமே, பின் நிச்சயம் யான் மாற்றுவேன், அகத்தியனே, என்றெல்லாம்.
அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, யான் தருவேன். பொறுத்திரு, நிச்சயம் நடத்துவேன்.
அதாவது, வழிகள் செய்வேன் என்றெல்லாம், அப்பனே, மனிதனுக்கு எடுத்துரைத்து கொண்டே வருகின்றேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
===========================
# கருணை கடல் அகத்திய மாமுனிவர், தனது பல பக்தர்களுக்காக விதியினை மாற்றியும் தந்து கொண்டே இருக்கின்றார்கள்.
===========================
இதனால், பின் படைக்கும் பொழுதே, அப்பனே, விதியை எதை என்று கூற , அப்பனே, எதை என்று அறிய, அப்பனே, அறிந்துதான், அப்பனே, பின் இறைவன் அனுப்புகின்றான் என்பேன் அப்பனே.
இதனால், இங்கு (விதியை) மாற்றுவது என்பது கடினம் தான், அப்பா.
ஆனாலும், அப்பனே, நிச்சயம், பின் அவரவர் எண்ணங்கள், அவரவர் செயல்கள், அப்பனே, பின் ஏற்றார் போல், அப்பனே, யான் நிச்சயம் தன்னில் கூட , பிரம்மாவிடத்திலே முறையிட்டு, அப்பனே, மாற்றியும் தந்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே.
மாற்றங்கள், அப்பனே, அனைவருக்கும் உண்டு.
ஏற்குறைகளும் கொள்ள வேண்டாம்.
===========================
# கடமையை செய்.... உங்கள் முயற்சியை நீங்கள் மேற்கொள்ளுங்கள்.
===========================
என் மடியிலே வந்துவிட்டால், அப்பனே, யான் பார்த்துக் கொள்வேன்.
உங்கள் வேலை இல்லை என்பேன் அப்பனே.
உங்கள் வேலை, அப்பனே, பின் எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, அதாவது, உண்ணும் உணவில், அப்பனே, பின் எதை போதவில்லையோ, அதை பின் இடுவதே.
ஆனாலும், அப்பனே, நிச்சயம் உணவு உள்ளுக்குள் சென்றால், அது எப்படி, எதை என்று விஷமாகவோ அல்லது, நிச்சயம் எதை என்று புரிய, அப்பனே, சக்தியாக மாற்றுவதா என்பதெல்லாம் உங்களுக்கு தெரியாது, அப்பா.
அதேபோலத்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட , உங்கள் முயற்சியை நீங்கள் மேற்கொள்ளுங்கள்.
அப்பனே, மீதி எல்லாம் யான் பார்த்துக் கொள்கின்றேன். சொல்லிவிட்டேன், அப்பனே, புரிகின்றதா, அனைவருக்கும்?
அடியவர்:- சரிங்க அய்யா, புரியுது. நீங்க முயற்சி பண்ணுங்க. நாங்க செய்ற விதிப்படி…
சுவடி ஓதும் மைந்தன்:- சும்மா ஒரு முயற்சிதான் நீங்க வந்து… மீதி விதிப்படி இருக்கும். அது மாதிரி வந்து செஞ்சுட்டு, நீங்க முயற்சினா எப்படி சொல்லுவீங்க? என்ன சொல்றதுன்னா?
அடியவர் 1:- கடமையை செய்யணும்.
சுவடி ஓதும் மைந்தன்:- நீங்க உங்க கடமை செஞ்சிருங்க.
அடியவர் 3:- அவர் சொன்னாரு, நீங்க உணவு சாப்பிடுறதும்.. சாப்பிடுறது. அது உள்ள போயி, அது சக்தியா மாறுதா? விஷமா மாறுதா? அப்படிங்கறது உங்களுக்கு தெரியாது.
சுவடி ஓதும் மைந்தன்:- தெரியாது. அதனால, நீங்க என்ன பண்றீங்க? வந்து இப்போ ஒரு வேலை தேடணுமா? தேடுங்க. அது நல்லதா, கெட்டதான்னு சொல்லிட்டு, நான் மாத்தி நான் கொடுக்கிறேன். அப்போ உங்களுக்கு ஒரு காரியமா? போங்க. ஆனா அமைதியா இருக்க கூடாது. அகத்தியர் நடத்தி வைக்கணும்னா… அகத்தியருக்கு அது ஒரு காரியம் நடக்கும் போது தான் நீங்க போங்க. முயற்சி சும்மா பண்ணிடுங்க. சும்மாதான் அதெல்லாம் வந்து…. உப்பு போடுறேன்னா, சாப்பாடு அது மாதிரிதான். சும்மா போங்க. மீதி எல்லாம் நான் பார்த்துக்கிறேன்ப்பா.
அடியவர் 3:- விதியிலேயே எல்லாம் எழுதி, பிரம்மன் அனுப்பிச்சிட்டாரு. ஆனா உங்களுடைய எண்ணங்கள் செயல்களுக்கு ஏற்பார் போல, நான் அதை மாற்றிக் கொடுக்கிறேன், அப்படின்னு சொல்ராங்க.
சுவடி ஓதும் மைந்தன்:- அவ்வளவுதான்.
===========================
# பொறுமை இல்லாமல் தர்ம பாதையை விட்டு விலகும் பக்தர்கள்.
===========================
குருநாதர்:- அப்பனே, இதனால்தான் எதை என்று புரிய அப்பனே, பின் ஆனாலும், அப்பனே, பின் அதாவது சில, அப்பனே, பின் ஆண்டுகள் (புண்ணிய சேவைகளில்) இருந்து, அப்பனே, அவன் பின்னோக்கி சென்று விடுகின்றான்.
அப்பனே, நிச்சயம் பின் ஒன்றும் ஆகவில்லை என்று.
இதனால்தான், அப்பனே, யான் மனிதனை பார்த்து, நிச்சயம் எவை என்று அறிய, அப்பனே, பின் அதாவது இவ்வாறா என்றெல்லாம், பின் நிச்சயம்.
அதனால்தான் பல வகையிலும், பின் ஞானத்தை உரைக்க, சித்தர்கள் நாங்கள் வந்து கொண்டிருக்கின்றோம் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன்:- சிலர் ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ, இறைவனை வேண்டிப்பாங்களாம். வந்து நல்லா ஆகும்னு சொல்லிட்டு, என்ன பண்றாங்க? அவங்க சரி, ஒண்ணுமே நல்லா ஆகலடா.
அடியவர் 3:- பின்னோக்கி போயிடுறாங்க.
சுவடி ஓதும் மைந்தன்:- பின்னோக்கி போயிடுறாங்க. அதனாலதான் என்னடா, இதெல்லாம் வந்து அவரே அங்க வந்து கணக்கு போட்டுட்டாரு. யார்? பிரம்மனே. ஆண்டுகள் சில ஆண்டுகள் ஆகும்னு சொல்லிட்டு, அதனால போயிட்டாருப்பா.
குருநாதர்:- எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் எவ்வாறு மீண்டும் பிரம்மனிடத்தில் சென்றால்…..
பின் பார்த்தீர்களா மனிதர்களை? எதை என்று கூற ,
எப்படிப்பட்டவர்கள் என்று?
அகத்தியனே என்றெல்லாம், எவை என்று புரிய.
அதனால்தான், நிச்சயம் இவ் பிரம்மா விதியை எழுதினால், நிச்சயம் பின் யான் மாற்றப் போவது இல்லை என்றெல்லாம், அப்பனே, அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பான் என்னிடத்தில்.
சுவடி ஓதும் மைந்தன்:- அதனால்தான் விதி.. எப்படி? மனுஷனுக்கு பொறுமை இல்லை. அதனால நான் இப்படித்தான் போயிடுறான். ஏன்னா, உன் பக்தன் பார்த்து விதி விலக்கு கொடுத்தா, சரி, பார்ப்போம், பார்ப்போம்னு பார்த்தா, கடைசில என்ன பண்றான் அவர் வந்து?
அடியவர்:- பின்னாடி போயிடுறான்.
சுவடி ஓதும் மைந்தன்:- பின்னாடி போயிடுறான்.
அடியவர் 1:- விதி படியே போயிடுறான்.
===========================
# விதி என்ன? மதி என்ன? கதி என்ன?
===========================
குருநாதர்:- அப்பனே, இதனால்தான், நிச்சயம் தன்னில் கூட , விதி என்ன? மதி என்ன? கதி என்ன? அப்பனே, கூறுங்கள், பார்ப்போம்?.
சுவடி ஓதும் மைந்தன்:- விதி என்ன? மதி என்ன? கதி என்ன? நீங்க யாராவது சொல்லுங்கள் பார்ப்போம் என்றார்.
அடியவர் 1:- விதி…..
குருநாதர்:- அப்பனே, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட , அப்பனே, பின் அதாவது சித்தரிடத்தில் வந்துவிட்டால், அப்பனே, இவையெல்லாம் தேவையில்லை என்பேன் அப்பனே, சொல்லிவிட்டேன். அப்பனே, யான் கொடுப்பதுதான் பின் கடைசியில், அப்பனே.
அடியவர்கள்:- ( குழம்பி ஒன்றும் புரியாமல் இப்படியும் கூடவா நடக்கும் என்று சிரிப்புகள்)
சுவடி ஓதும் மைந்தன்:- சித்தரை நம்பி வந்துவிட்டால், விதியும் தேவையில்லை.
அடியவர் 1:- மதியும் தேவையில்லை.
சுவடி ஓதும் மைந்தன்:- மதியும் அறிவும் தேவையில்லை. என்னங்க, இது டிஃபரெண்ட். கதி என்றல் என்ன? எப்படி சொல்றது?
அடியவர் 2:- நம்ம அடையக்கூடிய நிலை.
அடியவர் 1:- முக்தி நிலை,
சுவடி ஓதும் மைந்தன்:- அதெல்லாம் வந்து நீங்க வந்து அதை பத்தி நாம (நினைக்கக்கூடாது)
அடியவர் 3 :- எல்லாமே எங்க கிட்ட தான் இருக்குன்றாரு.
சுவடி ஓதும் மைந்தன்:- ஆமா, எங்களை நம்பி வந்துவிட்டா, அப்படித்தான் பண்ணுவோம்ப்பா…. நான்…
குருநாதர்:- அப்பனே, ஏனென்றால் எங்கள் விருப்பப்படி யாங்கள் நடத்துவோம். அவ்வளவுதான் என்பேன் அப்பனே. ஏனென்றால் பாவம் சேர்கக்கூடாது. முக்தி, அப்பனே, நிச்சயம் அதாவது மோட்சத்திற்கு அழைத்துச் செல்வோம். அதனால் பொறுமை காத்திருக்க வேண்டும் அப்பனே. ஆனால் மனிதனுக்கு அவையெல்லாம் தெரிவதில்லை, அப்பா.
சுவடி ஓதும் மைந்தன்:- அதனால பாவத்துல நாங்க விடமாட்டோம். எங்க பின்னாடி வந்துட்டீங்கன்னா, முக்தி மோட்சத்துக்கு தான் அழைத்துச் செல்வோம்.
===========================
# சித்தர்களின் அருள்
===========================
குருநாதர்:- அப்பனே, நிச்சயம் அதாவது ஏற்கனவே சொல்லிவிட்டேன். பின் 40, 50, 60, 70, அப்பனே, பின் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு 10 வருடம் அல்லது ஐந்து வருடம், பின் அதாவது நிச்சயம் பாவத்திற்கு ஏற்ப தண்டனை வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே.
ஆனாலும் அவையெல்லாம் ஒரே நேரத்தில் இணைத்துக் கொடுத்து விடுவோம்.
அதனால்தான், அப்பனே, பின் நிச்சயம் தாமதமாகின்றது. கவலையே பட வேண்டாம்.
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லா விஷயங்களும் ஏன் தாமதமாகுதுன்னா, புரியுதுங்களா? எல்லாருக்கும், எல்லாருக்கும் ஏன் தாமதமாகுதுன்னா, சில விஷயங்கள் வந்து…. ஒவ்வொரு அஞ்சு வருஷத்துக்கும்….. 10 வருஷத்துக்கும், இது மாதிரி வந்து நிறைய கஷ்டங்கள் ஒருத்தர் ஒருத்தருக்கு விதியில் எழுதப்பட்டிருக்கும். கண்டங்கள், அதெல்லாம் வருமாம். அதெல்லாம் சேர்த்து ஒரே நேரத்துல…..
குருநாதர்:- அப்பனே, பின் அதையெல்லாம் தாங்கிக் கொண்டால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட , அப்பனே, ஞானம் பெறலாம் என்பேன்.
ஆனால் தாங்க முடியாதப்பா மனிதனால்.
அப்பனே, பின் நிச்சயம் தன்னில் சொல்லிவிட்டேன் அப்பனே. அதனால் நிச்சயம் விதியில் தன்னில் அனைவருக்குமே, அப்பனே, ஒவ்வொரு விஷயத்தில் கூற தடுமாற்றங்கள் உள்ளது.
அவையெல்லாம், அப்பனே, நிச்சயம் பின் பிரம்மாவிடம் சொல்லிவிட்டேன் அப்பனே. மாற்றி விடுவான். கவலைகள் வேண்டாம்.
அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட எதை என்று கூற , அனைவரும், அப்பனே, பின் ஒவ்வொன்றாக நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- அதனால நீங்க என்னென்ன விஷயங்கள் எல்லாம் நினைச்சிருக்கிறீங்களோ, ஒவ்வொருவரும் அது ஏற்கனவே விதியால் எழுதப்பட்டது. இங்க மாற்றவர்கள் எவரும் இல்லை. அதனால கொஞ்சம் சகித்துக் கொள்ளுங்கள். மீதி எல்லாம் நான் சொல்லிட்டேன்பா. ஆனா டக்குன்னு மாத்திட்டு, அது சொல்லிட்டாரு. கொடுத்துருவாரு.
குருநாதர்:- அப்பனே, கவலைகள் வேண்டாம்.
( இதன் பின்னர் தனி வாக்குகள் …)
ஆசிகள், ஆசிகள்.

No comments:
Post a Comment