இறைவா நீயே அனைத்தும்! இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!
இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே!
இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! சர்வம் சிவார்ப்பணம்
அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி! போற்றி!
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் , புரட்டாசி மாதம், 16/10/2026 அன்று அன்புடன் போகர் சித்தர் - அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கு சென்னையில் உரைத்த வாக்கு. பகுதி 3
வாக்குரைத்த தேதி: 16 அக்டோபர் 2026
வாக்குரைத்த நாள்: கன்னி திங்கள் , புரட்டாசி மாதம், வியாழக்கிழமை
வாக்குரைத்த இடம்: அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கு சென்னையில் உரைத்த வாக்கு.
===========================
# அன்புடன் போகர் சித்தர் வாக்கு
===========================
உலகத்தை அழகாக வழிநடத்தும் இறைவா, இறைவி போற்றியே, மனதில் நிறுத்தியே உரைப்பேன் போகனவன்.
(பகுதி 2 அதன் தொடர்ச்சியாக ….)
===========================
# இறைவன் யார் ?
===========================
போகர் சித்தர்:- (இறைவன்) இதைத்தன் அறிய பின் இவ்வாறாக எதை என்று கூற உண்மையான… நேர்மையான…. தர்மத்தை கடைபிடிக்கும் பணியாள்.
அந்த பணியாள், பின் நீங்கள் என்ன செய்கின்றீர்களோ அதை கொடுக்கின்றார்கள். அவ்வளவுதான்.
அப்பொழுது மீண்டும் சொல்லுங்கள் பார்ப்போம் இறைவன் யார் என்று?
அடியவர் 3:- நம் செயலின் விளைவு.
அடியவர் 6:- கருவியை நம்ம உடல்ல…….
போகர் சித்தர்:- தாயே ஒன்றை கேட்கின்றேன். பணியாளிடம் அனைத்தும் பின் கேட்டால் கொடுத்து விடுவானா என்ன? அதை சொல்லுங்கள் முதலில்?
அடியவர் 3:- கொடுக்க மாட்டார். நியாயமாக இருந்தால் மட்டும்….
சுவடி ஓதும் மைந்தன்:- பணியாளிடம் எல்லாம் வந்து கேட்டா கொடுத்துருவாரா?
போகர் சித்தர்:- அப் பணியாளர் என்ன செய்வான்?
அடியவர் 9:- நியாயமாக கொடுப்பார்
போகர் சித்தர்:- இதைத்தன் அறிய எவ்வாறு இதைத்தன் அறிய அதாவது. ஏற்கனவே சொன்னேனே அறிந்தும் இவை தன் அறிய அதற்கு ஏற்றார் போலத்தான்.
சுவடி ஓதும் மைந்தன்:- நீங்க சொல்றீங்க பாருங்க…. அந்த ஆன்மா வந்து …. அது என்னென்ன சொல்லுதோ ?
அடியவர் 7:- நம்ம ஆன்மா, அதை வைச்சிகிட்டு தான் (கேட்டுக்கிட்டுதான்) தான் நமக்கு தேவையானதை செய்வார்.
சுவடி ஓதும் மைந்தன்:- அம்மா புரியுதுங்களா?
போகர் சித்தர்:- இறைவனே யான் இங்கு பணியாள் என்று குறிப்பிடுவேன். ஆனால் நீங்கள் யார்?
சுவடி ஓதும் மைந்தன்:- போகர் என்ன சொல்றாருன்னா.. நான் அப்படித்தான் சொல்லுவேன். ஒவ்வொரு சித்தர்…… ஐயா யாரும் தப்புப்பா நினைக்காதீங்க….. இறைவா!!!!! ஐயா… எனக்கு பயமா இருக்குது இதெல்லாம் படிக்கிறதுக்கு
அடியவர் 7:- ( சிரிப்புகள்…)
சுவடி ஓதும் மைந்தன்:- … ஐயா இதெல்லாம் வந்து பாருங்களேன்…. இப்படி போகர் சொல்றாரு வந்து…. நான் இறைவனே பணியாளர் தான் சொல்லுவேன். அப்ப நீங்க யாருடான்னு கேக்குறாரு?
அடியவர் 4:- பணியாளுக்கு பணியாள்…
அடியவர் 11 :- அடியேனுக்கு அடியேன்….
போகர் சித்தர்:- இதைத்தன் அறிய பின் எவர் உளறினாலும் அவையெல்லாம் ஏற்க முடியாது.
அடியவர்கள் :- ( சிரிப்புகள்…)
சுவடி ஓதும் மைந்தன்:- நீங்கள் என்ன உளறினாலும் யான் ஏத்துக்க மாட்டேன்.
அடியவர் 4:- எனக்கு தெரியல ஐயா. நீங்க சொன்னாதான் தெரியும் ஐயா.
சுவடி ஓதும் மைந்தன்:- நீங்க எல்லாம் யாரு?
அடியவர் 7:- உயிர் இருக்கும் ஆனா உயிர் இல்லாத ஒரு பொருள். பொம்மை.
போகர் சித்தர்:- இதைத்தன் அறிய யான் சொல்வேன் மனிதனை உயிரற்றவன் என்று.
***** அப்பொழுது அப்ப பணியாளர் என்ன செய்வான்? *****
அடியவர் 10:- அந்த உயிரற்றவனை உயிருள்ளவனா மாத்துறதுக்கு பணியை செய்வார்….
போகர் சித்தர்:- இதைத்தன் அறிய இதில்தான் அறிவு அடங்கியுள்ளது.
அடியவர்கள்:- ( உரையாடல்கள் )
போகர் சித்தர்:- எதை பேசுங்கள் பார்ப்போம்
அடியவர்கள்:- ( உரையாடல்கள் )
போகர் சித்தர்:- பின் அதாவது மீண்டும் சொல்கின்றேன் மனிதன் உயிரற்றவன் அவ்வளவுதான்.
அடியவர்கள்:- ( உரையாடல்கள் )
போகர் சித்தர்:- பின் அதாவது இப்படியும் சொல்லலாம். உயிரற்றவன் எப்படி நிச்சயம் பணியாளை தேட முடியும்? சொல்லுங்கள் பார்ப்போம்?
சுவடி ஓதும் மைந்தன்:- உயிரற்றவன் எப்படி இறைவனை வணங்க முடியும்? ஐயா சொல்லுங்க?
அடியவர் 7:- அந்த ஆத்மா போய் இறைவனுடன் பேசும்
போகர் சித்தர்:- இதைத்தன் அறிய ஏதோ பின் வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லக்கூடாது.
அடியவர் 7:- மன்னித்துக்கொள்ளுங்கள்
சுவடி ஓதும் மைந்தன்:- ஏன்னா நீங்க உயிரற்றவர்கள். இறைவன் வேலையாள். இப்ப எப்படி வேலை நடக்கும்?
===========================
# இறைவன் எப்போது உங்களை கவனிக்க ஆரம்பிப்பார்?
===========================
***** அதாவது நீங்கள் ஏதாவது பின் உருப்படியாக இருந்தால், அதை அழகாக தூக்குவான். அவ்வளவுதான். *****
சுவடி ஓதும் மைந்தன்:- நீங்கள் இறந்துட்டீங்க வந்து… உங்களால் ஏதாவது பயன்பாடு இருக்குதா இந்த உலகத்திலே… இருந்தாலும் என்ன பண்ணுவாங்க அந்த பொம்மையை தூக்குவார். ஓகேங்களா? உங்களால் ஏதாவது இந்த உலகத்துக்கு பயனா இருக்கணும். அப்பதான் என்ன பண்ணுவாரு அந்த பொம்மையை…. அந்த உயிரற்றவரை தூக்கி…. இவனை இது மூலமா பண்ணலாம். இது மாதிரி பண்ணலாம்னு சொல்லிட்டு…. அப்பதான் தூக்குவாராம்.
போகர் சித்தர்:- இல்லையென்றால் அதாவது உண்ணுவது….. உறங்குவது….. ஓடுவது…. திருமணம் செய்வது…. சம்பாதிப்பது…. இறந்து விடுவது…. அவ்வளவுதான்.
அடியவர் 12:- ஒரே லைன்ல முடிச்சிட்டாரு.
போகர் சித்தர்:- இதனால்தான் சித்தர்கள் தர்மத்தை எடுத்து வந்தோம். அதை நீங்கள் செய்தால் நிச்சயம் இவ்வேலையாளுக்கு தெரியும்.
சுவடி ஓதும் மைந்தன்:- அதனாலதான் சித்தர்கள் என்ன பண்றாங்க? டேய் இதை செய்யுங்கடா. நீ செத்து போன பிணம். நீங்க தர்மம் அதை செஞ்சா என்ன பண்ணுவாரு?
அடியவர் 7:- வேலையாளுக்கு நம்மள தெரியும்.
சுவடி ஓதும் மைந்தன்:- ரைட். இவன் வந்து செத்து போனவன். ஐயா எப்படி? எனக்கே ஒரு கன்பியூஷனா இருக்குது.
அடியவர் 7:- அப்பதான் கடவுள் நம்மள பார்ப்பாரு கண்ணை திறந்து
சுவடி ஓதும் மைந்தன்:- அதனாலதான் இந்த செத்து போனதுக்கு எல்லாம் வந்து என்ன பண்றாரு வந்து இறைவனை? டேய் ஏதாவது பண்ணுங்கடா… தயவு செய்து பண்ணுங்கடான்னு சொல்லிட்டு… என்ன பண்ணுவாரு?
அப்பதான் என்ன வேலையாள் (இறைவன்) வந்து என்ன பண்ணுவாரு உன்னை எழுப்பி… உயிரற்ற பொருளை தூக்கி… இவனுக்கு என்ன பண்ணனும்? செலக்ட் பண்ணி… இவனுக்கு உயிர் கொடுத்து… வேற என்ன பண்ணலாம்? எது பண்ணலாம்? அப்பதான் பண்ணுவாராம்.
இல்லையென்றால் மனுஷன் என்ன பண்ணுவானாம்? ஏதோ வந்தோமா….. சாப்பிட்டோமா கல்யாணம் பண்ணோமா….. நல்லா தூங்கணுமா….. காசு சம்பாதிப்போமா…… நோய்கள் சம்பாதிப்போமா…….
அதனாலதான் சித்தர்கள் என்ன கான்செப்ட் எடுத்துட்டு வராரு. தர்மத்தை கடைபிடிச்சால் உன்னை?
போகர் சித்தர்:- ஆனால் யான் அதை செய்துவிட்டேன். இதை செய்துவிட்டேன். என்றெல்லாம் சொல்லக்கூடாது. நீங்கள் செய்த தர்மம் ஒழுங்காக இருக்க வேண்டும். (செய்த தர்மத்தை விளம்பர படுத்தக்கூடாது)
===========================
# தான, தர்மங்கள் - ஏன் செய்த தர்மத்தை விளம்பர படுத்தக்கூடாது? - எப்போது உங்களுக்கு கர்மா சேராது ? என்ன ரகசியங்கள்?
இது குறித்த முக்கிய வாக்கு - அன்புடன் ஈரேழு உலகத்தையும் காத்து அருளக் கூடிய நமச்சிவாயன் வாக்கு - அவசியம் பின் வரும் இவ் வாக்கினை குறைந்தபட்சம் 7 தடவையாவது படித்து தெளிவு பெற்று புண்ணிய பலம் பெற்று வாழ்க நலமுடன்.
அன்புடன் ஈரேழு உலகத்தையும் காத்து அருளக் கூடிய நமச்சிவாயர் வாக்கு :-
தர்மங்கள் தான, தர்மங்கள் செய்வதுண்டு மனிதர்கள்.
ஆனாலும் அதனை எதற்காக செய்கின்றார்கள்?
அதனை புரிந்து கொண்டு நல் முறைகளாக செய்தால் மட்டுமே தான தர்மங்களுக்கு பின் புகழ் உண்டு.
ஆனாலும் பின் இதை நினைத்து யான்தான் செய்தேன் யான்தான் செய்தேன் என்றால் நீயே செய்து கொள் உந்தனுக்கு.
தன் கடமையை பணி.
***** அவந்தன் கர்மாவும் நீ எடுத்துக்கொள்வாய். *****
***** அதனால் உதவி செய்வதை யாராலும் எதனாலும் பின் எதனை என்றும் கூட உரைக்கக் கூடாது என்பேன். *****
யான் (சிவன்) கூட பல மனிதர்களுக்கு உதவிகள் (தான, தர்மங்கள்) செய்கின்றேன்.
சொல்கின்றேனா?? கூறுங்கள் மனிதர்களே!
அதனால் உனக்கு இட்ட கட்டளை, நீ சரியாக செய்து என்னிடத்தில் வந்து விடு. இதுதான் நன்மையாக்கும் என்பேன்.
(இப்போது மீண்டும் போகர் பெருமான் வாக்கின் உள் செல்வோம்)
===========================
சுவடி ஓதும் மைந்தன்:- நான் அப்படி பண்ணிட்டேன். நான் இப்படி பண்ணிட்டேன் ( என்று சொல்லக்கூடாது). (இறைவன் சித்தர்கள் ) அவங்களுக்கு தெரியும் அவங்களுக்கு தெரியும் நீங்கள் செய்த தர்மங்கள் ஒழுங்காக இருக்க வேண்டும்.
போகர் சித்தர்:- அறிந்தும் தர்மம் செய்தவன் யார்? இல்லை.
சுவடி ஓதும் மைந்தன்:- தர்மம் செய்தவன் யார் ?
அடியவர்கள்:- ( யாரும்) இல்லை.
போகர் சித்தர்:- யான் அன்னத்தை படைத்தேன். அதை படைத்தேன் என்றெல்லாம் சொல்லக்கூடாது. இவையெல்லாம் பின் அதாவது தானத்தில் அமையும்.
சுவடி ஓதும் மைந்தன்:- இதெல்லாம் என்ன பண்றாங்க வந்து நீங்க செய்தது எல்லாம் என்ன ஆகும்?
அடியவர்கள்:- தானம்.
===========================
# உங்கள் தேவைக்காக செய்வது தானம்
===========================
போகர் சித்தர்:- தானம் என்றால் என்ன சொல்லுங்கள் பார்ப்போம்?
அடியவர் 3:- கேட்டு கொடுக்கிறது தானம்.
போகர் சித்தர்:- இதைத்தன் அப்படி இல்லை உங்கள் தேவைக்காக செய்வது தானம்.
அடியவர்கள்:- ( கைதட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன்:- உங்கள் தேவைக்காகன்னா என்ன? எனக்கு குழந்தை பிறக்கல…. எனக்கு கல்யாணம் நடக்கல…. எனக்கு வேலை கிடைக்கல…. எனக்கு அந்த பொண்டாட்டி வேணும்…. எனக்கு அந்த புருஷன் வேணும்….. எனக்கு வந்து அது நடக்கணும்…. இது நடக்கணும்னு சொல்றது வந்து…. அதெல்லாம் என்னது? தானம்
===========================
# தானம் = உயிரற்ற பொருள். (உங்கள் தேவைக்காக எதிர்பார்த்து செய்வது)
===========================
# தர்மம் = உயிருள்ள பொருள். (பிறர் தேவைக்காக எதையுமே எதிர்பார்க்காமல் , சுயநலமில்லாமல் செய்வது)
===========================
போகர் சித்தர்:-
****** தானம் என்பது உயிரற்ற பொருள். ******
****** தர்மம் என்பது உயிருள்ள பொருள். ******
அடியவர் 13 :- எதையும் எதிர்பார்க்காம செய்வது
சுவடி ஓதும் மைந்தன்:- இல்ல அப்படி இல்ல. இவர் கல்யாணம் நடக்கணும். இவர் குழந்தைக்கு நல்லா ஆகணும். இவர் வந்து என்ன பண்ணுவாரு? இதுக்கு சாப்பாடு போடுறது. ஏதோ ஒரு காரணத்துக்கு… ரீசனுக்காக… எனக்கு கர்மா தீரணும். என் பாவத்தை தீரணும். இப்படி எல்லாம் பண்ணி பண்றது என்னது?
அடியவர் 13 :- தானம்
சுவடி ஓதும் மைந்தன்:- இந்த தானம் என்பது உயிரற்ற உயிரற்ற பொருள். நீங்கள் எதையும் எதிர்பார்க்காம…. சரி நம்ம கொடுக்கலாம்…. இறைவன் என்ன பண்ணுவார்? அப்படி கொடுக்கிறது?
அடியவர்கள்:- தர்மம்
சுவடி ஓதும் மைந்தன்:- தர்மம். ஓகேங்களா. எதிர்பார்க்காம பண்றது. தர்மம் தான் இங்கு உயிர் உள்ளது. தானம் என்பது உயிரற்ற பொருள்.
போகர் சித்தர்:- இப்போது நீங்கள் சிந்தித்துக் கொள்ளுங்கள். உலகத்தில் உள்ள அனைவருமே தானம் தான் செய்து கொண்டிருக்கின்றார்கள் இன்றளவு.
அடியவர்கள்:- ( பலத்த கைதட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன்:- தர்மம் யாரும்?
அடியவர்கள்:- செய்யல.
போகர் சித்தர்:- இதை புரிந்து கொண்டால் நன்று. புரியாதவர்கள் ஒன்றும்….
சுவடி ஓதும் மைந்தன்:- இதை புரிஞ்சுக்கிறதுக்கு ஆள் இல்லை. அப்ப என்ன பண்ணிருக்கோம் நம்ம? எல்லாரும் நம்ம பையனுக்கு வேலை கிடைக்கணும். உடம்பு சரியாகணும். அப்புறம் கல்யாணம் நடக்கணும். குழந்தை… இதுக்கெல்லாம் தானம் பண்றது. பிரார்த்தனை பண்றது. இதெல்லாம் செல்லுபடி ஆகாதமான்றாரு. வேஸ்ட்டுமா. வேஸ்ட் உயிரற்ற பொருள் அது. எதிர்பார்த்து பண்றது உயிரற்ற பொருள். எனக்கு நல்லது நடந்தா… அது பண்ணா… நல்லது நடக்கும். அதெல்லாம் உயிரற்ற பொருள்.
ஏதோ நம்ம கையில இருக்குதா… டேய் பண்ணிட்டு போடா…. அவ்வளவுதான்டா. ஓகேவா. இந்தா பண்ணிட்டு போடா. டேய் எடுத்துக்கோடா ₹10, அதை அவங்க என்ன பண்றாரோ பண்ணலையோ நமக்கு தேவையில்லை. நம்ம வேலை செய்வோம் .நம்ப செய்வோம்.
===========================
# சூரிய தேவன் - அவர் செய்வது தான் தர்மம்
===========================
போகர் சித்தர்:- சூரியன் எவ்வளவு பெரிய ஆள். தன் வேலை சரியாக செய்து கொண்டிருக்கின்றான். அதுதான் தர்மம்.
அடியவர் 7:- ஐயா ஆனா மக்கள் வந்து தங்களுக்கு ஏதாவது கிடைக்குதுன்னா அதான்யா ஏதாவது செய்யறாங்க.
போகர் சித்தர்:- கிடைக்குமப்பா கிடைக்கும். துன்பங்கள் கிடைக்கும்.
அடியவர்கள்:- (பலத்த சிரிப்புகள்)
சுவடி ஓதும் மைந்தன்:- நல்லா கிடைக்கும். சூப்பரா சொல்றாரு பாரு. எல்லாம் கிடைக்கும். என்ன கிடைக்கும்? துன்பங்கள் கிடைக்கும். இறைவன் அதுதான் கொடுப்பாரு உங்களுக்கு வந்து. என்ன கொடுப்பாரு? நீ என்ன செய்றியோ, எல்லாத்தையும் கொடுப்பாருன்றாரு வந்து. அதனால கிடைக்கும்பா. அவர் யாருக்கும் வந்து இல்லன்னு சொல்ல மாட்டாருப்பா சொல்றாரு பாரு. இல்லன்னு சொல்ல மாட்டாருப்பா. உங்களுக்கு என்ன பண்ணுவாரு? இந்தா எடுத்துக்கோப்பா.
அடியவர் 2:- நீ கேக்குறத கொடுத்து அது மூலம் உணர வைப்பார்
சுவடி ஓதும் மைந்தன்:- அதுதான். அதனால கொடுப்பாரு யாருக்கும் கொடுக்க மாட்டார் இறைவன் சொல்ல மாட்டார்.
போகர் சித்தர்:- அப்பொழுது கூறுங்கள் இதைத்தன் அறிய. இதை தெரிந்து கொண்டால்தான் பின் சித்தர்கள் வாக்கு வந்து செப்புவார்கள்.
இதையெல்லாம் தெரிந்து கொண்டால்தான் உங்கள் விதியின் பயனை நாங்கள் சொல்ல முடியும்.
பின் அதாவது எழுதியவன் இறைவன் அல்லவா?
அதைத்தன் எவ்வாறு இதைத்தன் அறிய உங்களுக்கு இதைத்தன் அறிய.
அதாவது இதைப்பற்றி எல்லாம் தெரிந்து கொண்டால்தான்…
அதாவது அன்றைய காலகட்டத்தில் எல்லாம் பின் அதாவது ஒரு வேலைக்கோ….. திருமணத்திற்கோ….. இன்னும் எதையோ….. பின் நிச்சயம் பின் அதாவது செல்ல வேண்டுமென்றால்….. முதலில் கடும் முயற்சிகள் எடுக்க வேண்டும்.
===========================
# எப்போது கண்களில் இருக்கும் துகள் அதி வேகமாக இயங்கும்?
===========================
# அதி ரகசிய, சித்தர்கள் உருவாக்கிய, மகிமை புகழ் திருத்தலங்கள்
===========================
என்னென்ன அங்கு வைத்திருக்கின்றார்கள்?
என்னெல்லாம்? எதற்கு? பின் அதாவது புவியின் வேகம் என்ன?
அதாவது எப்படி செயல்படுகின்றது? என்பதெல்லாம்..
அதை தெரிந்து கொண்டு அங்கே காலடி வைத்தால்….. நிச்சயம் அதாவது எளிதாக பின் கண்களில் இருக்கும் துகளும் பின் அதி வேகமாக இயங்கும்.
இவ்வாறு இயங்குகின்ற பொழுது உடம்பில் நிச்சயம் அனைத்தும் பின் அதாவது சரியாகும்.
எப்பொழுதெல்லாம் அதாவது கண் நுனியில் அதாவது மையப்பகுதியில் இதைத்தன் அறிய துகள் சுற்றிக்கொண்டே…
பின் அதாவது (அவ் துகளின் வேகம்) குறைந்து கொண்டு வருகின்றதோ…
***** அப்பொழுதெல்லாம் வயதாகும். *****
***** நோய்கள் வரும். *****
***** பணப்பிரச்சனைகள் ஏற்படும். *****
***** துன்பங்கள் அதிகமாகும். *****
இதனால் அனைவருக்கும் வேகம் குறைந்து தான் இருக்கின்றது.
தெரிந்து கொள்ளுங்கள்
இவை சுற்ற பின் ஒரு நாள், இரு நாள் போதுமா என்ன?
சுவடி ஓதும் மைந்தன்:- இதை திருப்பி நாங்க சுத்த வைக்கிறதுக்கு திருப்பியும் அந்த புவியின் வேகத்துக்கு இணையாக வந்து சுத்த வைக்கிறதுக்கு….. ஒரு நாள்…. ரெண்டு நாள் போதுமா? போதாது.
போகர் சித்தர்:- இதனால் இதன் இயக்கங்கள் பற்றி அகத்தியன் சொல்வான்.
===========================
# இறைவனை வர வழைக்கும் அதி ரகசியங்கள்
===========================
போகர் சித்தர்:- இதனால் இறைவனை அதாவது நிச்சயம் கூப்பிடுகின்றீர்கள். வருவானா என்ன?
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாரும் இறைவனை கூப்பிடுகின்றார்கள் பாடல் பாடுகின்றார்கள். வருவானா என்ன?
அடியவர்கள்:- வருவார்
அடியவர்கள்:- நம்பிக்கையாக கூப்பிட்டால் வருவார்
சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா எனக்கு தெரியாது நான் படிக்கிறேன்.
போகர் சித்தர்:- இதைத்தன் அறிய உண்மை நிலையை தெரிந்து கொண்டு, நீங்கள் எதைச் சொன்னாலும் வருவான்.
இல்லையென்றால் நிச்சயம் அதாவது ஆடுகள் கத்துகின்றதே அதுபோல்தான் கத்திக்கொள்ள வேண்டும்.
===========================
# மனம் என்ற எழுது பலகையில் சித்தர்கள் எப்போது எழுதுவார்கள்?
===========================
போகர் சித்தர்:- அப்பனே அம்மையே ஒன்றைச் சொல்கின்றேன். சித்தன் வழியில் வருவதற்கு மனம் பின் அதாவது பலமாக இருக்க வேண்டும். அனைத்தும் தாங்கிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் முடியாது.
சுவடி ஓதும் மைந்தன்:- சித்தன் சித்தன் வழியில வருதுக்கு என்ன பண்ணனும்? மனம் பலமா இருக்கணும். எதையும் தாங்கி எதையும் கல்லாக்கிக்கணும். இரும்பு மாதிரி இருக்கணும். ஓகேங்களா? மனம் இரும்பு மாதிரி இருக்கணும் அப்படி வந்தா மட்டும்தான்?
போகர் சித்தர்:- (மனம்) அதில் எழுத்துக்கள் யாங்கள் எழுதுவோம்.
சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப எதையும் தாங்கும் இதயம் இருந்தால் மட்டும்தான் இறைவன் என்ன பண்ணுவாருங்க ஐயா? அதில் எழுத்து எழுதுவார். மாத்தி எழுதுவார் இவன் பரவாயில்லடா. எல்லாம் பக்குவம் அடைஞ்சிருக்கிறான் சொல்லிட்டு எல்லாமே தெரிஞ்சுக்கிறான்னு சொல்லிட்டு வந்து… இறைவன் வந்து எழுத்து எழுதுவார். இல்லையென்றால்…. அது அப்படியே என்ன ஆகும் வந்து? எழுதினா என்ன ஆகும்? அது கிழிஞ்சிரும். ஓட்டை விழுந்து… கிழிஞ்சிரும் வந்து….
===========================
# அறிவில் தான் இறைவன் ஒளிந்து கொண்டிருக்கின்றான்.
===========================
போகர் சித்தர்:- இதைதன் அறிய, இவ்வாறாக அதனால் இறைவனைப் பற்றி தெரிந்து கொண்டாலே ஆற்றல் பன்மடங்காகும்.
அறிவு வேண்டும்.
****** அறிவில்தான் இறைவன் ஒளிந்து கொண்டிருக்கின்றான். ******
அதனால் அவ் அறிவை வளர்க்கவே யான் இப்பொழுது வாக்கில் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்.
****** பின் ஆற்றலும் வரும். ******
****** பின் எவை என்று கூற அருளும் வரும். ******
****** பின்பு நீங்கள் பின் எளிதாக பின் உங்கள் வாழ்க்கை பார்த்துக் கொள்ளலாம். ******
சுவடி ஓதும் மைந்தன்:- அறிவு வந்துருச்சுன்னா என்ன ஆகும் ஐயா?
அடியவர் 7:- ஆற்றல் வரும்
சுவடி ஓதும் மைந்தன்:- ஆற்றலும் வரும். அருளும் வரும். அந்த அருள் வச்சுக்கிட்டு நீங்க வந்து என்ன பண்ணிக்கலாம்? உங்களை நீங்களே உங்க வாழ்க்கையை பார்த்துக்கலாம். ஓகேங்களா? அப்படி இல்லையென்றால்.
===========================
# எவ்வாறு கர்மத்தை நீக்க வேண்டும்?
===========================
போகர் சித்தர்:- இதைத்தன் அறிய எவ்வாறு? இதனால்தான் பல உண்மைகள் எடுத்துரைக்கின்ற பொழுது…. அதாவது நிச்சயம் தன்னில் கூட …அறிந்தும் இவை யாவும் அதாவது படிப்படியாகவே.
இதனால் முதலில் பின் உங்கள் பின் கர்மத்தை நீக்க வேண்டும். எவ்வாறு?
தாயே! எதை என்று அறிய……
****** உண்மையை தெரிந்து கொண்டால் (கர்மா) நீங்கும். இல்லையென்றால் அதிகமாகும். ******
இதனால் இறைவனிடத்தில் சென்றால் ஒன்றும் ஆகவில்லையே ஒன்றும் ஆகவில்லை என்று புலம்புவது.
ஒன்றை சொல்கின்றேன்.
அதாவது பின் படிப்பதற்கு சில காலம். அதாவது நிச்சயம் எவ்வாறு திருமணங்கள் சில காலம். குழந்தைகள் சில காலம். இப்படியே வயதாகிவிட்டது.
இறைவனைப் பற்றி எப்பொழுது தெரிந்து கொள்ள போகின்றீர்கள்?
சுவடி ஓதும் மைந்தன்:- ( படிப்பு, வேலை , பணம் , மனைவி , கணவன் , பிள்ளைகள், தன வளர்ச்சி - இதையே நீங்க எண்ணிக்கொண்டிருக்கும் பொழுது இறைவன் பற்றிய சிந்தனைகள் எப்பொழுது வரும்? )
அடியவர் 4:- துன்பத்தை கொடுத்தால் மட்டும் தான் வரும்.
போகர் சித்தர்:- இதனால் நிச்சயம் எவ்வாறு இறைவன் மிக மிக பாசம் உள்ளவன். ஒரு ஒரு எவை என்று கூற உயிரற்ற பொருள் மீதும்.
சுவடி ஓதும் மைந்தன்:- இறைவன் என்பவர் பாசம் உள்ளவர் உயிரற்ற பொருள் மீது நம்மள சொல்றாரு… எல்லாரும்..
அடியவர் 7:- உயிரற்ற பொருள் நம் மீது
போகர் சித்தர்:- இதைத்தன் அறிய எவ்வாறு இதைத்தன் அறிய. அதாவது எவ்வாறு நீங்கள் புரிந்து வைத்திருக்கிறீர்கள்?
அடியவர் 3:- ஐயா நமக்கு வேணுங்கிற உணவு இதெல்லாம் இறைவன் தானாதான் கொடுக்கிறார்… நம்ம வந்து…
போகர் சித்தர்:- ஒன்றை சொல்கின்றேன் தாயே உயிரற்ற பொருளும் நிச்சயம் அதிக நாள் வைத்திருந்தால் நிச்சயம் கெட்டுப்போகும் தாயே.
அப்பொழுது ஒவ்வொன்றாக எதைத்தன் எவ்வாறு வாழ்வான்? எவ்வாறு வாழ்வான்? என்றெல்லாம். எதைத்தன் அதாவது நிச்சயம்.
அடியவர் 7:- உயிரற்ற பொருளை ரொம்ப நாள் வச்சுக்க முடியாது. டிஸ்போஸ் பண்ணிடுவோம்.
போகர் சித்தர்:- இதனால்தான் தானங்கள், தர்மங்கள் செய்தால் தானாகவே எதை என்று புரிய அது உயிரற்ற பொருளை அதாவது இறைவனுக்கு தெரியும்.
சுவடி ஓதும் மைந்தன்:- அந்த உயிரற்ற பொருள்…. நீங்க தானம் தர்மங்கள் தர்மங்கள் செய்து கொண்டே இருந்தால்…. என்ன பண்ணும் வந்து?
அடியவர் 7:- அது ஆக்டிவேட் பண்ணுவாரு.
சுவடி ஓதும் மைந்தன்:- அது ஆக்டிவேஷன் ஆயிடும் இறைவன் என்ன பண்ணுவாரு ஓகே இந்த டேய் இந்த செத்துப்போன பிணம் ஏதோ பண்ணுதுடா… தூக்குடான்னு சொல்லிட்டு என்ன பண்ணுவாரு? ஆக்டிவேட் பண்ணிடுவாருங்க ஐயா வந்து. இல்லையென்றால் என்ன பண்ணும்? உயிர் இருந்தும் உயிரற்ற பொருளாக வாழும். எவ்வளவு கஷ்டம் தெரியுமா அதெல்லாம் ஐயா? என்னங்க இதெல்லாம் வந்து அப்ப எவ்வளவு கஷ்டம் பாருங்க.
===========================
# ஏன் இப்போது வாக்குகள் அதி பலமாக சித்தர்கள் உரைகின்றார்கள்?
===========================
போகர் சித்தர்:- இதனால் பின் ஏன் எதற்காக சித்தர்கள் பின் இவ்வாறெல்லாம் மனிதனுக்கு உரைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், கடைசி ஒரு சந்தர்ப்பத்தை தான்.
===========================
# அகத்திய மாமுனிவர் - ஈரேழு உலகங்களிலேயே மிக பெரிய விஞ்ஞானி - அவர்களை எப்படி அணுக வேண்டும்?
===========================
போகர் சித்தர்:- தாயே இவையெல்லாம் சொல்ல முடியாமல் எதை என்று அறிய நிச்சயம் அதாவது இவை தன் புரிய. இதனால்தான் ஒரு விஞ்ஞானி அடைகின்ற பொழுது இவையெல்லாம் தெரிந்து கொண்டு அடைய வேண்டும் நீங்கள். அப்பொழுதுதான் அனைத்தும் சரி செய்வானே தவிர. இல்லையென்றால் பின் உங்களுக்கு அதாவது இவ்வளவுதான் அறிவு அவ் அறிவிற்கு ஏற்பவே சொல்லிவிட்டு சென்றுவிடுவான்.
சுவடி ஓதும் மைந்தன்:- அகத்திய பெருமானிடம் போறதுக்கு முன்னாடி நீ யார்? எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் போனா மட்டும்தான்…. அறிவு பலத்தை படுத்திட்டு போனா மட்டும்தான்… என்ன பண்ணுவாரு? நமக்கு தேவையானது உங்களுக்கு பலமானது சொல்வார். இல்லையென்றால் இவன் அறிவில்லாதவன். அது தகுந்த மாதிரி சொல்லி அனுப்பிச்சிடலாம். அப்பா நீ கோவிலுக்கு போப்பா. நீங்கள் எவ்வளவு அறிவு வச்சிருக்கீங்களோ அதுக்கு தகுந்த மாதிரிதான் வாக்கு வரும் ஐயா.
அடியவர் 9:- போகர் அய்யா நம்மல ட்ரெயின் பண்றாருயா.
சுவடி ஓதும் மைந்தன்:- போகர் பெருமான் அவர் குருகிட்ட போறதுக்கு நம்மள எப்படி எல்லாம் ட்ரெயின் பண்றாரு பாருங்க. அப்படித்தானே அகத்தியர் நல்லது செய்வாருன்னு ஆமா நம்மள ரெடி பண்றாரு வந்து ஓகேங்களா
போகர் சித்தர்:- இதைத்தன் அறிய அதாவது ஒரு பெரிய எவை என்றறிய நிர்வாகத்தை பின் நிச்சயம் பின் அறிந்தும் அதாவது எவ்வாறு பின் அதைத்தன் வழி நடத்துவீர்கள்? திறமை இருந்தால் மட்டுமே அல்லவா?
எங்களால் அனைத்தும் தீர்க்க முடியும். ஏன் உங்கள் பிரச்சனைகள் தீர்க்க முடியாதா என்ன? ஆனால் நீங்கள் அதாவது அறிவில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். அதனால்தான்.
(உங்கள் பிரச்சினைகளை யாங்கள்) நிச்சயம் தீர்த்து வைத்தாலும், நிச்சயம் மீண்டும் பின் அறிவில்லாமல் நீங்களே செய்து கொள்வீர்கள்.
இதனால்தான் பின் அதாவது அகத்தியனை நெருங்குகின்ற பொழுது அறிவுள்ளவனாக இரு. அவ் அறிவு பின் பலம். அவ் அறிவு பின் வந்துவிட்டால், நிச்சயம் எதுவும் பேச முடியாது.
சுவடி ஓதும் மைந்தன்:- அகத்தியர் அவர் பலம் சரியான அறிவு அவருக்கு வந்து. அந்த அறிவுல கொஞ்சாவது நீங்க இருக்கணும். துளியாவது இருக்கணும். அப்பதான் அவர் என்ன பண்ணுவாரு? வாக்குகள் வந்து சொல்வார். புரியுதுங்களா? சொல்றதும் நமக்கும் புரியும். இல்லைன்னா அந்த (வாக்கு) ஆற்றல் அவ்வளவு அறிவு வரும் பொழுது, அந்த அறிவால நீங்க தாங்க முடியாதுன்றாரு. நீங்க எல்லாம் வந்து தாங்கவும் முடியாது அது ஏத்துக்கவும் முடியாது. நீங்க செய்யப்போவதும் இல்லைன்றாரு. அப்படித்தான் கணக்கு. ஐயா புரியுதுங்களா?
போகர் சித்தர்:- எதைத்தன் அறிய பேசுகின்றாயே… பக்கத்தில் உள்ளவனே. அதனால் பின் கயிறை அதாவது விளக்கு பின் எரிந்து கொண்டிருக்கிறது. அதன் இரு கைகளையும் பிடித்து யாராவது பார்ப்போம் நிச்சயம் பிடிக்கின்றார்களா என்று பார்.
சுவடி ஓதும் மைந்தன்:- உங்கள தான் சொல்றாரு. பக்கத்துல உள்ளவனே இவ்வளவு பேசுறியாப்பா… ரெண்டு அந்த (கரண்ட்) வயர் இருக்குது இல்ல அதை புடிங்க. ரெண்டு கை வச்சு.. வரேன்னு சொல்லிட்டு யாராவது என்ன சொல்றீங்க
அடியவர்கள்:- (சிரிப்பு)
சுவடி ஓதும் மைந்தன்:- புடிங்க ரெண்டு (கரண்ட்) வயர் புடிங்க அப்படித்தான் சொல்றாரு. அந்த ரெண்டு (கரண்ட்) வயர் புடிங்க . இவன் கையில குடுப்பா. யாராவது புடிச்சிக்கிறானா பார்ப்போம்னு.
அடியவர்கள்:- (சிரிப்பு)
போகர் சித்தர்:- ஆனால் பின் அறிவுள்ளவன் எப்படி அதை பயன்படுத்த வேண்டும் என்று தெரியும்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஆனால் அது அறிவுள்ளவன் என்ன பண்ணுவான்? அங்க ரெண்டு (கரண்ட்) வயர் நான் பிடிக்கிறேன். நீ அங்க சுவிட்ச் ஆஃப் பண்ணு. மெயினா ஆஃப் பண்ணு. புரியுதுங்களா? மெயினா ஆஃப் பண்ணிட்டு கொடு. நான் பிடிக்கிறேன் என்று சொல்லுவான்.
போகர் சித்தர்:- இவ் அறிவைத்தான் நிச்சயம் யாங்கள் வளர்க்க பார்க்கின்றோம். அதாவது செத்தும் பிணத்தில்.
===========================
# மனிதர்களை படம்பிடிக்கும் அதி பரம ரகசிய “சித்தன் விளையாட்டு”
===========================
போகர் சித்தர்:- அறிவை புரிந்து கொண்டால் உங்கள், அதாவது அனைத்தும் யாங்களே தீர்த்து வைப்போம். நீங்கள் எங்கும் செல்லத் தேவையில்லை.
உங்கள் பிரச்சனைகள் வந்து உங்கள் பிரச்சனைகள் அதாவது நீங்கள் சொல்லித்தான் பின் அதாவது தீர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை.
உங்கள் பிரச்சனைகள் அதாவது மனிதனுக்கு வேண்டுமானால் நீங்கள் சொல்லலாம். எங்களுக்கு சொல்ல தேவையில்லை.
இதைத்தன் அறிய அதாவது இப்பொழுதெல்லாம் கண்டுபிடித்து விட்டார்கள். அதாவது இப்படி எது என்று பின் அதாவது சமதானம் அறிந்தும் இவை என்ன? இதைத்தன் அறிய எவ்வாறு பின் அப்படியே படம் பிடிப்பது.
சுவடி ஓதும் மைந்தன்:- ஸ்கேனர் ங்க ஐயா. ஸ்கேனர் அது பேரு வந்து என்ன பண்ணுது? சமாதானம் ஸ்கேனர்.
போகர் சித்தர்:- அதேபோலத்தான் சித்தன். ஆனால் பின் எங்களை உங்களுக்கு தெரியாது பின் வந்தால். ஆனால் உங்களை எங்களுக்கு தெரியும் அப்படியே படம் பிடித்து விடுவோம். போதுமா? இதுதான் சித்தன் விளையாட்டு.
எப்படி ஒருவன் மனது இருக்கின்றது?
எப்படி இவன் பிற்பகுதியில் வாழ்வானா?
வாழ மாட்டானா?
ஏமாற்றுவானா?
ஏதாவது பின் அதாவது நம்பிக்கை துரோகம் செய்கின்றானா?
ஏதாவது ஒரு காரியத்திற்காக வந்திருக்கின்றானா? என்று எங்களுக்கு தெரியும் இறைவனும் அதே அப்படித்தான்.
சுவடி ஓதும் மைந்தன்:- அதனால வந்து சுயநலமாக யோசிக்க கூடாதுன்றாரு. வேற ஒன்னும் இல்ல. ஸ்கேன் பண்ணிட்டாருன்னா என்ன பண்ணுவாரு? டேய் இவன் இவனுக்காக தான் வந்துக்கிறான். போ நீ அனுப்பு ஸ்கேன் பண்ணிடுவாங்க நீங்க கோவில் போறது இல்ல இப்ப தேடி வந்திருக்கீங்களா ஜீவ நாடி பத்தி. எல்லாத்தையும் ஸ்கேன் பண்ணிட்டு இருப்பாரு வந்து. ஸ்கேன் ஆயிடுச்சு. அதனால உங்களுக்கு ஒன்னும் தெரியல. அதனால இதை சொல்லி இருக்காரு வந்து ஐயா புரியுதுங்களா அப்ப இதை சொல்லி இருக்காங்க. இதை வந்து தெரிஞ்சுக்கணும்னாவே உங்களுடைய துன்பங்கள் நீங்கிடும்.
===========================
# 108 திவ்ய தேச ரகசியங்கள். பொருள் வேண்டுமா? அருள் வேண்டுமா?
===========================
போகர் சித்தர்:- இதைத்தன் அறியாது எங்கு சென்றாலும் நீங்குமா என்றால் நீங்காது.
இது தன் அருள் அதாவது முதலில் பொருள் வேண்டுமா? அருள் வேண்டுமா சொல்லுங்கள்?
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாரும் சொல்லுங்க. என்ன வேணும்?
அடியவர் 7:- அவனுக்கு பொருளும் அருளும் வேணுமாம்.
அடியவர்கள்:- ( பொருள் , அருள் வேண்டும் ….)
போகர் சித்தர்:- இதைத்தன் அறிய அருளை பெற வேண்டும் என்றால் அனைத்தும் அதாவது துன்பங்கள் 108 அவையெல்லாம் தாண்ட வேண்டும் அப்பொழுதுதான் அருள்.
பொருள் வேண்டுமென்றால் நிச்சயம் எதையும் தாண்ட தேவையில்லை
ஆனால் பொருள் கொடுத்து அனைத்தும்.
சுவடி ஓதும் மைந்தன்:- பொருள் வந்து கொடுத்து எல்லாத்தையும் அழகா முடிச்சிடுவாரு. எது வேணும்னு கேக்குறாரு இப்ப. அருள் வேண்டுமென்றால் அதான் அருள் வேண்டுமென்றால் 108 துன்பத்தை?
போகர் சித்தர்:- பின் அதாவது நாராயணன் என்ன எதை என்று அறிய புரிய அதாவது நிச்சயம் காப்பாற்றுபவன் என்றெல்லாம். அதாவது விஷ்ணு காப்பாற்றுபவன். பின் அதாவது பின் இதை எப்படி சொல்லி இருக்கின்றார்கள் பாருங்கள்? இவையெல்லாம் இத்துன்பத்தை எல்லாம் கடந்தால்தான் நாராயணனும். அதனால்தான் 108 திவ்ய தேசம் என்று வந்தது.
அடியவர்கள்:- ( பலத்த கை தட்டல்கள் )
===========================
# அகத்திய மாமுனிவர் வைத்துள்ள “கமண்டலம்” ரகசியங்கள்.
===========================
போகர் சித்தர்:- எத்தனை லோகங்கள் இருக்கின்றதெல்லாம் அகத்தியனுக்கு தெரியும். பின் ஏன் எதற்காக அதாவது கமண்டலத்தை அகத்தியன் வைத்துக்கொண்டு சென்று கொண்டிருக்கின்றானே அங்கங்க அவனுக்கு வேலை இல்லையா?
இதைத்தன் இதேபோல் பல லோகங்கள் இருக்கின்றது.
ஒவ்வொருவரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள் ஒன்றும் தெரியாமல்.
தெளித்து விடுவதற்காகத்தான் அதை எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றான் அகத்தியன்.
![]() |
| அன்பு கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் வைத்துள்ள யோக தண்டம், கமண்டலம் - அதனை இவ் படத்தில் அவசியம் காண்க |
போகர் சித்தர்:- அதை கூட தெரியாமல் மனிதன் இன்னும் கூட எவை என்று அகத்தியன் அகத்தியன் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றான்.
எவ்வளவு பெரிய வினை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றான்.
===========================
# அகத்திய மாமுனிவர் வைத்துள்ள “யோக தண்டம்” ரகசியங்கள்.
===========================
போகர் சித்தர்:- எதை ஏது என்று புரிய எவ்வாறு என்பது எல்லாம்.
இதனால் கட்டையும் (“யோக தண்டம்”) ஏன்? . சொல்லுங்கள் பார்ப்போம்.
அடையவர்கள்:- ( பல பதில்கள் )
போகர் சித்தர்:- இதைத்தான் அறிய சொல்கின்றேன் இப்பொழுது. பல இதேபோல் பல அண்டங்கள் இருக்கின்றது. அது சரியாக இயங்கவில்லை என்றால் இதை இட்டு தட்டுவான். அவ்வளவுதான்.
===========================
# அகத்திய மாமுனிவர் அமைத்த ரகசிய விஞ்ஞான கூடங்கள்
===========================
போகர் சித்தர்:- இதைத்தன் அறிய இன்னும் அகத்தியன் எதை என்று கூட விஞ்ஞானம் (விஞ்ஞான கூடங்கள்) எவை என்று அறிய இன்னும் பல மலைகளில் கூட ஒளிந்திருக்கின்றது.
===========================
# அன்பு அகத்திய மாமுனிவர் அமைத்த விஞ்ஞான ஆராய்ச்சி கூடங்கள் ரகசியங்கள் அடங்கிய வாக்குகள். அவசியம் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இவ் வாக்குகளை அறிய பின்வரும் லிங்க் அதனை நீங்கள் கிளிக் செய்து , அதன் உள்ளே சென்று பார்க்கவும்.
(1) அகத்திய மாமுனிவர் - உலகம் எங்கும் ஆசிரமங்கள் ஆராய்ச்சி கூடங்கள் அமைத்து மனிதர்கள் வாழ்வதற்கு வழி காட்டியவர் .
சித்தர்கள் ஆட்சி - 758 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 9/10/2026 அன்று அன்புடன் ரோம மகரிஷி உரைத்த திருக்குற்றாலம் திரிகூடமலை வாக்கு.
(2) அன்பு குருநாதர், திருகோணமலையில் அமைத்த பல ஆராய்ச்சி கூடங்கள்.
சித்தர்கள் ஆட்சி - 562 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 3
===========================
சுவடி ஓதும் மைந்தன்:- இன்னும் கூட அகத்தியர் வந்து.. கூடங்கள் பல கூடங்கள் கட்டிருக்காரு. விஞ்ஞான கூடங்கள். அதெல்லாம் இன்னும் மலையில் எல்லாம் ஒளிந்திருக்கின்றது. அதன் மூலம் பரவிக் கொண்டிருக்கின்றது. அதாவது புகைப்போல் அதன் மூலம் பல விஷயங்கள் புகை எப்படி இருக்குது? புகை? புகை பரவுது இல்லம்மா. இது மாதிரி பரவுது
போகர் சித்தர்:- பின் ஏன் எதற்காக எவை தன் அறிய. இதே போலே நினைத்துக் கொள்ளுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- இதே போலே.. ஊதுபத்தி எப்படி புகை வருது? அதே மாதிரிதான். அந்த கண்டுபிடிச்சது வந்து உலகத்தை…. நல்ல நல்ல இது பெறணும்னு சொல்லிட்டு…. உலகத்துக்கெல்லாம் புகைப் போல் பறக்குது என்று சொல்றாரு வந்து.
போகர் சித்தர்:- அதனால தான் இன்னும் அகத்தியன் பெயர் எதை என்று அறிய. அதனால் அறிவுள்ளவர்கள் மட்டுமே அகத்தியனை தேடுவார்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஏதோ கொஞ்சம் அறிவு இருந்தா மட்டும்தான் அகத்தியனை தேடுவாங்க. இல்லைன்னா அகத்தியன் யாருன்னே தெரியாதுன்றாரு.
அடியவர் 7 :- சொன்னா கூட புரியாது
அடியவர் 10 :- நமக்கு கொஞ்சோண்டு அறிவு இருக்குதுன்னு ஒத்துக்கணும் ஐயா.
அடியவர்கள்:- (இவ் அடியவரின் பதிலை கேட்டு சிரிப்புடன் , கை தட்டல்கள்)
சுவடி ஓதும் மைந்தன்:- அவ்வளவுதான். வேற ஒன்னும் இல்ல.
அடியவர் 7 :- ஏதோ சர்டிபிகேட் கொடுத்துட்டு…. ஆமா போகர் நமக்கு சர்டிபிகேட் கொடுத்துட்டேன் அறிவு இருக்குன்னு சொல்லிட்டு…108ல கொஞ்சம் புண்ணியம் பண்ணி இருக்கிறோம்
போகர் சித்தர்:- இதனால் இன்றைய வாக்கு இதுபோலத்தான் யான் கொடுப்பேன். ஏனென்றால் ஒரு ஆற்றலை பெரும் ஆற்றல் நெருங்கப் போகின்றோம். அதனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன்:- இவர் சொல்றாரு… அகத்தியர் ஒன்னும் சொல்றது இல்ல… அதனால ஒரு பெரிய ஆற்றலை நெருங்குறோம்னா என்ன பண்ணனும்? உஷாரா இருக்கணும்ன்றாரு வந்து.
அடியவர் 3 :- சொன்ன விஷயங்களை எல்லாம் கவனத்துல வச்சுக்கணும்
===========================
# தர்மம் - எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும். யாருக்கும் வெளியில் சொல்ல கூடாது.
===========================
போகர் சித்தர்:- இதைத்தன் அறிய இப்பொழுது சொல்லுங்கள் முதலில் என்ன செய்ய வேண்டும் என்று?
அடியவர் 3 :- தான, தர்மங்கள் செய்ய வேண்டும்.
போகர் சித்தர்:- எதை என்று அறிய எவை என்று கூட தர்மம் செய்ய வேண்டும் தாயே.
அதாவது தர்மம் செய்வதும் ஒழுங்காக சென்றடைய வேண்டும்.
ஏனோ பின் கொடுத்தோம் எதை புரிய என்றெல்லாம் நிச்சயம்…
அதாவது இதை கொடுத்தால் தர்மம்.
அதாவது எதை என்று அறிய என்றும் நினைக்கக்கூடாது.
இதைத்தன் அறிய எவ்வாறு என்பதை எல்லாம் நினைவில் கொள்ளுங்கள்.
இதனால் தர்மத்தை பற்றி பின் இதெல்லாம் தர்மத்தில் சேரும் கொடுப்பது என்றாலும் அது கூட பின் அங்கு கெட்டுவிடும்.
சுவடி ஓதும் மைந்தன்:- ( ஆச்சரியத்துடன்) எப்படித்தான் மனுஷன்…..
அடியவர் 7:- (நான் கொடுத்தேன் என்று) நினைக்காம இருக்க முடியாது மனுஷன்…
சுவடி ஓதும் மைந்தன்:- நான் தர்மம் தான் செஞ்சேன்னு சொல்லிட்டு அப்படி நினைக்கக்கூடாது. இந்தா வாழுப்பா. இந்தாப்பா பிஸ்கட் எடுத்துக்கோப்பா. இந்தாப்பா எடுத்துட்டு போயிட்டே இருப்பா. அவ்வளவுதான். மறந்துடனும். நான் பிஸ்கட் கொடுத்தேன் அவருக்கு. நான் இவனுக்கு கொடுத்தேன். தூக்கி போட்டேன். மனசுல வச்சுக்க கூடாதுன்றாரு வந்து.
அடியவர் 7:- அதை கொடுக்கும் போது எதையும் எதிர்பார்த்து கொடுக்கக்கூடாது.
போகர் சித்தர்:- எதை என்று அறிய அவன் வாங்கிக்கொண்டான். இவன் தூக்கிவிட்டான். அதாவது தூக்கி எறிந்து விட்டான். அதனால் இறைவன் கொடுத்தாலும் சில பேர் இது வேண்டாம் என்றுதான் தூக்கி எறிந்து விடுகிறார்கள். இதிலிருந்து தெரிகின்றதா?
இதைத்தன் அறிய அதாவது நிச்சயம் ஒரு பெரும் ஆற்றலை அதாவது நிச்சயம் மின்மாற்றியை (டிரான்ஸ்பார்மர் / Transformer) நீங்கள் நெருங்க வேண்டும். என்ன செய்வீர்கள்?
அடியவர்கள்:- ஜாக்கிரதையாக இருக்கனும் , பாதுகாப்பா இருக்கனும்
போகர் சித்தர்:- இதனால் உங்கள் விதியை நீங்கள் தெரிந்து கொள்ளப் போகின்றீர்கள். அதனால் எப்படி இருக்க வேண்டும்?
போகர் சித்தர்:- ஓடுகின்றார்….. ஓடுகின்றார்….. ஆடுகள் போல் ஓடுகின்றார். எங்கு ஓடுகின்றார்? எதற்காக ஓடுகின்றார்? மனிதன் எங்கு ஓடுகின்றான் ஓடுகின்றான்? ஆடுகளைப் போல் ஓடுகின்றான் எங்கு எதற்காக ஓடுகின்றான்?
அடியவர்கள்:- ( காசு சம்பாதிக்க ஓடுகின்றான் )
போகர் சித்தர்:- இதைத்தன் அறிய அறிய, அறிவு.
சுவடி ஓதும் மைந்தன்:- இதைத்தன் நீங்க அறிஞ்சுக்கினீங்கன்னா என்ன ஆகும் ? அறிவு அடைஞ்சிரும்ன்றாரு வந்து… அறிவு
அடியவர் 7:- எதுக்கு ஓடுறாங்க தெரிஞ்சுக்கிட்டா அறிவு வளர்ந்துடுத்துன்னு அர்த்தம்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஆடுகள் போல் ஓடுகின்றான் எதற்காக?
போகர் சித்தர்:- அனைத்தும் எதை எதற்காக? அதாவது இதைத்தன் அறிய அதாவது மேய்ந்து வயிற்றை நிரப்பிக் கொள்ள.
அதுபோலத்தான் உன் மனமகிழ்ச்சிக்காக ஓடுகின்றீர்கள். அவ்வளவுதான் கடைசியில் வெடித்து விடுகின்றது. அவ்வளவுதான்.
இதைத்தன் அறிய எவ்வாறு ஆடுகள் இதைத்தன் அறிய இவைத்தன் அறிய. அதுவும் கூட போதும் என்று உறங்கி விடுகின்றது. ஆனால் மனிதனோ?
ஒரு சிறுவன்:- ( இதனை கேட்டு சிரிப்புகள்…….)
சுவடி ஓதும் மைந்தன்:- என்னப்பா சிரிக்கிர…. உனக்கு என்ன தெரிஞ்சுச்சு? உனக்கு புரிஞ்சிருச்சு. ஆடு கூட போதும்னு…. ஆடு கூட வந்து சாப்பிட்டு…. எப்பா போதும்டாப்பா… நிம்மதியா பத்துக்குது. ஆனால் மனிதன்?
அடியவர்கள்:- ( ஓடிக்கொண்டே இருக்கின்றான், சேர்த்து வைக்கணும்…)
===========================
# எப்போது கர்ம வினைகள் சேருகின்றது?
===========================
போகர் சித்தர்:- எப்பொழுது ஓடிக்கொண்டே இருக்கின்றீர்களோ…..
அப்பொழுது இன்னும் பல வகைகளில் கூட வந்து கொண்டே இருக்கும் சில வினைகள்.
ஓடுவதற்கு தயாரா? அல்லது நின்று விடுவதற்கு தயாரா ?
எப்படி நிற்பது? எப்படி ஓடுவது?
சுவடி ஓதும் மைந்தன்:- எப்படி நிற்பது? எப்படி ஓடுவது ? சொல்லுங்க ஐயா ? எனக்கும் தெரியாதுப்பா. நீங்க சொன்னாதான் உண்டு.
ஒரு அடியவர்:- 40 50 வருஷம் வரைக்கும் ஓடணும்….
போகர் சித்தர்:- அப்பா உன் கருத்துக்கே வருகின்றேன். ஓடி ஓடி பின் உடம்பு அனைத்தும் தேய்ந்து விடுகின்றது. இதனால் உடம்பில் வலி வருகின்றது. இன்னும் நோய்கள் வந்து விடுகின்றது இதற்கு யார் காரணம்?
அடியவர் 7:- அவர் என்ன சொல்றாரு… நீங்க தெம்பா இருக்கிற போது இறைவனை நினைக்கிறது எல்லாம் செய்யறது கிடையாது. அப்படித்தான் இதெல்லாம் வந்து… வேணுங்கிற காசு பணம் எல்லாம் அதுக்கு தானே ஓடிறீங்க… எதுக்காக ஓடுறீங்க? இறைவனை பற்றி சிந்திப்பீங்களா வந்து? அனால் வயசான காலத்தில் , இறைவா இறைவான்னா எப்படி கொடுப்பாருன்னு கேக்குறாரு? நிற்க கூட முடியாது என்று சொல்லறார்.
===========================
# பாலாம்பிகை…..
===========================
ஒரு அடியவர்:- சின்ன பொண்ணு வந்திருக்காங்க…
ஒரு குழந்தையின் வருகை:- ( இவ் நேரத்தில்)
சுவடி ஓதும் மைந்தன்:- குட்டி… இங்க போய் உட்காரு…
அடியவர்கள்:- பாலாம்பிகையாக வாம்மா.
ஒரு குழந்தையின் வருகை:- (பாலாம்பிகை போல் உணர்ந்து , அவ் குழந்தையை அனைவரும் அமர வைத்தார்கள்)
அடியவர்கள்:- குட்டி… இங்க போய் உட்காரு…
===========================
# ஏன் துன்பங்கள் வருகின்றது?
===========================
சுவடி ஓதும் மைந்தன்:- ஓடிக்கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்? பொருளுக்காக ஓடுவது.. ஆசைக்காக ஓடுவது.
சுவடி ஓதும் மைந்தன்:- நிற்பது என்றால் என்ன?
சுவடி ஓதும் மைந்தன்:- எப்படி இறைவன்? யார் இறைவன்? என்னடா இறைவனை வணங்க வேண்டும்? அதுதான் நிற்பது. ஐயா புரியுதுங்களா?
ஐயா அப்ப நிற்கிறீங்களா ஓடுறீங்களா? நீங்க என்ன சொல்றீங்க? எல்லாரும் ஓடி இருக்கிறேன்றீங்க… ஓடுங்க யாருக்கு வலிக்குது? ஐயா உங்களுக்கு தான் வலிக்கு. கால் தேய் போகுது முட்டி தேய் போகுது உடம்புல வலி போகுது. நிற்பது…. இறைவனை நினைப்பது
போகர் சித்தர்:- அதனால்தான் நீங்கள் ஓடிக்கொண்டே இருந்தால்….. அதாவது ஆட்டின் கயிற்றை அதாவது கயிறு பின் நிச்சயம் பின் அதாவது பின் எவை என்று அறிய போட்டிருப்பான்.
அதை இழுப்பது அதேபோலத்தான்…. நீங்கள் ஓடிக்கொண்டும் நேரத்தில்…. எல்லாம் இறைவன் பின் ஒரு கயிற்றை போட்டு நிறுத்தி வைப்பான். அதுதான் சில துன்பங்கள் அங்குதான்.
===========================
உவமை (ஆடும் மேய்ப்பனும்): ஆடு தன் இஷ்டத்திற்கு ஓடும்போது, மேய்ப்பன் கயிறு போட்டு இழுத்து "நில்லு" என்று நிறுத்துவது போல, இறைவனும் நம் வாழ்க்கையில் செயல்படுகிறார்.
துன்பத்தின் நோக்கம்: நாம் நம் இஷ்டத்திற்கு வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கும்போது, இறைவன் துன்பம் என்ற கயிற்றைப் போட்டு நம்மை நிறுத்துகிறார் (பிரேக் போடுகிறார்).
உண்மையான உணர்வு: அப்படித் துன்பம் வந்து நாம் நிற்கும்போதுதான், "நாம் ஏன் இங்கு இருக்கிறோம்?" என்று சிந்திக்கிறோம்; அப்போதுதான் இறைவனைப் பற்றிய நினைப்பும் நமக்கு வருகிறது.
===========================
போகர் சித்தர்:- இதைத்தன் அறிந்தவனே மனிதன். இதை அறியாதவன்?
சுவடி ஓதும் மைந்தன்:- இதெல்லாம் உண்மை நிலை எல்லாம் தெரிஞ்சுக்கினாதான் அவன் மனிதன் என்றார். இல்லையென்றால்?
போகர் சித்தர்:- அவன் பிணம்.
சுவடி ஓதும் மைந்தன்:- உண்மை நிலையை அறிந்து கொண்டவன்… இறைவன் யார்? நீ யார்? நீ எதற்காக வந்தாய்? இவையெல்லாம் அறிந்து கொண்டவன் யாரு?
அடியவர் 3:- மனிதன்
சுவடி ஓதும் மைந்தன்:- மனிதன் இவையெல்லாம் அறிந்து கொள்ளாதவன்?
அடியவர் 3:- பிணம்
போகர் சித்தர்:- பிணத்திற்கு இறைவன் என்ன செய்தாலும் பிரயோஜனம் இல்லை.
(இங்கு தர்மம் செய்யவில்லை என்றல் - பிணம் )
===========================
# இப்போது அதே பிணத்தின் மறு அர்த்தத்தில் வாக்கு …
===========================
போகர் சித்தர்:- அப்பொழுது மனிதனுக்கு நன்மை செய்ய வேண்டுமா இறைவன்? பிணத்திற்கு நன்மை செய்ய வேண்டுமா?
அடியவர்கள்:- ( மனிதனுக்கு )
போகர் சித்தர்:- எதை, யான் இல்லை என்று சொல்கின்றேன் இங்கு.
………
போகர் சித்தர்:- இப்படியும் வைத்துக்கொள்ளலாம்.
பிணம் என்பது அமைதியாக இறைவனை நாடுவது.
அதாவது அமைதியாக இருப்பது.
அனைத்தும் இறைவன் கடமையே என்று பிணம் போல் இருந்துவிட்டால், இறைவன் அழகாக பின் அனைத்தும் கொடுத்து விடுவான்.
பிணத்திற்கு மட்டும்தான் கொடுப்பான் இறைவன்.
மனிதனுக்கு கொடுக்க மாட்டான் போதுமா?
சுவடி ஓதும் மைந்தன்:- மனிதன் தான் ஓடிக்கிட்டே இருக்கான். மனிதன் உயிர் இருந்தா என்ன பண்ணுவான் (பணத்துக்காக, ஆசைக்காக) ஓடிக்கிட்டே இருக்கான். அதனால நீங்க பிணம் போல் ஆகிடனுமாம். மனிதன் என்பவன் என்ன பண்ணனும்? எதுவும் வேண்டாம். நீ இறைவன் என்ன கொடுத்தாலும்… பிணம் போல் இருக்க வேண்டும். பிணம் என்ன ஆகுது? ஊசில குத்துனாலும் என்ன ஆகுது? தூக்கி போட்டாலும் என்ன ஆகுது? எரிய வச்சா என்ன ஆகுது? அப்ப என்ன ஆனாலும் நீங்க அமைதியா இருந்துட்டீங்கன்னா…. இறைவன் என்ன பண்ணுவாரு?
நீங்கள் என்ன பண்ணனும்? அமைதியா இருக்கணும். எது நடந்தாலும் அமைதியா இருக்கணும்.
எது நடந்தாலும் அமைதியா இருந்துட்டோம்னா அங்க யாருக்கு வேலை? பணியாளருக்கு வேலை. இல்லையென்றால் நீங்க என்ன பண்ணனும் நீங்க ஓடி ஓடி எல்லாம் தேடிக்கும் அவ்வளவுதான் நீங்க ஓடினே இருந்தீங்கன்னா என்ன ஆகும்? கை பிடுங்கிடும். காலு பிடுங்கிடும். காது பிடுங்கிடும். கண்ணு போயிடும். பல்லு போயிடும். காலு போயிடும். எல்லாம் போயிடும். எது நடந்தாலும் அமைதி.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் , புரட்டாசி மாதம், 16/10/2026 அன்று அன்புடன் போகர் சித்தர் - அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கு சென்னையில் உரைத்த வாக்குகள் தொடரும் …)
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.














No comments:
Post a Comment