அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
முதலில் அனைவருக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். ஆம். குருவருளினால் மகாளயபட்ச இறைப்பணியானது 11.09.2022 முதல் தொடங்கி 26.09.2022 வரை குறைந்தது 18 அன்பர்களுக்கு இனிப்புடன் கூடிய அன்னசேவையுடன் நடைபெற்றது. இத்துடன் கோமாதாக்களுக்கு வாழைப்பழங்களை இந்த நாட்களில் நம் தளம் சார்பில் கொடுக்க பணிக்கப்பட்டோம். இந்த சேவையில் அன்பர்கள் பலர் தங்களது பொருளை வழங்கினார்கள். ஒரு நாள் அண்ணா சேவை என்றால் நாம் சமாளிக்கலாம். ஆனால் 16 நாட்கள் தொடர்ந்து அன்னசேவை என்றால் அது அன்பர்களின் பொருளுதவியினாலும், குருவின் அருளாலும் தான் நடைபெற்றது.
மேலும் மகாளய அமாவாசை சேவையாக மதுரை இறையருள் மன்றம், சதுரகிரி மற்றும் திருவள்ளூர் ஆதி சிவன் அமைப்புகளுக்கும் நம்மால் இயன்ற சிறு தொகையை கொடுத்தோம். இவை அனைத்தும் குருவின் அருளாலே தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்றைய பதிவில் அன்னதானம் போன்ற அறப்பணி செய்வது பற்றி சிறிது சிந்திப்போம்.
கொடுப்பதற்கான பொருள், கொடுக்கும் மனம், தர்மம் கொடுப்பதற்கான வாய்ப்பு என இவை மூன்றும் இருந்தால் தான் தர்மம் செய்ய முடியும். இவை மூன்றையும் ஏற்படுத்திக் கொடுப்பவர் இறைவனே ஆவார்.இப்போது நன்கு சிந்தித்து பாருங்கள். மகாளயபட்ச இறைப்பணி தொடர்ந்து 16 நாட்கள் நடைபெற்றுள்ளது என்றால் அது அந்த இறையின் செயல் தானே. இப்படி மகாளய பட்ச இறைப்பணி நம் தளம் சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக குருவருளால் செய்து வருகின்றோம். இதற்கான எண்ணத்தை நமக்கு உணர்த்திய நம் குருவின் தாள் என்றும் பணிகின்றோம். 2019 ஆம் ஆண்டு முதல் மகாளயபட்ச இறைப்பணி நம் தளம் சார்பில் நடைபெற்று வருகின்றது.
2019 ஆம் ஆண்டில் திருஅண்ணாமலையில் மகாளயபட்ச இறைப்பணி சேவை தொடங்கி , பின்னர் கூடுவாஞ்சேரியிலும் 2019 & 2020 ஆம் ஆண்டில் தொடர்ந்தது. 2021 & 2022 ஆம் ஆண்டில் சின்னாளபட்டியில் மகாளயபட்ச இறைப்பணி நடைபெற்றுள்ளது என்றால் குருவின் கருணைக்கு எல்லை எது ! சில இந்த ஆண்டில் நடைபெற்ற சேவைகளை அடுத்தப் பதிவில் காண்போம். கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற சேவையின் துளிகளை இங்கே அறியத் தருகின்றோம்.
மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 14.09.2019 முதல் 28.09.2019 வரை
1ம் நாள் – 14.09.2019 - பிரதமை
திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையில் சுமார் 50 பேருக்கு அன்னசேவை செய்தோம்.
2ம் நாள் – 15.09.2019 - துவிதியை
மருதேரி பிருகு அருள்குடிலில் பைரவரர்களுக்கு சுமார் 20 பாக்கெட் பிஸ்கட் கொடுத்தோம்.
3ம் நாள் – 16.09.2019 - திரிதியை
கூடுவாஞ்சேரி சுற்றியுள்ள பகுதியில் சுமார் 10 பேருக்கு இன்று காலை உணவு கொடுத்தோம்.
மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 02.09.2020 முதல் 17.09.2020 வரை
இம்மாத வழக்கமான சேவைகளோடு மகாளய பட்ச சேவைகளும்
நம் தளம் சார்பில் குருவருளால் செய்ய உள்ளோம். நித்தம் 5 அன்பர்களுக்கு
உணவு கொடுக்க உள்ளோம், மேலும் பசுக்களுக்கு உணவு, போர்வை தானம், குடை
தானம், வஸ்திர தானம், தீப எண்ணெய் தானம் செய்ய உள்ளோம்,வாய்ப்புள்ள
அன்பர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்யும் படி வேண்டுகின்றோம்.
நம்
அன்னசேவை பணிக்காக இம்மாதம் திருவோணத்தில் சமையல் பாத்திரங்கள் நேற்று
வாங்கி உள்ளோம். போர்வை தானம், குடை தானம், வஸ்திர தானம் செய்வதற்கு நாம்
ஆயத்தம் பெற்று விட்டோம். இதனை பற்றி குருவிடம் தெரிவித்த போது, நமக்கு
சிறப்பாக ஆசி வழங்கி உள்ளார்கள்.
02.09.2020 - 1 ஆம் நாள் மகாளய பட்ச சேவை
தக்காளி சாதம், கேரட், முட்டைக்கோஸ் பொரியல்
03.09.2020 - 2 ஆம் நாள் மகாளய பட்ச சேவை
பசுவிற்கு அகத்தி கீரையும், வாழைப்பழமும்
04.09.2020 - 3 ஆம்
நாள் மகாளய பட்ச சேவை
12 அன்பர்களுக்கு பிசிபேலாபாத் இன்று மதியம் வழங்கினோம்.
05.09.2020- 4 ஆம் நாள் மகாளய பட்ச சேவை
1. இன்றைய மகாளயபட்ச அன்னசேவை கூடுவாஞ்சேரி சுற்றியுள்ள பகுதியில் 21 அன்பர்களுக்கு காலை உணவாக குருவருளால் வழங்கினோம்.
2.
அடுத்து நென்மேலி ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் தரிசனம் பெற்றோம். இங்கு
பித்ரு பூஜை, சிரார்த்தம் பொது சங்கல்பம் ஏற்கவில்லை. விரைவில் தனியாக இது
பற்றிய செய்தி தருகின்றோம்.
3.
அடுத்து செங்கல்பட்டு அகத்தியர் ஞான கோட்டத்தில் ஸ்ரீ அகத்திய பெருமான்
தரிசனம் பெற்று, அடுத்த ஞாயிற்றுக் கிழமை அன்னசேவைக்கு நம் தளம் சார்பில்
ரூ.2000 /- கொடுத்துள்ளோம்.
06.09.2020 - 5 ஆம் நாள் மகாளய பட்ச சேவை
1. இன்றைய மகாளயபட்ச அன்னசேவை கூடுவாஞ்சேரி சுற்றியுள்ள பகுதியில் 12 அன்பர்களுக்கு காலை உணவாக குருவருளால் வழங்கினோம்.
2. அடுத்து பால்காரர் ஒருவருக்கு 50 கிலோ மாட்டுத் தீவனம் குருவருளால் வழங்கினோம்
07.09.2020 - 6 ஆம் நாள் மகாளய பட்ச சேவை
இன்றைய
மகாளய பட்ச நித்திய அன்னசேவை 10 அன்பர்களுக்கு காலை உணவாக 4 இட்லி,
சாம்பார், தேங்காய் சட்னி என வழங்கினோம்.மேலும் 3 அன்பர்களுக்கு குடை தானம்
குருவருளால் செய்தோம். இதில் ஒருவர் குப்பை பொறுக்குவதாக கூறி, நம்மிடம்
உணவும், குடையும் பெற்றார். இரண்டாவதாக இஸ்திரி போடும் அன்பருக்கு குடை
மட்டும் வழங்கினோம். அவர் தம் கடைக்கு பெரிய அளவில் குடை கிடைத்தால் நன்றாக
இருக்கும் என்று கூறினார். நாமும் வாங்கி தருவதாக கூறியுள்ளோம். மூன்றாவது
செருப்பு தைக்கும் அன்பர் ஒருவருக்கு வழங்கினோம்.அவர் நமக்கு நன்றி
தெரிவித்து, அப்போதைய வெயிலில் குடை பிடிக்க ஆரம்பித்து விட்டார்.
08.09.2020 - 7ஆம் நாள் மகாளய பட்ச சேவை
இன்றைய மகாளய பட்ச நித்திய அன்னசேவை 11 அன்பர்களுக்கு காலை உணவாக 2 தோசை, 1 வடைகறி என வழங்கினோம்.
09.09.2020 - 8 ஆம் நாள் மகாளய பட்ச சேவை
இன்றைய மகாளய பட்ச நித்திய அன்னசேவை 11 அன்பர்களுக்கு மதிய உணவாக தயிர் சாதம், ஊறுகாய் என வழங்கினோம்.
இன்று காலையில் கோமாதாக்களுக்கு அகத்திக்கீரையும், வாழைப்பழங்களும் கொடுத்தோம்
10.09.2020 - 9 ஆம் நாள் மகாளய பட்ச சேவை
இன்றைய மகாளய பட்ச நித்திய அன்னசேவை 12 அன்பர்களுக்கு காலை உணவாக புளியோதரை சாதம், உருளைக்கிழங்கு சிப்ஸ் என வழங்கினோம்.
மாடம்பாக்கம்
ஆதனூரில் உள்ள முதியோர் இல்லத்திற்கு தேவைப்படும் பொருள்கள் கேட்டு
உள்ளோம். விரைவில் நம் தளம் சார்பில் அந்த பொருள்கள் வாங்கி அங்கே கொடுக்க
உள்ளோம்
11.09.2020 - 10 ஆம் நாள் மகாளய பட்ச சேவை
இன்றைய மகாளய பட்ச நித்திய அன்னசேவை 20 அன்பர்களுக்கு 4 இட்லி,சாம்பார், கேசரி
என
வழங்கினோம்.இவை நேற்று வல்லக்கோட்டை முருகன் கோவில், காஞ்சி காமாட்சி
அம்மன் கோவில், காஞ்சி ஏகாம்பரஸ்வரர் கோவிலில் குருவருளால் வழங்கப்பட்டது.
மேலும்
கிளார் ஶ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் தீப எண்ணெய் தானமாக இலுப்பெண்ணெய் டின்
ஒன்றும், பூசைப் பொருட்களாக வஸ்திரம், திருநீறு,மஞ்சள்,பன்னீர், அபிஷேகப்
பொடி என வழங்கினோம். நம் குழு அன்பர்கள் அனைவருக்கும் பிரார்த்தனை செய்தோம்
இதே
போன்று பூசைப் பொருட்கள் தூசி அபிமுக்தீஸ்வரர் ஆலயத்தில் நேற்று
வழங்கினோம். நேற்று அங்கே நடைபெற்ற ஶ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கல்யாணத்தில்
பங்கு பெற்று ஆசி பெற்றோம். நாம் கொடுத்த வஸ்திரத்தை திருக்கல்யாண
தம்பதியினர் கிரீடமாக அணிந்ததை கண்டு மகிழ்ச்சியுற்றோம்.
12.09.2020 - 11 ஆம் நாள் மகாளய பட்ச சேவை
இன்றைய
மகாளய பட்ச நித்திய அன்னசேவை 10 அன்பர்களுக்கு 4 இட்லி, சாம்பார் என
கூடுவாஞ்சேரி பகுதியில் துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங்கினோம்.மேலும்
இன்றைய சேவையில் பசுவிற்கு வாழைப்பழமும், அகத்திக் கீரையும் கொடுத்தோம்.
13.09.2020 - 12 ஆம் நாள் மகாளய பட்ச சேவை
இன்றைய
மகாளய பட்ச நித்திய அன்னசேவை 10 அன்பர்களுக்கு 4 இட்லி, சாம்பார் என
கூடுவாஞ்சேரி பகுதியில் அன்பர்களுக்கு வழங்கினோம்.மேலும் செங்கல்பட்டு
ஸ்ரீ அகத்தியர் ஞானக் கோட்டம் சென்று குருநாதரை வணங்கி, அங்கே ஒரு
குடையும், ஒரு போர்வையும் நம் தளம் சார்பில் அன்பருக்கு கொடுக்க
கூறியுள்ளோம்.
மேலும்
இன்றைய செங்கல்பட்டு ஸ்ரீ அகத்தியர் ஞானக் கோட்டத்தின் அன்னதான சேவையில்
நம் தளம் சார்பில் ஏற்கனவே சிறு தொகை கொடுத்து இருந்தோம்.
2021 ஆம் ஆண்டு மகாளயபட்ச இறைப்பணி மற்றும் தரிசனப் பதிவை அடுத்து காண்போம். இனி அன்னசேவை பற்றி சில கருத்துப் படங்களை தங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
அன்னதானம் செய்தால் ஆனந்தம் கிடைக்கும் என்பது உறுதி. இங்கே நாம் கொடுத்துப் பெறுகின்றோம். கொடுத்தால் தானே பெற முடியும். இது தான் தர்மத்தின் நியதி ஆகும். எனவே உங்களால் முடிந்த அளவில் அன்னசேவை, தர்மம், அர்ப்பணிகளில் ஈடுபட்டு , தினமும் ஒரு உயிருக்காவது உணவளித்து வாழ முயற்சி செய்வோமாக !
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் அடுத்த பதிவில் இன்னும் பேசுவோம்.