"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, December 4, 2022

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருள் முன்னின்று நம்மை நடத்திட, இம்மாத வழக்கமான நம் தளத்தின் சேவைகள் முழுமை பெற்று வருகின்றது. இவை அனைத்தும் நீங்கள் கொடுக்கும் அருளுதவி மற்றும் பொருளுதவியால் மட்டுமே சாத்தியமாகி  வருகின்றது. இம்மாதம் கார்த்திகை தீபம் என்பதால் திருஅண்ணாமலை சேவையில் நம் பங்கு சற்று அதிகமாக குருவருளால் செய்துள்ளோம். திருஅண்ணாமலையில் 4 அன்பர்களின் மூலம் அன்னசேவையிலும், வழக்கமான 1 டின் தீப எண்ணெய் காணிக்கையுடன் மேலும் பல கோயில்களுக்கு தீப எண்ணெய் 1 லி அளவில் நாளை கொடுக்க உள்ளோம். இங்கு நாம் எதுவும் திட்டமிட்டு செய்வது இல்லை. அனைத்தும் சிவப்பரம்பொருளின் திட்டத்துடன் நடைபெற்று வருகின்றது கண்கூடாகத் தெரிகின்றது.

ஆங்கில மாதக் கணக்கில் பார்க்கும் போது புதிய மாதமாக டிசம்பர் மாத சேவைகளை நம் தளம் சார்பில் குருவருளால் கொடுக்க பணிக்கப்பட்டுள்ளோம். இம்மாத அறப்பணிகளை தங்கள் பார்வைக்கு இங்கே சமர்ப்பிக்கின்றோம்.

1. தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் 

2. எத்திராஜ் சுவாமிகள் அன்னசேவை 

3. குன்றத்தூர் கோயில் - மாத காணிக்கை 

4. எண்ணெய் - 1 டின் உபயம் 

5. வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு அன்னசேவை 

6. திருச்செந்தூர் முருகப் பெருமான் ஆயில்யம் சந்தனக்காப்பு 

7. கலிக்கம்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் மலர் சேவை 

8. ஸ்ரீ சிவகுரு மடம் சிறு காணிக்கை 

இவை மட்டுமின்றி அவ்வபோது நமக்கு கிடைக்கும் செய்திக்கேற்ப கல்வி உதவி போன்றவை குருவருளால் செய்து வருகின்றோம்.இவ்வாறு நம் தளம் சார்பில் குருவருளால் அறப்பணிகளை சிரமேற்கொண்டு செய்து வருகின்றோம். 

இனி அண்ணாமலையானின் தரிசனம் காண உள்ளோம்.

திருஅண்ணாமலை என்றாலே இந்தப் பாடல் தான் அதிகம்  நம் நினைவிற்கு வரும். அந்த பாடலையும் இங்கே பதிப்பிக்கின்றோம்.

ஐந்தான முகம் எதிரில் அருள் பொழியுதே...
அனலான மலை காண ...மனம் குளிருதே...

சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...

புவனங்கள் ஆளும் அண்ணாமலையே...
புவனங்கள் ஆளும் அண்ணாமலையே...
எனது விழிகளில் காணும் பொழுதிலே...மாறிடுதே..மனம் ஊறிடுதே...

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்தோனே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...

யுகம் நான்கு தாண்டியே...முகம் வேறு காட்டியே...
ஜெகம் யாவும் ஆள்கின்ற...அருணாச்சலா...
யுகம் நான்கு தாண்டியே...முகம் வேறு காட்டியே...
ஜெகம் யாவும் ஆள்கின்ற...அருணாச்சலா...
சத்தியம் நீதான்...சகலமும் நீதான்...
நித்தியம் என்னில்... நிலைப்பவன் நீதான்...
அருணாச்சலா...உனை நாடினேன்...
அருணாச்சலா...உனை நாடினேன்...
சிவ லீலை செய்யாமல்..சிறுஏனை ஆட்கொள்ள...
சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா...
சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா...

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்தோனே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...

முடி மீது தீபமாய்...மடி மீது ஜோதியாய்...
அடிவாரம் வெம்மையாய்... உனை  காண்கிறேன்...
முடி மீது தீபமாய்...மடி மீது ஜோதியாய்...
அடிவாரம் வெம்மையாய்... உனை  காண்கிறேன்...
தீயெனும் லிங்கம்...ஜோதியில் தங்கும்...
பாய்ந்திடும் சுடராய்...வான்வெளி பொங்கும்...

அருணாச்சலா...உன் கோலமே...
அருணாச்சலா...உன் கோலமே...
மனம் காண வர வேண்டும்...தினந்தோறும் வரம் வேண்டும்...
மலையான நாதனே அருள்வாயப்பா...
மலையான நாதனே அருள்வாயப்பா...

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்தோனே...

சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...

புவனங்கள் ஆளும் அண்ணாமலையே...
புவனங்கள் ஆளும் அண்ணாமலையே...
எனது விழிகளில் காணும் பொழுதிலே...மாறிடுதே..மனம் ஊறிடுதே...

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்தோனே...

பேரின்பக் களிப்பில் நம்மை சிவம் ஆட்படுத்துவதை இந்த பாடல் உணர்த்துகின்றது. ஊனினை உருக்கும் இந்த பாடல், உள்ளொளி பெருக்குவதையும் நம்மால் உணர முடிகின்றது. இனி நாம் திருஅண்ணாமலையாரின் அருள் காட்சிகளை இங்கே காண உள்ளோம்.

உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே 

- திருஞானசம்பந்தர்

என்று ஆடிப் பாடி திருஅண்ணாமலையாரைத் தொழுது நம் அன்பில் கலக்க செய்வோமாக! 

அண்ணாமலையானுக்கு அரோகரா!
அண்ணாமலையானுக்கு அரோகரா!!
அண்ணாமலையானுக்கு அரோகரா!!!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்  - https://tut-temples.blogspot.com/2021/11/blog-post_19.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! அரோகரா!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_27.html

தீப மங்கள ஜோதி நமோ நம... - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_0.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(5) - https://tut-temples.blogspot.com/2019/12/5.html

தெய்வத்தின் குரல் வழியே கார்த்திகை தீபம் (4) - https://tut-temples.blogspot.com/2019/12/4.html

தீபங்கள் பேசும் - கார்த்திகை தீப தொடர்பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/12/3.html

மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2) - https://tut-temples.blogspot.com/2019/12/2.html

கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1) - https://tut-temples.blogspot.com/2019/12/1.html

No comments:

Post a Comment