இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
22/1/2026 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு.
தேதி : 22.1.2026
வாக்குரைத்த ஸ்தலம்; ஓதி மலை ஓதியப்பர் சன்னதி.
Google Map link: https://maps.app.goo.gl/6cybZiLaoT4WBFYD9
இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
=========================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
=======================================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!
அப்பனே, அனைவருக்குமே ஆசிகள். அப்பனே.
=========================
# ஸ்ரீ ரங்கநாதர் சேவை
=========================
ஒரு அடியவர்:- ரங்கநாதர் சேவை செய்வதை குறித்து குருநாதரிடம் கேட்டதற்கு
குருநாதர்:- அப்பனே நிச்சயம் தன்னில் கூட. நீ விரும்பினால் நடக்குமா??? என்ன?
அப்பனே, அவனே (ரங்கநாதர்) விரும்ப வேண்டும். அப்பனே,
நிச்சயம் தன்னில் கவலை விடு என்பேன். அப்பனே,
பின் இவனையே!!!.....
(ஓதிமலை முருகனையே),
பின் அதாவது அனைத்தும் ஒன்றுதான் என்பேன். அப்பனே,
(அதாவது ரங்கநாதரும் முருகனும் ஒன்றுதான் இங்கேயும் சேவை செய்யலாம் என்று குருநாதர் வாக்கில் உணர்த்துகின்றார்)
குருநாதர்:- அப்பனே, எதை என்று கூற அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். அப்பனே, கவலை விடுங்கள். அப்பனே, முதலில் முருகனை நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள்.
முருகன் முதலிலே ஆசிகள் கொடுத்துவிட்டான் என்பேன். அப்பனே,
அனைவருக்குமே ஆசிகள், ஆசிகளப்பா!!, மீண்டும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின், சந்திப்போம். எவை என்று அறிய அறிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. மீண்டும் பின் வாக்குகள் உங்களுக்கு காத்துக் கொண்டிருக்க. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அனைவரும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
எவை என்று புரிய அப்பனே, தைப்பூசத்தன்று.
அப்பனே, இங்கு யார் யார் கேட்டுக்கொண்டிருக்கின்றார்களோ? அனைவருமே,...
அப்பனே, தைப்பூசத்தன்று. அப்ப, நிச்சயம் பின் முருகனுக்கு, அப்பனே, பால் குடம் எடுத்து வாருங்கள். அப்பனே,
இவை செய்திட்டு மீண்டும் கேட்டால், யான் சொல்கின்றேன். அப்பனே,
ஆசிகள்!! ஆசிகள்!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

.jpg)
No comments:
Post a Comment