அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் இங்கே உங்களை இன்றைய பதிவில் சந்திக்கின்றோம். இங்கே நாம் சந்திப்பதில் தாமதம் இருக்கலாம். ஆனால் நம் தளத்தின் அறப்பணிகளில் தாமதம் இருக்கவே இருக்காது. வழக்கம் போல் இம்மாத அறப்பணிகள் மிக சிறப்பாக நம் தளம் சார்பில் குருவருளால் செய்துள்ளோம். இத்துடன் அந்த நாள் இந்த வருடம் கோடகநல்லூர் வழிபாடு மிக சிறப்பாக நடைபெற்றது. குருவருளால் நாமும் நேரில் கலந்து கொண்டு அகத்திய சொந்தங்களை சந்தித்து மகிழ்ந்தோம். இதனையொட்டி நவ திருப்பதி யாத்திரையும் சென்ற சனிக்கிழமை நம் தளம் சார்பில் 11 அன்பர்களோடு சிறப்பாக மேற்கொண்டோம். இவற்றையெல்லாம் தனிப்பதிவில் விரைவில் தருகின்றோம்.
ஆங்கில
மாதக் கணக்கில் பார்க்கும் போது புதிய மாதமாக நவம்பர் மாத சேவைகளை நம்
தளம் சார்பில் குருவருளால் கொடுக்க பணிக்கப்பட்டுள்ளோம். இம்மாத அறப்பணிகளை
தங்கள் பார்வைக்கு இங்கே சமர்ப்பிக்கின்றோம்.
1. தஞ்சாவூர் சித்தர் அருட்குடில்
2. எத்திராஜ் சுவாமிகள் குரு பூஜை சேவை
3. குன்றத்தூர் கோயில் - மாத காணிக்கை
4. எண்ணெய் - 1 டின் உபயம்
5. வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு அன்னசேவை
6. திருச்செந்தூர் முருகப் பெருமான் ஆயில்யம் சந்தனக்காப்பு
7. கலிக்கம்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் மலர் சேவை
8. ஸ்ரீ சிவகுரு மடம் சிறு காணிக்கை
இவை மட்டுமின்றி அவ்வபோது நமக்கு கிடைக்கும் செய்திக்கேற்ப கல்வி உதவி போன்றவை குருவருளால் செய்து வருகின்றோம்.இவ்வாறு
நம் தளம் சார்பில் குருவருளால் அறப்பணிகளை சிரமேற்கொண்டு செய்து
வருகின்றோம்.
இனி சோற்றுக்குள் சொக்கன் தரிசனம் காணலாமா?
திருமண வரம், பிள்ளை வரம் அருளி தீரா நோய்கள் தீர்த்தருள் செய்து அருள் பாலிக்கின்ற மதுர நூக்கம்பாளயம் ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தீஸ்வர பெருமான் அன்னாபிஷேகத்தில் உற்ற தந்தையும் தாயுமான இறை.
சென்னை ஊரப்பாக்கம் எத்திராஜ் சுவாமிகள் கோயிலின் அடுத்து தரிசனம் பெற உள்ளோம்.
சென்னை பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் அன்னாபிஷேகம் பூஜையின் சில முக்கிய நிகழ்வுகளை இங்கே பகிர்கிறோம்.அனைவருடைய மனதிலும் சத் -குரு சதானந்த சுவாமிகளின் அருள் பரவட்டும்.
மதகரம் சிவன் கோயில் அன்னாபிஷேகம்
அடுத்து நத்தம் ஸ்ரீ திருவாலீஸ்வரர் அன்னாபிஷேக அலங்காரம் காண உள்ளோம்.
ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம், சிவபுரம் சிவ சிவகுருநாத சுவாமி மற்றும் அழகாம்பிகா அம்பாள் சந்நிதானத்தில் சிறப்பாக நடந்தது
அடுத்து பெரியாண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற அன்ன அபிஷேக காட்சி காண உள்ளோம்.
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், நடுமாதாங்கோவில் தெரு, தென்காசி.
கோவில் சிவபெருமான் அன்னாபிஷேக திருக்காட்சி!
சென்னை கந்தாஸ்ரமம் அன்னாபிஷேகம் அதனை தொடர்ந்து அபிஷேகம் முடிந்து விசேஷ அலங்காரம்
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அன்னாபிஷேகம் திருக்காட்சி! உதவிய அனைத்து அடியார்களின் பாதங்களை வணங்குகின்றோம்.
சென்னை சாலிகிராமம் ஸ்ரீ காவேரி விநாயகர் ஆலயம் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி அன்னாபிஷேகம் திருக்காட்சி
ஓம் கசவன மௌன ஜோதி நிர்வாண சுவாமியே நமஹ! . அன்னக்காப்பு அலங்காரத்தில் கசவனம்பட்டி ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள்
மேலும் பல சிறப்பு தரிசன அருள்நிலைகளை இங்கே பகிர உள்ளோம்.
பௌர்ணமி அன்னாபிஷேகம் தரிசனம் இங்கே பார்க்கும் போது,
என்ன தவம் செய்தாயோ! அன்னமே (அரிசி)!
எத்தனை யுகம் காத்திருந்தாயோ
அன்னமே என் தலைவனை தழுவ
அடுத்த ஜென்மம் (வேண்டாம்)
இருந்தால் என் தந்தையை தழுவிய அரிசியாக பிறக்க வேண்டும்.
இன்று அன்னபிஷேகத்தில் ஒட்டி இருந்த ஒவ்வொரு பருக்கையும் லிங்கம் தான்
என்று உணர்த்தப்பட்டோம்.
இன்னும் பல தரிசன அருள்நிலைகளை தொடருவோமா?
தேவ வன்னீஸ்வரர்,சின்ன காஞ்சிபுரம்
கொளத்தூர் ஸ்ரீ வில்வநாயகி சமதே ஸ்ரீ துளஷீஸ்வரர் ஆலய அன்னாபிஷேக தரிசனம் காண உள்ளோம்.
பழையூர் சிவன் திருத்தல அன்னாபிஷேகம் தரிசனம் காண இருக்கின்றோம்.
திருச்சி கரூர் இடையே பெருகமணி ரயில் நிலையத்திலிருந்து நங்கவரம்
செல்லும் பாதையில் இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளதே பழையூர் சிவாலயம்.
பெருகமணி என்னும் தொன்மை வாய்ந்த திருத்தலத்தில் உள்ளதே பழையூர். இறைவன்
ஸ்ரீஅகத்தீஸ்வரர். இறைவி ஸ்ரீஆனந்தவல்லி அம்மன்.
இதயத்தைக் காக்கும் துதியான
இருதய ஆகாசம் ஈரெட்டு நாளப் புடைக் கழிய மாதவத்து
வருதல் சிவபோதம் வந்துரைக்கப் பணித் தலையர் வார்த்த மாவரம்
மருதல மாமரத்துறை மந்தார மாமறையர் செருத்த வளித் துறையாம்
சுருதல மாமுனியும் இருதய ஈசத்தில் எழுந்த பதங் கண்டேன்
என்னும் பாடலை இத்தலத்தில் 16 முறை ஓதி 16 முறை இறைவனை வலம் வந்து வணங்குவதால் இதய நோயகள் அகலும்.
பழையூர் சிவத்தலத்தில் அமைந்துள்ள அகத்திய பூர்வம் என்னும் இடப்
பெயர்ச்சியால் இத்தல ஈசனின் வலது புறத்தில் ஆவுடையும் மாற்றத்தைக்
கொள்கிறது அல்லவா ? இது மிகவும் அபூர்வமான ஆவுடை புனிதமாகும்.
குருவருளால் கடந்த மூன்று ஆண்டுக்கும் மேலாக இத்திருக்கோயிலில் அன்னாபிஷேகத்திற்கு நம் தளம் சார்பில் சிறிய அளவில் பொருளுதவி செய்து வருகின்றோம்.
அடுத்து கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமரத்து ஈஸ்வரர் அன்னாபிஷேக தரிசனம் காண உள்ளோம்.
ஒரே பதிவில் எத்தனை தரிசனங்கள். மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகின்றது அல்லவா? வான் கலந்த மாணிக்கவாசகர் கூறியது இங்கே நினைவில் தோன்றுகின்றது.
ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம்
திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சோறு கண்ட இடம் சொர்க்கம் அன்றோ.
ReplyDeleteஆமாம்..உண்மை ஐயா
Deleteஎன்றும் நன்றியுடன்
ரா,ராகேஸ்
சின்னாளப்பட்டி