ராகுவும் இனிமேலும் கேதுவும் சனியும் இவ்வாறு என்பதை கூட இவர்கள் ஆட்சியில்தான் உலகம் கடந்து வருகின்றது.
இதனால் பின். இவைதன் மனம் குளிரச் செய்யவேண்டும்.
இதனை மனம் குளிரச் செய்ய பல திருத்தலங்களை நாட வேண்டும் என்பேன்.
பஞ்ச
ஸ்தலத்திற்கு (பஞ்சபூத ஸ்தலங்கள்) பின்பு பின் அடிக்கடி சென்று அங்கே
சிலசில ஜீவராசிகளுக்கும் இயலாதவர்களுக்கும் தானம் அளிக்க வேண்டும்.
அறுபடை வீடுகளுக்கும் செல்ல வேண்டும்.
இவ்வாறு
பின் இதனையும் அறிந்து அறிந்து பின் இவை என்று கூற அனுதினமும் பின்
திருவாசகத்தை இல்லம் அதில் பின் அனைத்து சிவனடியார்களையும் அழைத்து வந்து
ஓதுதல் வேண்டும்.
இவ்வாறு ஓதுதல் வேண்டும் என்பதே உறுதியானது.
இவ்வாறு பின் ஓதி வந்தால் கலிபுருஷனும் ஈசனுக்கு பயப்பட்டு பின் ஒதுங்கி விடுவான் என்பது மெய்யே.
இதனையும் அறிந்து நிச்சயமாய் தீபங்கள் யான் சொல்லியவாறே கடைப்பிடியுங்கள் போதுமானது. போதுமானது என்பேன்.
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று
வேண்டுவோம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
ஒரு சிறிய உபாயம் சொல்கின்றேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!
பல புண்ணிய நதிகளிலும் நீராட!! நீராட!!
அப்பனே அவை மட்டுமில்லாமல் புண்ணிய நதிகளிலும் கூட காயத்ரி மந்திரங்களை செப்ப!!!
அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட... கடல் தன்னிலும் கூட நிச்சயமாய் அப்பனே இவ்வாறாக செய்து கொண்டே அப்பனே
அதுமட்டுமில்லாமல்
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதிகமாக அதிகமாக அப்பனே அருகம்புல்லையும் கூட
வில்வ இலைகளையும் துளசி இலைகளையும் உட்கொண்டே வந்தால் அப்பனே... நிச்சயம்
தன்னில் கூட அப்பனே பின் அவ் சிவப்பு நிறத்தை நிச்சயம் அடியோடு நீக்கி
விடலாம் என்பேன் அப்பனே !!!!
ஆனாலும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய இவ்வாறு நீக்கிவிட்டால் அப்பனே நிச்சயம் தெளிவு பெறுமப்பா!!
நிச்சயம்
தன்னில் கூட அப்பனே அவ்வாறு தெளிவு பெற்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட
பின்... அதற்குப் பின் வருவது கருமை நிறம் என்பேன் அப்பனே... இவையும் கூட
கருமை நிறத்தை ஒழித்திட வேண்டும் என்பேன் அப்பனே...
இதற்கும் பின் தக்க இடங்கள் அப்பனே அறிந்தும் கூட...!!!
பின் பஞ்சபூத ஸ்தலங்கள்!!!!
பின் அறுபடை வீடுகள் !!!...............
.அப்பனே நிச்சயம் தன்னில் கூட
பின் அஷ்ட விநாயகர் தலங்களில் கூட!!!!
நிச்சயம் மராட்டிய மாநிலத்தில் நிச்சயம் அப்பனே தன்னில் கூட பின் அதாவது குவிகின்றது என்பேன் அப்பனே.
(மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சுற்றியுள்ள அஷ்ட விநாயகர் திருத்தலங்கள் சித்தன் அருள் பதிவு எண் 1321)
ஆனாலும் அப்பனே நிச்சயம் கருப்பை!!! கருமை நிறத்தை அப்பனே பின் நீக்கிட!!! அதை நீக்குவது தான் மிகக் கடினம் என்பேன் அப்பனே.
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று
வேண்டுவோம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 11
வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
(இவ்தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-
01.சித்தன் அருள் - 1903 - பகுதி 1
02.சித்தன் அருள் - 1905 - பகுதி 2
03.சித்தன் அருள் - 1911 - பகுதி 3
04.சித்தன் அருள் - 1914 - பகுதி 4
05.சித்தன் அருள் - 1915 - பகுதி 5
06.சித்தன் அருள் - 1916 - பகுதி 6
07.சித்தன் அருள் - 1917 - பகுதி 7
08.சித்தன் அருள் - 1918 - பகுதி 8
09.சித்தன் அருள் - 1923 - பகுதி 9
10.சித்தன் அருள் - 1931 - பகுதி 10)
அடியவர் :- ( ஒரு துன்பம் தொடர்ந்து வருவது குறித்து கேட்ட போது…)
குருநாதர் :- நிச்சயம் அதாவது சொன்னேன். எவ்வளவு கஷ்டத்திலும் நீந்திச் செல்.
அடியவர் :- குருவே ஞானம் அடைவது சாத்தியமா?
குருநாதர் :- அப்பப்பா !!! இன்னும் இதற்கு சிறந்த விளக்கங்கள் உண்டு. பொருத்திருக்க வேண்டும்.
அடியவர்கள் :- ( சில பல சுய கேள்விகளை முன்வைக்க..)
குருநாதர்:-
அப்பனே, மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. உலகம் அழிவு நிலைக்குச்
செல்கின்றது. நிச்சயம் அப்பனே அதாவது பின் அப்பொழுது கேட்டாளே, பின்
இத்தனை பேர்கள் இறந்திட்டார்களே என்று , அவளை அக்குழந்தையை எழுப்பு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா அந்த சின்னப்பெண், அந்த குழந்தையை கூப்பிடுங்க ஐயா.
ஐயா
இது ஜீவ நாடிங்க ஐயா. அகத்தியர் உத்தரவு கொடுத்தால் மட்டுமே தொடவும்
முடியும். படிக்கவும் முடியும். பாருங்க அந்தப் பெண்ணை
கூப்பிட்டுவிட்டார்.
( குருநாதர் அழைத்த
அக்குழந்தை விமான விபத்தை எப்படித் தடுக்க வேண்டும் என்று உயர்
எண்ணங்களுடன் கேள்வி கேட்டது சற்று நேரம் முன்னர். இதனை இதன் முந்தைய பகுதி
10 அங்கு படித்து அறியவும்.)
குருநாதர் :-
தாயே!!! இப்படி கேட்டிட்டாய். ஆனாலும் பின் அனைவரும் எப்படி இருந்தால்
வருங்காலத்தில் நிச்சயம் தன்னில் கூட உலகம் அழியாமல் இருக்கும் என்பதை
எடுத்துரைக்க. இதை நீ நிச்சயம் எடுத்துரைக்க வேண்டும்.
உயர் பொது நல எண்ணங்கள் உடைய குழந்தை அடியவர் :-
(இவ் குழந்தை உரைத்த வாக்கினை பின் வரும் YouTube பதிவில் சென்று அவசியம் பார்த்து தெரிந்து கொண்டு மேலும் தொடருங்கள்)
சுவடி
ஓதும் மைந்தன் :- இதுபோல் (பலர் உயிரிழந்த விமான விபத்து) நடந்துவிட்டது.
இனிமேல் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று நீங்க சொல்லுங்க
அம்மா. அந்த பக்குவநிலை…நீங்க சொல்லுங்க அம்மா.
மற்றொரு அடியவர் :- காலையில் இருந்து கேட்டீங்க இல்லையா?. குருநாதர் என்ன சொன்னாங்களோ, அதை எடுத்துச் சொல்லுங்கள்.
உயர்
பொது நல எண்ணங்கள் உடைய குழந்தை அடியவர் :- எல்லோரும் மற்றவர்களுக்கு
உதவி செய்யனும். மற்றவர்களைப் பற்றி நினைக்க வேண்டும். தான் , தான் என்று
நினைக்கக் கூடாது. எப்படி ( குருநாதர் ) சொல்ல வருகின்றார் என்றால் ,
நமக்குத் தெரிஞ்சவங்களுக்கு மட்டும் இல்லாமல், யார் என்றே
தெரியாதவங்களுக்கும் நம்ம உதவி செய்யனும் என்று அவர் சொல்கின்றார். யார்
என்றே தெரியாதவங்கள் கூட நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் நினைக்க
வேண்டும். அவங்க நம்ம எதிரியாக இருந்தாலும் பரவாயில்லை. எல்லாருமே நல்லா
இருக்கனும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் சொல்லுங்க.
உயர்
பொது நல எண்ணங்கள் உடைய குழந்தை அடியவர் :- (ராகு கிரகம் புவியை நோக்கி
வேகமாக வருவதால் , இதனைத் தடுக்க) அதுக்கான வழி , உலகமே அழியப் போகுது என்ற
நிலையில் (அகத்திய மாமுனிவர்) நான் வந்து நிற்கின்றேன். நான் வந்து உலக
மக்கள் எல்லோரையும் காப்பாற்ற try பன்றேன் என்று அவர் சொல்ல வரார்.
(
இவ்விடத்தில் அக்குழந்தை, இரும்பு போன்ற மன உறுதியுடன், ஒரு மாபெரும்
மக்கள் தலைவரைப் போல, அங்கு உள்ள அனைவருக்கும் ஓங்கி எடுத்துரைத்த
அறிவுரை).
“””””அதுக்கு வந்து நம்மளும் கன்டிப்பா அவர் கூட நிக்கனும். கன்டிப்பா வந்து நாம் அவர் சொல்ரத நாம செய்யனும்.””””
எப்படி சொல்ல வருகின்றார் என்றால்…. அவர் வந்து… நவகிரக தீபத்தை……. ( அதற்குள் கருணைக்கடல்…...)
குருநாதர்
:- தாயே!! எவை என்று கூற.. நிறுத்து!. அறிந்தும் கூட அனைவருக்கும் பின்
ஏன் இப்புத்தி வரவில்லை. இதனால் எப்பொழுது இவ் புத்தி வருகின்றதோ ,
அப்பொழுதுதான் நல்லதே நடக்கும். சொல்லிவிட்டேன்.
“”””””அப்பனே,
நிச்சயம் தன்னில் கூட , பலர் இறக்கப் போகின்றார்கள் என்பேன் அப்பனே.
நிச்சயம் அவர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?””””””
அடியவர்கள் :- (விளக்கங்கள், உரையாடல்கள்)
குருநாதர்
:- தாயே , நிச்சயம் தன்னில் கூட, உலகம் பல அழிவுகளைச் சந்திக்கப்
போகின்றது இன்னும் சில மாதங்களிலே. இதனால் யாங்கள் தடுத்து நிறுத்த
வேண்டும். இதனால் உங்கள் குறைகள் , ஒரு குறைகளே இல்லை.
இத்துடன்
(வாக்குகள்) விட்டுப் போவதில்லை. நிச்சயம் மீண்டும் உரைக்கின்றேன்.
அனைத்தும் பின் யானே நன்மைகளாகச் செய்துவிடுவேன் உங்களுக்கு. சில அதாவது
பின் இது ஒரு சிறு, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும், விரல் அளவிற்கே.
சுவடி
ஓதும் மைந்தன் :- உங்கள் குறைகள் எல்லாம் விரல் அளவுக்குத்தான் இருக்கு.
பெரிசு எல்லாம் கிடையாது. ஏன்னா, உயிரே நிறைய அழிவு வரப்போகுது. உங்கள்
விரல் அளவுக்குத்தான் குறை இருக்குது. அதை நானே தீர்த்து வைத்துவிடுவேன்
என்று சொல்ரார். சரிங்களா?
குருநாதர் :- இதனால்
உங்கள் வேலையை தொடர்ந்து செய்யுங்கள் யான் பார்த்துக் கொள்கின்றேன்.
இதனால்தான் மிக்க மிக்க யான் சொல்லியதை (கூட்டுப் பிரார்த்தனை, நவகிரக
தீபம் அனுதினமும் இல்லங்களில் ஏற்றி உலக நன்மைக்காக வழிபாடு, தான
தர்மங்கள், பல புண்ணியங்கள் இவற்றை) ஏற்று நடங்கள். நிச்சயம் அடுத்தடுத்த
வாக்குகள் வந்து கொண்டே இருக்கும்.
பல புண்ணிய
சேவை புரியும் மதுரை அடியவர் :- ( திருவாதவூர் அருகில் முக்கம்பட்டி ஏஞ்சல்
தேவகி முதியோர் இல்லம் நடத்தி சேவை செய்யும் பிரபாகரன் என்ற மற்றொரு
அடியவருக்காக கருணைக்கடலிடம் அருள் ஆசி கேட்ட போது….. )
“”””””அப்பனே பிறப்பு என்பது ஏதாவது அப்பனே உபயோகத்திற்காக இருக்க வேண்டும் அப்பனே. “””””””
அவன் என்ன செய்கின்றான் என்று அவனைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. ஓர் முறை கூறு அப்பனே?
உயர் சேவை செய்யும் அடியவர் :-
என்னுடைய
wife accident ஆகி இறந்துவிட்டாங்க. அவங்களுடைய ஞாபகாரத்தமாக 2011ல்
இருந்து முதியோர் இல்லம் நடத்தி வருகின்றோம். இதுவரைக்கும் ஆதரவே
இல்லாதவங்களை மட்டும்தான் இல்லத்தில் சேர்போம். அவங்களை வந்து ரொம்ப
கடுமையான கஷ்டத்திலதான் நடத்திக்கொண்டு இருக்கோம். இப்ப திருவாதவூர்
பக்கத்தில முதியோருக்காக ஒரு இல்லம் கட்டியிருக்கோம். அங்க வந்து இறுதிச்
சடங்கு கிட்டத்தட்ட 622 பேருக்கு இதுவரைக்கும் செஞ்சிருக்கோம். எனக்கு வயசு
43 வயசுதான். அதனால இந்த உலகத்துல நாம (போகும்போது) எதையும் கொண்டு
போறதில்லை. இருக்கிற வரைக்கும் 4 பேருக்கு உதவி செஞ்சுட்டு போகனும். இந்த
செல்போன் கூட வேண்டும்னா யாருக்காவது கொடுத்திட்டு போகனும். அதை நம்ம
உணர்ந்துட்டோம்னாலே போதும்.
_______
( அன்பு அடியவர்கள் கவனத்திற்கு :-
இவ் அடியவரின் முழுவிபரம் :-
திரு.P.பிரபாகரன்,
அறக்கட்டளை நிர்வாகி,
திருவாதவூர் அருகில் முக்கம்பட்டி ஏஞ்சல் தேவகி பிரபாகரன் பவுன்டேசன்,
Angel Devaki Prabhakara foundation, (Reg No: IV 9/2011)
வணக்கம்
அடியவர்களே, குருநாதரால் இவ்வலகிற்கு மதுரை சத்சங்கத்தில்
அறிமுகப்படுத்தப்பட்ட திரு. பிரபாகரன் அவர்களைத் தொடர்பு கொண்டு உங்களால்
இயன்ற , ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவிக் கரம் நீட்டி, உங்கள் புண்ணிய
சேவைகளைப் பலம் பெறச் செய்யுங்கள்.)
————————————————
குருநாதர்
:- எதை என்று அறிய நிச்சயம் வாழ்க்கையைப் பற்றிப் பின் தெரியாதவன்தான்
கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பான். நிச்சயம் அப்பொழுது கூட இறைவன் மீது
இவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. மீண்டும் அறிந்தும் கூட, பல வகையாக் கூட
எடுத்துரைத்து விட்டேன். யான் உங்களுக்காகச் செய்கின்றேன் என்று. ஆனாலும்
நிச்சயம் அவன் என்ன செய்கின்றான்? யாங்கள் நிச்சயம் அகத்தியப்
பெருமானே!!!!! நிச்சயம் தன்னில் கூட நீங்கள் சொல்லியதை யாங்கள் நிறைவேற்றி
வருவோம். பின்பே எங்களுக்கு வாக்குகள் தந்தால் போதும் என்று யாராவது
சொன்னார்களா என்றால், நிச்சயம் இல்லை. அதனால் மனங்கள் பேய்களாக
இருப்பவர்களுக்கு யான் எப்படி வாக்குகள் செப்புவது????
அடியவர்கள் :- ( அகத்திய மாமுனிவர் வழியில் நின்று உலகத்தைக் காக்க, போராட வேண்டும் என்று உரையாடல் பல)
குருநாதர்
:- அறிந்தும் நிச்சயம் புரிந்தும் சரியாகவே பக்கத்திலேயே உள்ளது. தேர்ந்து
எடுங்கள். அப்படி இல்லை என்றால் யான் உரைப்பேன்.
__________
(
இவ் அடியவர் கேட்ட மகத்தான ஆலயம் ராசராசசோழனின் விதியையே மாற்றி அமைத்தது
இவ்வாலயம். இதன் ரகசியங்களைத் தெரிந்து கொள்ள பின் வரும் பதிவில் படித்து
தெரிந்துகொள்ளுங்கள்.
சித்தன் அருள் - 1117 - அன்புடன் அகத்தியர் - பிரம்மபுரீஸ்வரர் ஆலய வாக்கு!
ஆலங்குடி நெடார்.கிராமம் மானாங்கோரை அஞ்சல் தஞ்சாவூர் மாவட்டம். )
——————————————
அடியவர் :- ஐயா. நமச்சிவாயம். நெடார் விநாயகர் , முருகருக்கு ஆலயம் அமைக்க விண்ணப்பம் ஐயா.
குருநாதர்
:- அப்பனே, சொல்லிவிட்டேன் அப்பனே. அனைத்து காரியங்களும்
தடைப்பட்டுத்தான் நடக்கும். ஏன் என்றால் உலகம் பேரழிவை நோக்கிச்
செல்கின்றது. மீண்டும் மீண்டும் இதைத்தான் செப்புகின்றேன்.
அப்பனே அறிந்தும் கூட அக்குழந்தையை எழுப்பு.
உயர் பொது நல எண்ணங்கள் உடைய குழந்தை அடியவர் :-
அவர்
என்ன சொல்ல வர்ரார் என்று எல்லாருக்குமே புரியுது. கரெக்டா? எல்லாருமே
வந்து உங்க மனசுக்குள்ள ஆழமா , உங்களுக்குள்ள , இந்த உலகத்துக்காக நாங்க
செயல்படுவோம்னு, எதுக்கு இன்னைக்கு நம்ம கூடுனோன்னு நல்லா யோசிங்க. அவர்
திருப்பி திருப்பி அதேதான் சொல்ரார். ஆனா நீங்க உங்க மனசுக்குள்ள ok சரி,
சரின்னு. உங்க மனசுக்குள்ள இறங்கி அவர் சொல்ல வருவதை நீங்க நினைக்கனும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் சொல்லுங்கம்மா. சொல்லுங்கம்மா. உங்களுக்கு அந்த பக்குவம் இருப்பதால்தான் உங்களை சொல்லச் சொல்ரார்.
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- அவர் பேசுகின்றார். (உங்களுக்குள் இருந்து)
——————————————
YouTube link - மனமது செம்மையானால் என ஒரு சிறுமி மூலம் மதுரை சத்சங்க ஜீவநாடி நிகழ்வு :-
உயர்
பொது நல எண்ணங்கள் உடைய குழந்தை அடியவர் :- அதுதான். நீங்க வந்து மனதார
நீங்க வந்து நினைக்கனும். எப்படி சொல்ரதுன்னா , நீங்க எப்படி உங்க
குடும்பத்தில யாருக்காவது ஏதாவது ஆகிவிட்டால், மனதார இவருக்கு உடம்பு சரி
ஆகிவிடனும்னு அப்படின்னு மனதால், என்ன சொன்னாலும் நீங்க செய்வீங்க.
கரெக்டா? அந்த மாதிரி நம்பனும் நீங்க முதல்ல. (குருநாதர் சொல்வதை) நம்பி
நீங்க வந்து அவர் என்ன சொல்லுகின்றாரோ அதைக் கடைப்பிடிக்கனும். இது
உங்களுக்காக இல்லை. மொத்த உலகத்துக்காக நம்ப வந்து (குருநாதர்) கூட
நிற்கின்றோம். அவர் கூட இந்த மொத்த உலகத்தையும் காப்பாற்ற நம்ம கூட
நிற்கின்றோம். அதனால நம்ம வந்து மனதால எல்லாமே செய்யனும். நம்ம மனதாலதான்
எல்லாமே நடக்கனும்.
குருநாதர் :- தாயே!!!
(பெண் குழந்தைகளை எப்படி அழைக்கின்றார் நம் கருணைக்கடல் என்று அறிந்து அதே போல் வணங்குக)
தாயே!!!! எதை என்றும் புரிய. இங்கு ஒருவன் இருக்கின்றானே, இவனுக்கு நல்புதியை எடுத்துரை.
( உயர் நல் பொது எண்ணங்களால் ஒரு பெண் குழந்தைத் தாயே இங்கு ஒரு குரு உபதேசம் செய்த நிகழ்வு)
சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லுங்கம்மா. என்ன வேண்டுமானாலும் சொல்லுங்க அம்மா நீங்க.
உயர் பொது நல எண்ணங்கள் உடைய குழந்தை அடியவர் :- ஐயா இவர் ரொம்ப பாலாக (குழந்தை மனம்) இருக்கிறாரு. கொஞ்சம் silentஆக இருக்கனும்.
குருநாதர்
:- அப்பனே நிச்சயம் அனைவருக்குமே ஆசிகள் உண்டு என்பேன் அப்பனே. மீண்டும்
அப்பனே, அனைவருக்குமே வாக்குகள் உண்டு அப்பனே. ஆனாலும் கால சூழ்நிலைகள்
சரியல்லையப்பா இப்பொழுது. அதனால் அப்பனே, உங்களை யான் காத்திடுவேன்.
கவலையை விடுங்கள்.
அடியவர் :- (மற்றொரு அடியவருக்காக சில கேட்ட போது)
குருநாதர் :- அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. (கால சூழ்நிலை சரியில்லாமல் இருப்பதால்) இப்பொழுது போதும் அப்பனே.
அடியவர்கள்
:- ( புத்தகங்கள், ருத்திராட்சங்கள் அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தனர்
அடியவர்கள். அதனைக் கீழ்க்கண்ட பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர், தூங்கா மதுரை மாநகரில் அருளும் மகத்தான இவ்ஆலயத்தின் முகவரி :-
Google Map : https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7
—————————————-
(
நம் குருநாதர், அகத்திய மாமுனிவர் அருளால் 22,23 June 2025 ஆம் ஆண்டு ,
மதுரை மாநகரில், திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த
அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…... )
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!